'இனி சினிமாக்களில் காதல் இருக்கக் கூடாது’ என்று ஒரு சட்டம் வந்தால், எல்லாத் தமிழ் சினிமா இயக்குநர்களும் செவ்வாய்க் கிரகத்துக்குக் குடியேறிவிடுவார்கள். இப்படி எல்லாப் படங்களிலும் வகைதொகையில்லாமல் காதல் இருந்தாலும் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்தான். கீழே உள்ள க்விஸ்ஸில் கலந்துகொண்டு உங்கள் சினிமா பொது அறிவை டெவலப் செய்துகொள்ளுங்கள்.

இவர் படத்து ஹீரோவுக்குத் தாலி என்றால் என்ன என்று தெரியாது, திருமணம் என்றால் என்ன என்று தெரியாது, அவ்வளவு ஏன்... முதலிரவு என்றால்கூட என்னவென்று தெரியாது. ஆனாலும் எதையுமே தெரியாமல் பலான மேட்டர் மட்டும் பரபரப்பாய் செய்துவிடுவார். அப்பாவி அப்பாடக்கரையே கதாபாத்திரமாகப் படைக்கும் காவிய இயக்குநர் யார்?

அ) விசு ஆ) பி.வாசு இ) ஏ.ஆர்.முருகதாஸ்.

இவர் படத்தில் ஹீரோயின் அரைகுறை ஆடையோடு இன்ட்ரோ ஆவார். ஹீரோவுடன் லவ் பற்றிக்கொண்டதும் செட் போட்டு குத்தாட்டம் போடுவார்கள். எப்படி ஹீரோயினுக்கும் அவர் டிரெஸ்ஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காதோ, அதேபோல் ஹீரோயின் கேரக்டர் எந்தக் காரணம் கொண்டும் கதைக்குச் சம்பந்தமே இருக்காது. அவர் யார்?

அ) பாரதிராஜா ஆ) கே.எஸ்.ரவிகுமார் இ) பேரரசு

இவரின் படங்களில் ஹீரோயின் கண்டிப்பாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்கள். ஹீரோவும் ஹீரோயினைத் தேடிப் போவார். ஹீரோ அல்லது ஹீரோயின் அதிரடியாகக் காதலை புரொபோஸ் செய்வார்கள். தூய தமிழில்தான் டூயட் பாடுவார்கள். தூய தமிழ் டூயட் முடிந்ததும் இங்கிலீஷ் கெட்டவார்த்தை பேசும் புனிதக் காதல் எந்த இயக்குநருடையது?

அ) ராஜீவ் மேனன் ஆ) கௌதம் வாசுதேவ் மேனன் இ) மணிரத்னம்

ஹீரோயின் குறும்புக்காரி. கடுமையான ஜலதோஷமாக இருந்தாலும் மழையிலோ, அருவியிலோ ஆடிப் பாடுவார். 'ஓடிப் போலாமா?’ போன்ற உலக வசனம் பேசுவார். ''பிடிச்சுருக்கா? பிடிச்சிருக்கு'' என்று சுருக்கமாக வசனம் பேசி நம்மைப் பைத்தியம் பிடிக்கவைப்பார்கள்.

அ)மகேந்திரன் ஆ) மணிரத்னம் இ) பாரதிராஜா

'காதல்ங்கிறது கையில் இருக்கிற பெட்டி, காயப் போட்ட ஜட்டி’னு ஆரம்பிச்சு நீட்டி முழக்கி இவர் படத்தில் காதலைப் பற்றி லெக்சர் அடிப்பார்கள். காதல் தோல்வியால் தற்கொலை எண்ணம் வருகிறதோ, இல்லையோ ஒரே ட்யூனில் படம் முழுக்கக் காதலர்கள் பாடும் பாடல்கள், அவ்வப்போது பின்னணி இசை லாலாலாக்கள் நம்மை உலக வெறுப்புக்கு உள்ளாக்கும். அந்த இயக்குநர் யார்?

அ) வசந்த் ஆ) அகத்தியன் இ) விக்ரமன்

களத்துமேட்டில்தான் இவர் படங்களில் காதல் பூக்கும். 16 வயதிலும் 60 வயதிலும் இவர் படத்தில் காதலிப்பார்கள். காதலிக்கு முள் தைத்தால், கண்டிப்பாகக் காதலி எடுக்கவே மாட்டார். அதற்கு இருக்கவே இருக்கிறதே கதாநாயகனின் உதடு. யார் அந்த இயக்குநர்?

அ) பாரதிராஜா ஆ) பாக்யராஜ் இ) பாலச்சந்தர்

இவர் படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் மலையைச் சுற்றிச் சுற்றி காதல் வளர்ப்பார்கள். மலையை விட்டு கீழே இறங்க மாட்டார்கள். சேலைதான் ஹீரோயின் காஸ்ட்யூம். அவர் யார்?

அ) பாலா ஆ) பிரபு சாலமன் இ) பாசில்

இவர் படங்களில் ஹீரோயின் பெரும்பாலுமே லூஸுத்தனமாக இருப்பார். உடனே ஹீரோ புத்திசாலித்தனமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம். மண்டை மேலே டிராக்டர் ஓட்டி அவரையும் லூஸு ஆக்கியிருப்பார்கள். காதல் கண்டிப்பாக நிறைவேறாது. யார் அந்த இயக்குநர்?

அ) வசந்த் ஆ) வசந்த பாலன் இ) பாலா

படத்தில் ஹீரோயின் பெரும்பாலும் ஹீரோவைத் திருத்துவார். ஒண்ணுக்கும் உதவாத ஹீரோ ஒபாமாவுக்கே ஒண்ணுவிட்ட சித்தப்பா பையனாக மாறுவார். 'நண்பர்களின் காதலிகள் ஜாக்கிரதை’ என்று போர்டு மாட்டும் அளவுக்குக் கதை இருக்கும். யார் அவர்?

அ) கௌதம் வாசுதேவ் மேனன் ஆ) செல்வராகவன் இ) ராஜா

ஹலோ, என்ன விடையைத் தேடுறீங்க? இதெல்லாம் தானாத் தெரிஞ்சுக்கிறது. இதுக்கெல்லாம் பதில் தெரியலைனா நீங்க தமிழ்நாட்டுல வாழ்றதில் அர்த்தமே இல்லை!

- விவேக்