ஃபேஸ்புக்கில் உள்ள வித்தியாசமான ஒரு பக்கம் 'லுங்கிப் பிரவேசம்’. இளைஞர்களே உள்ள இந்த குரூப்புக்கு ஒற்றை அஜென்டாதான். ஏதாவது ஒருநாளைத் தேர்ந்தெடுத்து, ஷாப்பிங் மால்களில் லுங்கியுடன் வலம் வருவது. ஏன் இப்படி?

பத்தாண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளில் சில மால்களில் லுங்கி அணிந்து உள்ளே வர தடை விதிக்கப்பட்டது. அடிமட்டத் தொழிலாளர்களில் துவங்கி மேலதிகாரிகள் வரை மலையாளிகளாலும் தமிழர்களாலும் நிரம்பிய அரபு நாடுகளில் இந்த அறிவிப்பு கோபத்தைக் கிளப்பியது. பின்னர் இதனை அறிந்த ஷாப்பிங் மால்களின் நிர்வாகம் 'லுங்கி அணிந்தால் யாரும் ஷூ அணிவது இல்லை. அதனாலேயே தடை விதிக்கப்பட்டது. ஷூ அணிந்து லுங்கி அணிந்து வரும் பட்சத்தில் தடை இல்லை’ என்று அறிவித்தன.

சென்னையிலும் பார்களிலும், பப்களிலும், ஷாப்பிங் மால்களிலும் லுங்கி அணிந்துவர அனுமதி இல்லை. நாகரிக அடையாளங்களாகக் காணப்படும் இதிலும் நவீனத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகக் கொந்தளிக்கின்றனர் 'லுங்கிப் பிரவேசம்’ குழுவினர். ''பெரிய ஹோட்டல்களில் உள்ளே நுழைய வேண்டுமானால், அதற்கென சில ஆடைக் கட்டுப்பாடுகள் உண்டு. டீசன்டான பேன்ட், சட்டை போட்டு இருந்தாலும் ஷூ இல்லாமல் அனுமதிக்க மாட்டார்கள். 2,000 ரூபாய் செருப்பு போட்டிருந்தாலும் அனுமதி இல்லை. அது தனியார் நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால்கூட, ஷாப்பிங்மால் போன்ற பொதுமக்கள் வந்துபோகும் இடங்களிலும் இதுபோன்ற ஆடைக் கட்டுப்பாடுகள் வருவது ஏற்க முடியாது'' என்கின்றனர் இவர்கள்.

’லுங்கிப் பிரவேசம்’ குழுவைச் சேர்ந்த கார்த்திக் மேகா கூறுகையில், ''மைக்ரோ மினி ஸ்கர்ட்டில் தொடைகள் தெரியவரும் பெண்ணையும் மினி டிரவுசரில் வரும் ஆண்களையும் அனுமதிக்கும் மால் நிர்வாகங்கள் லுங்கி அணிந்துவரும் ஒருவரைத் தடுப்பது ஏன்? அரை டிரவுசர்களை ஆயிரக்கணக்கான விலையில் விற்பதுபோல் ஒரு கைலி 2,000 ரூபாயில் விற்றார்கள் என்றால், இதுபோன்ற பொது இடங்களில் இத்தகைய தடை வராது போலும்' என்றார்.

''இதை ஒரு நவீனத் தீண்டாமை வடிவமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. பல அடுக்குகள்கொண்ட இந்த ஷாப்பிங் மால்களைக் கட்டியவர்கள் நிச்சயம் லுங்கியுடன்தான் கட்டியிருப்பார்கள். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்குள் கட்டியவனுக்கு அனுமதி இல்லை என்பது நவீனத் தீண்டாமை இல்லாமல் வேறு என்ன? இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டவுடன் தந்தை பெரியாரின் 'ஆலயப் பிரவேச போராட்டம்’தான் நினைவுக்கு வந்தது. எனவே எங்கள் குழுவிற்கும் 'லுங்கிப் பிரவேசம்’ என்று பெயரிட்டோம்'' என்கின்றனர்.

''அதெல்லாம் சரி. ஒரு தனியார் ஷாப்பிங்மாலில் போக வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளை விதிப்பது அவர்கள் உரிமைதானே, இது எப்படித் தவறாகும்?'' என்று கேட்டால் அதற்கும் பதில் வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ், ''முதலில் ஷாப்பிங்மால் என்று அவர்கள் வாங்கியுள்ள மாநகராட்சி அனுமதிப்படி அதற்குள் யார் வேண்டுமானாலும் போக உரிமையுள்ள இடம் என்றுதான் குறிப்பிடப்படும். மேலும் தற்போதைய நவீன மால்கள் அனைத்திலும் தியேட்டர்கள் உள்ளன. திரையரங்கு உள்ள இடம் அரசின் விதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான பயன்பாட்டுப் பகுதி. அங்கே யார், எப்படி வரவேண்டும் என்பதை அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். இவர்கள் வேண்டுமானால் அவரவர் வீடுகளுக்குள் வருவதற்கு ஆடைக் கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ளலாம். பொதுவான திரையரங்குகளிலோ, ஷாப்பிங்மால்களிலோ அல்ல'' என்கிறார்.

தங்கள் முகநூலில் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அன்று எந்த மாலுக்கு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுவிடுகின்றனர். ஐ.டி துறையில் இருக்கும் நபர்கள், இலக்கியத் துறை, பத்திரிகைத் துறை, மருத்துவத் துறை என்று வேறுபாடின்றி அயர்ன் செய்த சட்டையும் புத்தம்புது லுங்கியும் அணிந்து ஆஜராகிவிடுகின்றனர், இந்த 'லுங்கிப் பிரவேசம்’ குழுவினர். ஒரு சிலர் முதுகில் லேப்டாப் பேக்குகளுடனும் மால்களுக்குள் நுழைந்து லுங்கியுடன் வலம்வருகின்றனர். வழியில் காவலர்கள் தடுத்தால் எதற்காகத் தடுக்கிறார்கள் என்று பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்விதமாகக் கேட்கிறார்கள். பின்னர் அந்த மாலின் மேலாளரை வரச்சொல்லி எழுத்துப்பூர்வமாக 'லுங்கி கட்டிக்கொண்டு உள்ளே வரக் கூடாது’ என்று எழுதித் தரும்படி கேட்கிறார்கள். சென்னையில் இதுவரை எந்த ஷாப்பிங்மால் மேலாளரும் எழுதிக்கொடுக்க முன்வரவில்லையாம். இனிமேல் லுங்கி கட்டிக்கொண்டு வரலாம். ஆனால் அதை மடித்துத் தொடை தெரியுமாறு கட்ட வேண்டாம் என்று மட்டும் வேண்டுகோள் வைத்துள்ளனராம். '' இதுவே எங்களுக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றிதான்'' என்கின்றனர் லுங்கிப் பிரவேசக்காரர்கள்.

என் லுங்கி... என் உரிமை!

- செந்தில்குமார்