ஒரு தாய் தனது 12 வயது மகளை அடிக்கும் வீடியோ ஒன்று மேற்கத்திய நாடுகளில் கடும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. அதுவும் வெள்ளைக்காரர்கள், கறுப்பர்கள் என்று அணி பிரிந்து சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஏன்?

கரீபிய தீவுகளில் உள்ள நாடான டிரினிடாட் - டொபாக்கோவைச் சேர்ந்தவர் ஹெலன் பார்ட்லெட். மூன்று குழந்தைகளின் தாயான ஹெலனின் இரண்டாவது மகள் ஷெல்லி, குடும்ப வறுமை காரணமாகத் தனது பாட்டி வீட்டில் வசிக்கிறார். ஷெல்லியின் அக்கா ஃபேஸ்புக் அக்கவுன்ட் துவங்கிக் கொடுத்துள்ளார். ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்க குறைந்தபட்ச வயது 13 இருக்க வேண்டும். எனவே ஷெல்லியின் வயதைக் கூட்டிப்போட்டுக் கொடுத்துள்ளார்.

முதலில் குடும்பத்தினருடன் மட்டும் தொடர்பில் இருந்த ஷெல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அக்காவின் நண்பர்களோடு ஃப்ரெண்டானாள். ஆண் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் பாட்டி வீட்டிலிருந்து பார்ட்லெட் வீட்டிற்கு வந்திருந்த ஷெல்லியின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதைப் பார்த்த ஷெல்லியின் தாய்க்கு அதிர்ச்சி. 12 வயது சிறுமியை 'அந்த’ உறவுக்கு வரச்சொல்லி அழைத்திருந்தது அந்த மெசேஜ். அதற்குப் பிறகு, ஷெல்லியின் ஃபேஸ்புக் பக்கம் போய்ப் பார்த்தால், தனது முக்கால் நிர்வாணப் படங்களை அப்லோட் செய்திருந்தாள் ஷெல்லி. இதற்கு ஆண்களின் லைக்குகளும் கமென்ட்ஸ்களும் குவிந்திருந்தன.

கடுப்பான அம்மா, ஷெல்லியின் மொபைலை வாங்கி அதில் வீடியோவை ரெக்கார்ட் மோடில் ஓடவிட்டு, பெல்ட்டை எடுத்துத் தன் கோபத்தை எல்லாம் அடித்துத் துவைத்துவிட்டார். நடுவே கேமராவைப் பார்த்து 'ஒரு அறியாத குழந்தையின் நிர்வாணத்தை ரசித்தவன்களே... இதையும் ரசியுங்கள்'' என்று சொல்லும் அந்த ஆறு நிமிட வீடியோவினை ஷெல்லியின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே வெளியிட்டார்.

அவ்வளவுதான்... அந்த வீடியோ காட்டுத்தீயைவிட வேகமாக இணையத்தில் பரவத் தொடங்கியது. ஷெல்லியை அடித்தது தவறு என்றும் ஒரு தாயாக அவர் செய்தது சரிதான் என்றும் கமென்ட்ஸ் வரத் தொடங்கின. இதுவரை 1 லட்சம் முறை அந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்புமுறைகள் பற்றி அதிகம் பேசும் அமெரிக்க சமூகத்தில் இந்த வீடியோ பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெள்ளைக்காரர்களின் கருத்துகள் 'அந்தத் தாயை உடனே கைது செய்ய வேண்டும்’ என்றும்... கருப்பினத்தவரின் குரல்கள் 'எங்கள் கலாசாரத்தில் குழந்தைகளை அவைகளுக்குத் தீங்கு விளையாதவாறு அடித்துத் திருத்தும் பழக்கம் உள்ளது. எனவே அந்தத் தாய் செய்தது சரிதான்’ என்றும் வாதப் பிரதிவாதங்கள் கிளம்பிவிட்டன. இந்த நிலையில் அடிவாங்கிய ஷெல்லியும் அவரின் சகோதரியும் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில் ஷெல்லி 'தான் செய்தது தவறுதான், தன் தாய் தன்னை அடித்தது எனது நன்மைக்குத்தான்’ என்று தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் ஹெலனைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்கையில், ''எனது குடும்ப விவகாரம் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால் எனது கணவர் இதுவரை ஒரு போன்கூட செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் தலைநகரில் போலீஸ்காரராக இருக்கிறார். இப்படியான நிர்கதியான நிலையில் எனது பெண் இந்த வயதில் கர்ப்பமாகி வந்தால், யார் காப்பாற்றுவார்கள், அல்லது ஏமாற்றி அழைத்துப்போய் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து வீசிவிட்டுப் போனால், இன்று நியாயம் பேசுவோர் என்ன செய்வார்கள்?'' என்று கொந்தளித்துள்ளார்.

நீங்க என்ன சொல்றீங்க?

- செந்தில்குமார்