நாளுக்கு நாள் இந்தப் பொண்ணுங்க பண்ற அலப்பறைக்கு அளவே இல்லாமப் போயிட்டு இருக்கு. சரி அந்தப் பொண்ணுங்ககிட்டயே கொஸ்டீனை வெச்சிடுவோமா..?

காலேஜுக்குப் போறீங்க. சரி, ஆனா எப்போதுமே ரெண்டு நோட்டை மட்டும் எடுத்துக்கிட்டுப் போறீங்களே... அது ஏன்? பேக்ல இடம் இல்லைனாலும் பரவாயில்ல. காலேஜ் போயிட்டு அப்படியே ரிட்டர்ன் வரும்போது மார்க்கெட்ல விக்கிற மொத்தக் காய்கறிகள்ல பாதிக் காய்கறிகளை வாங்கி ஃபில் பண்ற அளவுக்கு பேக்குல இடம் இருந்தும் நீங்க நோட்டை உள்ளே வைக்காம கையில வெச்சிக்கிட்டே சுத்துறீங்களே... அதைத்தாங்க ஏன்னு கேக்குறோம்.

வீட்டைச் சுற்றி சாக்கடை ஓடும். பத்து விதமான சருமநோய்க்கும் பூர்விகமே உங்க ஏரியாவாத்தான் இருக்கும். ஆனா, வெளியில கிராஸ் ஆகிற மண் லாரியில இருந்து சின்னதா புகை வந்தாக்கூட உடனே கையில வெச்சிருக்கிற பூப்போட்ட வெள்ளைக் கலர் கர்ச்சீப்பை எடுத்து மூஞ்சியை மூடிக்கிட்டு அதோட உலகமே அழிஞ்சது மாதிரி 'ஓ மை காட்’ னு சவுண்ட் எஃபெக்ட்டோட ரியாக்ஷன் குடுக்குறீங்களே... அதெல்லாம் ஏன்?

'ஹ்ம்...’, 'சொல்லு’, 'அப்பறம்’, 'லவ் யூ’, 'ஹ்ம்’, 'சொல்லு...’ இதையேதான் செல்போன்ல நாள் முழுக்கப் பேசுறீங்க. சரினு சேஞ்சுக்கு லைட்டா ரூட்டை மாத்தி 'சாப்பிட்டியா’னு கேட்டா, 'ஆமா... இப்போ ரொம்ப முக்கியம் பாரு’னு ரிப்ளை பண்றீங்க, 'என் தங்கச்சி என்ன பண்ணுனா தெரியுமா’னு ஆரம்பிச்சா, 'உன் வீட்டுக் கதையெல்லாம் நா இப்போ கேட்கலை’ங்கிறீங்க. சரி 'லேட்டாயிருச்சு தூங்குவோமா?’னு கேட்டா, 'அப்போ என்கூட பேசப் பிடிக்கல. அப்டித்தானே?’ங்கிறீங்க, 'சரி நீயே ஏதாவது சொல்லு’ன்னா 'ம்ஹூம்...’ 'நீ சொல்லு’, 'அப்றம்’, 'ஹ்ம்ம்.’ -அப்டினு மறுபடியும் மொதல்ல இருந்தே ஸ்டார்ட் பண்றீங்க. சொல்லுங்க சொல்லுங்கனு சொன்னா என்னத்தையா சொல்றது?

ரெண்டு பேரும் சேம் கலர் டிரெஸ் போடுறதுல ரெண்டு பேருக்குமே சம்பந்தம் இருக்கு. இருந்தாலும் அதுக்கும் பையன்கிட்டதான் ட்ரீட் கேட்டு அவனை மொங்காம் போடுறீங்க. காதலின் 224-ம் விதிப்படி இதைக்கூட ஏத்துக்கிறோம். ஆனா சேம் கலர்ல டிரெஸ் போடுறதெல்லாம் தற்செயலா நடக்கணும். அதை விட்டுட்டு 'நாளைக்கு நீ என்ன கலர் டிரெஸ்டா செல்லம்’னு முதல்நாள் ராத்திரி 11 3/4-க்கு போன்ல அவன் வாயைப் புடுங்கித் தெரிஞ்சிக்கிட்டு மறுநாள் அதே கலர்ல வந்து நின்னு ட்ரீட் கேக்கிறது கொடியது... மிக மிகக் கொடியது.

ஏன் போடுறீங்கனே இப்போ வரைக்கும் தெரியல. ரோஜாப்பூவுல அஞ்சும் பல்லு இல்லாத குழந்தை சிரிக்கிற மாதிரியான போட்டோவுல அஞ்சும் ஸ்டோர் பண்ணி வெச்சிக்கிட்டு அதையே திரும்ப திரும்ப ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சராப் போட்டு சாவடிக்கிறீங்க. சரி அதெல்லாம் உங்க சொந்த விருப்பம். ஆனா அந்த போட்டோவுக்கு ஏன் லைக் போடலைனு இன்பாக்ஸ்ல வந்து

பொங்கல் கிண்டுறீங்களே... இதெல் லாம் என்ன மாதிரியான வியாதி?

ஃபைனலா ஒரு கொஸ்டீன். பதில் சொல்றது கஷ்டம்தான். டிரை பண்ணிப் பாருங்க. ஏதோ போனுக்கெல்லாம் 'ரீ சார்ஜ்’ பண்ற கடைனு சொல்றாங்களே... அது உங்க ஏரியாவில் எங்கே இருக்குனு இதுவரைக்கும் தெரியுமா? உண்மையைச் சொல்லுங்க கேர்ள்ஸ்!

- ஜெ.வி.பிரவீன்குமார்