வண்டலூர்ல வெள்ளைப்புலி அனு மூணு குட்டி போட்டிருக்குனு நியூஸ். நல்ல விஷயம். ஏற்கெனவே போன வருஷம் நாலு புலிக்குட்டிகளுக்கு அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரானு பேர் வெச்சாங்க அம்மா. இப்போ மூணு புலிக்குட்டியும் முதல்வர் அம்மாவுக்காகக் காத்துக்கிட்டு இருக்குதுங்க. சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்புல பலியான ஸ்வாதியையும் காயமடைஞ்சவங்களையும்தான் பார்க்க வரலை. அட்லீஸ்ட் புலிக்குட்டிகளுக்கு பேரு வைக்கவாவது வருவீர்களா... நீங்கள் வருவீர்களா?

சென்ட்ரலில் குண்டு வெடித்த மறுநாள் சிதம்பரத்திலும் வெடித்தது. பதறிப்போய் செய்தியைப் பார்த்தால், நாட்டு வெடிகுண்டு தயாரித்த இடத்தில் குண்டு வெடித்து ஒருவர் காயம் என்றிருக்கிறது. இந்த நாட்டு வெடிகுண்டு விஷயம் அடிக்கடி செய்திகளில் வருவதுதான். ஆனால் நாடே பயந்துகிடக்கும் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது இதுபோன்ற சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நாட்டு மக்களின் நலன் கருதித்தானா? டவுட்டு!

2009-ல குஜராத்துல ஒரு பெண்ணோட டெலிபோன் உரையாடல்களை காவல் துறை ஒட்டுக்கேட்டதாகவும் அதுக்கு அந்த மாநிலத்தோட முதல்வர் மோடிதான் காரணம்னு ஒரு பிரச்னை வந்துச்சு... ஞாபகம் இருக்கா? ஒரு கமிஷனையும் போட்டு டிசம்பர்ல இருந்து விசாரணையும் நடந்துட்டு இருக்கு. இன்னொரு நீதிபதியைப் போட்டு விசாரிக்கச் சொல்லுச்சு மத்திய அரசு. 'என் பெண்ணோட அடையாளம் வெளிக்காட்டப்படும்’னு விசாரணைக்குத் தடை கோரினார் அந்தப் பெண்ணோட அப்பா. இப்போ லேட்டஸ்ட்டா சம்மந்தப்பட்ட அந்தப் பொண்ணே, 'என் அனுமதியோடதான் என் டெலிபோன் பேச்சு டேப் பண்ணப்பட்டுச்சு. என்னோட பாதுகாப்புக்கு உறுதியளித்த குஜராத் அரசுக்கு நன்றி. இதுக்கு மேல என்னை உளவு பார்த்தது சட்டத்துக்கு உட்பட்டதா, இல்லையானு விசாரிக்கக் கூடாது’னு உச்ச நீதிமன்றத்துல மனுதாக்கல் செஞ்சிருக்கு. போறபோக்கைப் பார்த்தா, 'குஜராத்ல நடந்தது கலவரமே இல்லை. சும்மா செத்துச் செத்து விளையாண்டோம்’னு செத்தவங்களையே சொல்ல வெச்சிருவாங்க போலிருக்கே!

மே 1 உழைப்பாளர் தினம்கிறதை ஃபேஸ்புக்வாசிகள் மட்டும்தான் தல ரசிகர்களையும் தாண்டி ஞாபகத்துல வெச்சிருந்தாங்கபோல. சேனல்கள்லாம் சுத்தமா மறந்துட்டு அஜித் பிறந்த நாள் ஸ்பெஷலா ஆக்கிட்டாங்க. 'ஆஞ்சநேயா', 'ஜனா’ போன்ற கர்ணகொடூர படங்களைப் போட்டதுகூட ஓகே. ஆனா, ஜெயா மூவிஸ்ல அன்னிக்கு 'ரசிகன்’ படம் ஒளிபரப்பியதன் அரசியல் மட்டும் எனக்குக் கடைசி வரை புரியலை. உங்களுக்குப்

புரிஞ்சா சொல்லுங்க... ப்ளீஸ்!