Published:Updated:

இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!

Vikatan Correspondent

திரைப்படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது இப்போது வழக்கமாகி விட்டது. வழக்கமாக மனிதர்கள் கொடி பிடிப்பதைத் தொடர்ந்து விலங்குகளும் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினால் என்னவாகும்?

இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!

'நாய் சேகர்’ 'ஸ்நேக் பாபு’ என்ற பெயர்களோடு எங்கள் அனுமதி இல்லாமல் நடிப்பதோடு, எங்கள் பெயரை வைத்து காமெடி கீமெடி பண்ணுவதை நடிகர் வடிவேலு அறவே விட்டுவிட வேண்டும்.

'சிங்கம்’, 'சிறுத்தை’ 'சிங்கம் புலி’ என்றெல்லாம் எங்கள் பெயரில் படமெடுப்பதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி பெயர் வைப்பதானால், அதில் எங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

பன்ச் டயலாக் பேசும் சாக்கில், எங்கள் பெயர்களைப் பஞ்சராக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பாக 'பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்ற உண்மைக்குப் புறம்பான பன்ச் டயலாக்கால் பன்றி வர்க்கத்தை அவமரியாதை செய்வதை பன்றிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!

அறிவாளிகளாக எங்களைக் காட்டுவதாக எண்ணிக்கொண்டு, காய்கறி வாங்குவதிலிருந்து, குழந்தைக்கு பால் புட்டியில் பாலூட்டுவது வரை அத்தனை வீட்டு வேலைகளையும் குரங்கு, நாய் போன்ற எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்களை அடிமையாகக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

யாரையேனும் திட்டுவதற்கு 'மாடே’ 'நாயே’ 'பன்னி’ என்று விளிப்பதைத் தடை செய்ய வேண்டும். நாங்கள் என்றுமே யாரையுமே 'மனுஷனே’ என்று திட்டியது இல்லை என்பதை சுட்டிக்காட்ட எங்கள் சங்கம் விரும்புகிறது.

இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!
இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!

சூப்பர் ஸ்டார் என்று காட்டுவதற்காக நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்ததும் காளை மாடு மிரண்டு பின்வாங்குவதுபோல் காட்டி எங்கள் வீரத்தை கேலிக்குஉள்ளாக்குவதைக் கண்டிக்கிறோம். அப்பேர்ப்பட்ட தைரியசாலி, பாம்புக்கு மட்டும் பயப்படுவதாகக் காட்டுவது பாம்பையே கிண்டலடிப்பதாக உள்ளது.

நடிகர் ராமராஜன் ஒரே ஒரு படத்தில் மாட்டிடம் பால் கறந்ததை வைத்து, ராமராஜனோடு பசு மாட்டை இணைத்து கிசுகிசு பாணியில் கிண்டல் அடிப்பது பசு வதைக்கு ஒப்பானதாகும். அத்தகைய செயல் தொடராமல் தடுக்க வேண்டும்.

இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!
இது அனிமல்ஸ் புலம்பல்ஸ்!

இந்திய விலங்குகளுக்கே சரியாக நடிக்க வாய்ப்பு இல்லாத சூழலில் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்த டைனோசர் போன்ற விலங்குகளை கிராஃபிக்ஸில் உருவாக்குவதால், அனைத்து விலங்குகளுக்கும் பட வாய்ப்பு குறைகிறது என்பதை உணர்ந்து கிராஃபிக்ஸில் விலங்குகளை உருவாக்கும் முறையைக் கைவிட வேண்டுகிறோம்!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்