Published:Updated:

ஷாருக் கான், சல்மான் கானுக்குப் பரிசாகக் கொடுத்த காஸ்ட்லி கார்!

ஷாருக் கான், சல்மான் கானுக்குப் பரிசாகக் கொடுத்த காஸ்ட்லி கார்!
ஷாருக் கான், சல்மான் கானுக்குப் பரிசாகக் கொடுத்த காஸ்ட்லி கார்!

ஷாருக் கான், சல்மான் கானுக்குப் பரிசாகக் கொடுத்த காஸ்ட்லி கார்!

சினிமா நட்சத்திரங்கள் பலர், விலை உயர்ந்த கார்களை வாங்குவது அல்லது ஜாலியாக ரைடு செல்வதில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர். தற்போது  ''கோலிவுட் சூப்பர் ஸ்டார்'' ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இணைந்திருப்பது,  ''பாலிவுட் சூப்பர் ஸ்டார்'' ஷாரூக் கான்! பாலிவுட் ரசிகர்களால்  ''கிங் கான்'' எனச் செல்லமாக அழைக்கப்படும் அவர், சமீபத்தில் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் GLE 450 AMG Coupe மாடலை வாங்கியிருக்கிறார். விஷயம் என்னவென்றால், அந்தக் காரை அவர் தனது நண்பரான நடிகர் சல்மான் கானுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்பதுதான்!  கோலிவுட்டில் விஜய் - அஜீத் எப்படியோ, பாலிவுட்டில் ஷாரூக் கான் - சல்மான் கான் அப்படி;

இந்நிலையில், தான் நடித்துவரும் படத்தில், ஒரு கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்துக் கொடுத்ததற்காக, ஷாரூக் கான் அவருக்குப் பரிசாக அளித்ததுதான் அந்த வெள்ளை நிற எஸ்யூவி என்பது தற்போது தெரிய வந்துள்ளது! ஆக ஷாரூக் கான் தனது நண்பர்களுக்கு, விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பவர் என்ற கூற்று, மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. அவர்கள் சேர்ந்து நடித்துள்ள படம் குறித்த தகவல்கள், இன்னும் கிடைக்கப் பெறவில்லை; இன்னும் ரெஜிஸ்டரேஷன் செய்யப்படாத அந்தக் காரில், தனது கேர்ள் ஃப்ரெண்ட் எனக் கூறப்படும் Iulia Vantur மற்றும் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுடன் சல்மான் கான் செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

மெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG Coupe காரில் என்ன ஸ்பெஷல்?

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி கார்தான் GLE 450 AMG Coupe. மற்ற ஜெர்மானிய நிறுவனங்களின் தயாரிப்பான பிஎம்டபிள்யூவின் X6 மற்றும் போர்ஷே Cayenne Turbo எஸ்யூவிக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட இந்த எஸ்யூவி, ஸ்டைலுக்கும் - சொகுசுக்கும் - லக்ஸூரிக்கும் - ஹேண்ட்லிங்கிற்கும் பெயர் பெற்றது. தவிர இது பெர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்கான AMG வகை மாடல் என்பதால், அதிரடியான பெர்ஃபாமென்ஸ் கியாரன்ட்டி; அதற்கேற்ப இதில் பொருத்தப்பட்டிருக்கும் 3.0 லிட்டர் Bi-Turbo V6 பெட்ரோல் இன்ஜின், 367 bhp பவரையும் - 52kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், 0 - 100கிமீ வேகத்தை வெறும் 5.7 விநாடிகளில் எட்டிப்பிடிப்பதுடன், அதிகபட்சமாக 250கிமீ வேகம் வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. 21 இன்ச் வீல்களுடன் 4MATIC வசதி வேறு இருப்பதால், ஆன் ரோடு தவிர ஆஃப் ரோடிலும் கெத்துக் காட்டலாம்! Nappa லெதர் மற்றும் Carbon-Fibre சூழப்பட்டிருக்கும் தரமான கேபினில் பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ஹீட்டிங் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் ஸ்டீயரிங், (Comfort, Slippery, Sport, Sport+, Individual) ஆகிய 5 டிரைவிங் மோடுகள் போன்ற பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை Attention Assist, ரியர் வியூ கேமரா, Adaptive Braking, Electronic Stability Programme, Blind Spot Assist, Lane Keeping Assist ஆகியவை இருப்பது ப்ளஸ். 

அடுத்த கட்டுரைக்கு