மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனங்களே..! காலம்பற பல்லு விளக்குறதுல ஆரம்பிச்சு ராத்திரி தூங்குறதுக்குள்ள நம்மை ரவுண்ட் அப் பண்ணித் தாக்குற 'சும்மா ஒரு பேச்சுக்கு’ எவ்ளோ இருக்குனு உங்களுக்குத் தெரியுமா?

ஏதாவது ஒரு ஷாப்பிங் மாலுக்குள்ளே நுழைஞ்சி பாருங்க.

'யோவ்....பர்மா பஜார்ல 44 ரூபாய்க்குக் கிடைக்கிற டிஷர்ட்டை இப்படி ஷோரூம் போட்டு 999

ரூபாய் ஒன்லின்னு விக்கிறீங்களே... நான் ஏமாந்தவன்னு சொல்லி என் தலையில மொளகா அரைக்கப் பாக்குறீங்களா?’னு ஒரு குரல் கேட்கும். அப்படியே லைட்டா எட்டிப்பாத்து பளபளன்னு இருக்கிற மண்டையில பத்து கிலோ மிளகாயைக் குந்தாக்கூறா கொட்டி அம்மிக்கல்லை வெச்சு அரைச்சா எப்பூடி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க... எழுதின எனக்கே கண்ணு எரியுதுங்கோ.அப்படியெல்லாம் அரைச்சா ரெடிமேட் குழம்பு பேஸ்ட் விளம்பரத்துல வர்ற மாதிரி மிளகாய் பேஸ்ட்டா வரும்... சொலசொலனு ரத்தம் வரும்டா பக்கிகளா!

தலையில நாலு லிட்டர் எண்ணெயை அப்பிக்கிட்டு காலருக்குப் பக்கத்து பட்டனைக்கூட மிஸ் பண்ணாம போட்டுட்டு 'ஞே’னு சுத்துற பசங்களைப் பார்த்தா போதும்...'அந்தப் புள்ளைக்கு பால் வடியிற முகம்’னு சொல்ல வேண்டியது. அப்புறம் எதுக்கு பசு மாட்டையெல்லாம் புல்லு போட்டு வளக்குறீங்க? பேசாம அந்தப் பால் டப்பா தலையன்களையே ஆவின் நிறுவனம் டெண்டர் எடுத்துக்கலாமே?

''எவனாவது ரெகமெண்டேஷன் வாங்கித் தரேன்னு சொல்லி உங்களுக்கு ஆசை காட்டுவான். 'அது எப்படி உங்களால முடியும்?’னு நீங்க கேட்டா போதும். 'நான் சைக்கிள் கேப்புலேயே ஆட்டோ ஓட்டுவேன்’னு ரீலு ஓட்டுவான். அப்படினா அவன் ஆட்டோ ஓட்டுற கேப்புல ரோடு ரோலர் ஓட்டுவானா? போக முடியாத சந்துக்குள்ளே கூட்டிட்டுப் போய் உங்களை நசுக்கப் போறேன்னு சிம்பாலிக்கா சொல்றான்டா பீன்ஸுகளா!

காதலிக்கிறவய்ங்க தனி அட்ராசிட்டி. காதலுக்கு எதிர்ப்பு வந்தா பேசுவாய்ங்க பாருங்க ஃபேமஸ் டயலாக். 'ஏழேழு ஜென்மமும் உன்கூட வருவேன்’ 'ஏழு கடல் ஏழு மலையைத் தாண்டியாவது உன்னைக் கூட்டிட்டுப் போவேன் செல்லம்’ மொதல்ல அந்தப் பொண்ணு வீட்டு காம்பவுண்ட் கேட்டை ஏறி குதிக்க முடியுமா என் வென்ரு!

வீட்ல பொண்ணுங்களோட காதல் மேட்டர் தெரிஞ்சா போதும். அப்பா 'அடிப்பாவி மகளே! என் தலையில இடியை எறக்கிட்டியே’ என்பார். அம்மா, 'என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டியேடி’ என்பார். நெனச்சிப் பாருங்க மக்காஸ். இடி ஒரு தடவையாவது இறங்கி இருந்தா, இன்னிக்கு இப்படி ஒரு டயலாக்கை அவர் பொண்ணு முன்னாடி நின்னு பேசி இருக்க முடியுமா? அப்படியே இடி இறங்குறதுக்கு தலையில என்ன எலிபேட் மாதிரி 'இடி’பேடா கட்டி வெச்சிருக்காரு. அதே மாதிரி இந்த அம்மா என்ன நடமாடும் இஸ்திரிப் பொட்டியா நெருப்பை அள்ளிக் கொட்ட?

''கல்யாணம் ஆன உடனே பொண்ணை மறுவீட்டுக்கு அனுப்பும்போது 'என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரைத்தான் பாக்கணும்’னு சிவாஜி டயலாக்கையே பேசுறீங்களே. உங்க கண்ணை மாப்பிள்ளைக்குக் குடுக்கறதுக்குப் பேசாம கண்தானம் பண்ணலாமே? ஆனாலும் ஒரு டவுட். கண்ணை அவர்கிட்ட கொடுத்தபிறகு நீங்க எப்படி அதுல ஆனந்தக் கண்ணீரைப் பாக்க முடியும்? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க!

''சரி. ஆல் இன் ஆல் லவ்வர்ஸ்களே..! உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி. அது ஏன் எப்பவுமே 'ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’னு மொக்கை போடுறீங்க. நடந்து போங்க, ஆட்டோவில போங்க, அதுவும் இல்லாட்டி டிக்கெட்கூஸ் டாட் காம்ல புக் பண்ணி பஸ்ல போங்க. கும்மிடிப்பூண்டியில ஆரம்பிச்சு குற்றாலம் வரைக்கும் ஓடி ஓடியே நீங்கெல்லாம் என்ன ஒலிம்பிக் தீபத்தையா ஏத்தப் போறீங்க? ஸ்டாப் தட் நான்சென்ஸ்!

'தடுக்கி விழுந்தா பசங்க படிக்கிற ஸ்கூலு’னு பில்டப் பண்ணுறீங்களே... எங்கே தடுக்கி விழுந்து பாருங்க... மண்டை வீங்கித் திரிவீங்க!

- பொன்.விமலா