நம் நாட்டில் ஒரு குழந்தை கடத்தப்பட்டாலே அது பரபரப்புச் செய்தி. நைஜீரியாவிலோ நூற்றுக்கணக்கில் பெண் குழந்தைகள் கடத்தப்படுவது பகீர் திகில் செய்தி.

பள்ளிக்குள் புகுந்து நூற்றுக்கணக்கில் பெண்பிள்ளைகளை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றனர். இதைச் செய்வது போகோ ஹராம் ( கல்வியே பாவம் என்று பொருள் ) என்கிற மதத் தீவிரவாத அமைப்பு. முகமது யூசுப் என்பவன் துவங்கியதே இந்த இயக்கம்.

கடந்த வாரம் வடக்கு நைஜீரியாவில் உள்ள சேபுக் என்ற ஊரில் புகுந்த தீவிரவாதிகள் பள்ளிக்கூடத்தில் இருந்த 300 மாணவிகளைக் கடத்திச் சென்றுவிட்டனர். 'தங்களது சகாக்கள் சிலரை உடனடியாக விடுவிக்காவிட்டால், பக்கத்து நாடுகளில் அடிமையாக விற்றுவிடுவோம்’ என்று அதிரடியாக அறிவித்தனர்.

மீடியாக்களில் இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி போகோ ஹராமிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் கண்டன அலைகளையும் போராட்டங்களையும் கிளப்பியுள்ளது. Bring back our girls என்ற தலைப்பில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் துவங்கிய இந்தப் போராட்டத்தில் உலகத் தலைவர்களும் பங்கேற்கத் துவங்கியுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இணைந்துகொண்டார். ஹாலிவுட்டின் நடிக, நடிகைகளும் 'எங்கள் பிள்ளைகளை திருப்பிக் கொடுங்கள்’ என்று எழுதிய அட்டையுடன் வீதிக்கு வந்தனர். இதை சாக்காக வைத்து நைஜீரியாவினைக் கைப்பற்ற மேற்கு நாடுகள் சதி செய்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் போகோ ஹராமின் தலைவர். கடந்த முறை வேறு ஒரு பகுதியில் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்டு வந்தபோது அதில் சிலர் கர்ப்பமாகவும் பாதிப்பேர் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர் என்று கவலையுடன் சொல்கிறார்கள் சேபுக் நகரப் பெற்றோர்கள்!

- செந்தில் குமார்