அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரியின் டவுசர் காலம் இது!

வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பார். அவரைச் சுற்றிலும் எப்போதும் உட்கார்ந்திருக்கும் பசங்க பட்டாளம், 'ஐயய்யோ... அண்ணன் கோபமாயிட்டாரே’, 'அண்ணன் இப்போ நெஞ்ச வெடைப்பாரே’, 'அண்ணன் கையை முறுக்குவாரே...’ என பில்டப் ஏற்றுவார்கள்.

இங்கிலீஷ்ல இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை... இங்கிலீஷாகத்தான் இருக்கும்.

படிப்பைவிட விளையாட்டில் சுட்டியாக இருந்திருப்பார். கபடி விளையாட்டில் யாராவது காலைப் பிடித்து இழுத்தால், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என அழுதிருப்பார்.

'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...’ பாட்டுதான் இவரின் ஆல்டைம் ஃபேவரைட்.

தன் சாப்பாட்டுத் தட்டில் ஒரே ஒரு முட்டை வைத்துவிட்டு தம்பியின் தட்டில் இரண்டு முட்டையை வைத்த பெற்றோர் மீது கோபித்துக்கொண்டு அழகர் மலையில் போய் உட்கார்ந்திருப்பார்.

'திருவிளையாடல்’ படம் இவருக்குப் பிடிக்கும். ஸ்கூல் டிராமா ரிகர்சலில் 'பழம் எனக்குத்தான்’ என்ற டயலாக்கை வீட்டிலும் ஸ்கூலிலும் சொல்லிப் பார்த்திருப்பார்.

ஹோம்ஒர்க் செய்யாமல் இருந்ததால், அடிக்கடி ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருப்பார். மிஸ் கேட்கும்போது, 'அப்பா ஹோம் ஒர்க் செய்யவிடல’ என்றும், 'படிச்சிட்டு இருக்கிறப்போ, நடுவுல கொஞ்சம் தம்பி டிஸ்டர்ப் பண்ணிட்டான்’ என்றும் சொல்லி ஜகா வாங்குவார்.

ஸ்கூல் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் சுவர்களில் வெற்றிடம் தென்பட்டால் போச்சு. தன் பெயரை எழுதி பக்கத்தில் வாழ்க எனவும் எழுதுவதை ஹாபியாக வைத்திருப்பார்!

- ஆர்.சரண்