'அம்புலி’ என்ற 3-D படத்தைக் கொடுத்து ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்ற இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கர் - ஹரீஸ் நாராயண். அடுத்து 'ஆ’ என்று ஒரு படத்தை ஆரம்பித்து, தமிழின் முதல் 'ஹாரர் ஆந்தாலஜி ஃபிலிம்’ என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

'' 'ஆந்தாலஜி’ (Anthology) என்றால் தொகுப்பு என்று அர்த்தம். பல நாடுகளில், பல இடங்களில் நடந்த, நடந்துக்கிட்டு இருக்கிற அமானுஷ்ய சம்பவங்களின் தொகுப்பை ஒரே படத்தில் கொடுக்கிறதுதான் 'ஹாரர் ஆந்தாலஜி’. 'ஆ’ ஐந்து விதமான தளங்களில் நடக்கிற வித்தியாசமான கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுப்பகுதி, தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற ஒரு கிராமத்து ஏ.டி.எம். சென்டர். இப்படிப் பல இடங்களில் நடக்கிற அமானுஷ்ய விஷயங்களோட தொகுப்புதான் 'ஆ’ என்கிறார் ஹரிஷ் நாராயணன்.

''நானும் ஹரியும் சேர்ந்து நிறையப் பேய்க் கதைகளைப் பேசியிருக்கோம். ஹரி தயாரிப்பில், அவரும் நானும் சேர்ந்து இயக்கிய முதல் படம் 'ஓர் இரவு’. ஹாலிவுட்ல 'பாராநார்மல் ஆக்டிவிட்டி’ படங்கள் வர்றதுக்கு முன்னாடியே 'ஓர் இரவு’ மூலமா தமிழ்ல நாங்க டிரை பண்ணியிருக்கோம். சரியா ரீச் ஆகலை. ஆனா, விமர்சன ரீதியா படத்தை எல்லோருமே கொண்டாடினாங்க. அந்தப் படத்தோட விமர்சனங்களைப் படிச்சுட்டுதான் 'இன்னொரு ஹாரர் படம் பண்ணுங்களேன்’னு 'அம்புலி’ தயாரிப்பாளர் சொன்னார். த்ரில்லர் படமான அதிலேயும் புதுசா ஏதாவது பண்ணனும்னு '3டி’யைக் கொண்டுவந்தோம்.

பல தியேட்டர்ல படம் 100 நாள் ஓடுச்சு.

இன்னொரு விஷயத்தைப் புதுசா பண்ணலாம்னு பிளான் பண்ணி, டிஸ்கஷன்ல உட்காரும்போதுதான் 'ஹாரர் ஆந்தாலஜி’ ஐடியா வந்தது. நாமே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணினோம். ஹாரர் படம் பார்க்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு என்னென்ன விஷயங்களைப் புதுசா கொடுத்தா ரசிப்பாங்களோ, அதற்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்கோம். இதை ஏன் சொல்றேன்னா, ஹாலிவுட்ல ஒவ்வொரு ஜானரையும் ரசிக்கிற ரசிகர் குழுக்கள் இருப்பாங்க. அந்த மாதிரி தமிழ்ல ஹாரர் டைப் படங்களை ரசிக்கிறதுக்கும் அதிக ரசிகர்கள் இருக்காங்கனு சமீபத்தில் ரிலீஸான ஹாரர் படங்களோட வெற்றியிலேயே தெரிஞ்சுக்கலாம்!'' என்று ஹரி முடிக்க, மீண்டும் ஹரிஸ் நாராயண்.

''படத்துல டைட்டில் சாங்... ஜப்பான் மொழிப் பாட்டு. படத்துல வர்ற ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒவ்வொரு ஹீரோ, ஒவ்வொரு வில்லன், ஒவ்வொரு க்ளைமாக்ஸ்னு ஒர்க் பண்ணியிருக்கோம். எல்லாமே லைவ்வா இருக்கணும்னு சம்பவம் நடந்த இடத்திலேயே படமாக்கியிருக்கோம். சுருக்கமா சொல்லணும்னா, ஹாரர் படம் பார்க்கிறவங்களுக்காகவே உருவாக்கின ஃப்ரெஷ் ட்ரீட்தான் இந்தப் படம்!''

- கே.ஜி.மணிகண்டன்
படம் : ஜெ.வேங்கடராஜ்