ஒவ்வொரு நிமிஷத்தையும் பொக்கிஷமா நினைச்சு வாழுற ஆளுங்கதான் நாம. ஆனா, நம்ம எல்லோரோட வாழ்க்கையிலும் சுனாமி மாதிரி ஒரு குரூப் வந்து அப்படியே எல்லாத்தையும் மாத்திப் போட்டுட்டுப் போவாய்ங்க. வேற யாரும் இல்லை. மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங்ல நம்மைக் கோத்துவிட ஆளாய்ப் பறக்குற பக்கிகளேதான். சில விஷயங்களைச் சொல்றேன். அவிய்ங்ககிட்ட இருந்து தப்பிச்சுக்கோங்க!

'உலகத்துலேயே ஈஸியான விஷயம் செலவு பண்றதுனு நினைக்கிறீங்க. ஆனா என்னைப் பொறுத்தவரை உலகத்துலேயே ஈஸியான விஷயம் பணம் சம்பாரிக்கிறதுதான்.’ 'ஏழையாப் பிறக்கிறது தப்பில்ல... ஆனா ஏழையா சாகிறது பெரும் தப்பு’ - டீக்கடையில் எதேச்சையா சந்திச்ச உங்க ஸ்கூல்மேட் இப்படி நெம்புகோல் தத்துவத்தோட ஆரம்பிச்சான்னா அப்படியே டீயைக் கீழே ஊத்திட்டு (முடிஞ்சா மூஞ்சியில ஊத்திட்டு) எஸ்கேப் ஆகிடுங்க.

குளிக்கிறாய்ங்களோ, இல்லையோ 'அம்சமுடா நாராயணா’ அந்நியன் அம்பி போல மெடிக்கல் ரெப் காஸ்ட்யூம்ல உங்க வீட்டுக்கு வந்து நிப்பானுங்க. 'ஒரு அரை மணி நேரம் எனக்காக ஒதுக்குங்க. உங்களை க்ரோர்பதி ஆக்கிக் காட்டுறேன்’னு அசால்ட்டா ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவானுங்க.

'உடம்புல இருக்குற 387 தசைகளையும் வலுவாக்க தனித்தனி புரோட்டீன் பவுடர் இருக்கு. இதோட விலை ரூபாய் 9,999 மட்டுமே. நீங்க எமரால்டு குரூப்ல சேர்ந்தீங்கனா, இது வெறும் 999 ரூபாய்க்குக் கிடைக்கும். அது ரொம்ப சிம்பிள். உங்களுக்குக் கீழே ஒரு 30 பேரைச் சேர்த்துவிடணும். அவ்ளோதான்’னு சம்பந்தமே இல்லாம கிறுகிறுக்கவைக்கிற கால்குலேஷன்களைச் சொல்வானுங்க. 'இவர் டைமண்டு’, 'இவர் பிளாட்டினம்’ 'இவர் ஸ்டார் கோல்டு’னு என்னென்னமோ பட்டம் கொடுத்து சில கோட்டு சூட்டு ஆசாமிகளோட போட்டோக்களை லேப்டாப்பை ஓப்பன் பண்ணிக் காட்டுவாங்க.

எங்கேயோ மரக்காணத்தைத் தாண்டி இருக்கிற ரிசார்ட்ல டையும் ஷூவுமாய் கூட்டத்துக்கு முன்னாடி நின்னுட்டு 'இருக்கீங்களா?’னு தேவ வசனம் பேசுற சாம் ஜெபத்துரை மாதிரியே இருக்கிற ஒரு ப்ளாக் பாண்டியைக் காட்டுவானுங்க. ''இவர் டீக்கடை வெச்சிருந்தவர். இன்னிக்கு இவருக்கு சொந்தமா அஞ்சு காரு, ரெண்டு பங்களா அதோட வருஷத்துக்கு உலகம் பூரா சுத்தி வர்ற 'எக்ஸ்டசி டூர்’னு சார் கலக்கலா வாழ்க்கையை என்ஜாய் பண்றாரு. எப்படினு நினைக்கிறீங்க. அவரும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உங்களை மாதிரி எங்க எம்.எல்.எம்-ல சாதாரண மெம்பரா சேர்ந்து படிப்படியா கோல்டு மெம்பராகி டைமண்ட் மெம்பராகி, இன்னிக்கு பிளாட்டினம் சூப்பர் ஸ்டாரா இருக்காரு’னு அவனுங்க சொல்றப்போ மைண்ட்ல விக்ரமன் சினிமா ஒண்ணு சத்தியமா ஓடும். ஆனா, ஓடக் கூடாது மக்களே!

பேசிக்கிட்டு இருக்கிறப்பவே லைட்டை ஆஃப் பண்ணி உங்க கைக்கு ஃப்ளோரசென்ட் டார்ச்சை அடிப்பானுங்க. வெண்புள்ளிகளா ஏதோ தெரியும். 'ஆத்தீ... என்னதிது’னு நீங்க ஆர்வக்கோளாறுல கேட்டுத் தொலைச்சிடாதீங்க. 'அம்புட்டும் கிருமி பாஸ் கிருமி. பாருங்க இன்னிக்குக் காலையில நீங்க சோப்புப் போட்டுக் குளிச்சிருக்கீங்க. ஆனாலும் இவ்ளோ கிருமி இருக்கு பாருங்க. எங்க புராடக்ட் சோப்பை யூஸ் பண்ணிக் கையைக் கழுவிட்டு டார்ச் அடிச்சுப் பாருங்க’னு சொல்லி நம்மளைக் கையைப் பிடிச்சு வாஷ்பேசின் வரை கொண்டுபோய் அந்த சோப்பைப் போட்டுக் கழுவிவிடுவானுங்க. அது என்ன மாயமோ, மந்திரமோ இப்போ பளிச்னு கை இருக்கும்.

சோப்புல ஆரம்பிச்சு ஷாம்பு, முகப்பருவை நீக்க க்ரீம், முகச் சுருக்கத்தைப்போக்க க்ரீம், தலை முடிக்கு ஒரு க்ரீம், பொடுகைப் போக்க க்ரீம், குளிக்கிறதுக்கு முன்னாடி ஒண்ணு, குளிச்ச பிறகு ஒண்ணு, முடியை நெட்டக்குத்தலா நிப்பாட்டுறதுக்கு ஒண்ணு, படிய வாறுறதுக்கு ஒண்ணுனு க்ரீம்களை பரப்பிவெச்சு விளக்கோ விளக்குனு விளக்குவாய்ங்க. 'பால் கொதிக்குற மாதிரி இருக்கு’னு நீங்க எஸ்கேப் ஆகப் பார்த்தாலும், 'கூட்டத்துல இருந்து போனீங்கனா ரத்தம் கக்கிச் சாவீங்க’னு மோடி மஸ்தான் ரேஞ்சுக்குக் கடையை வீட்டுக்குள்ளேயே பரப்பிவெச்சு அவனுங்க கொண்டுவந்துருக்கிற 126 புராடக்ட்களையும் டெமோ பண்ணிக் காட்டிட்டுத்தான் போவானுங்க. ரத்தம் கக்காம இருந்தா நல்லது.

இப்படி 'எம்.எல்.எம் வைரஸ்’னால உங்க ஸ்கூல்மேட்டோ, தெருக்காரனோ பாதிக்கப்பட்டிருந்தாக்கூட பரவாயில்லை. உங்க சொந்தக்காரய்ங்களா இருந்தா போச்சு. பழக்கத்துக்குக் கொலை பண்ற மாதிரி பழக்கத்துக்கு நீங்களும் உறுப்பினராகி நாலு பேரை சேர்த்துவிட நாய் படாத பாடுபட வேண்டி இருக்கும்!

- ஆர்.சரண்