'உஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா! என்னா வெயில்’னு கோடை காலம் வந்தாலே அலுத்துக்குவீங்களே, ஆனா இதே கோடை காலத்தில் வர்ற சில டார்ச்சர்களைப் பார்த்தா, 'வெயிலே பரவாயில்லைடா சாமி’னு தோணும். அப்படியான சில சம்மர் ஸ்பெஷல் டார்ச்சர்ஸ்...

முதலில் ஸ்கூல். ரெண்டு நாளைக்கு முன்னாடியே போயி, குத்தவெச்சி சீட்டு வாங்குறோமே... அதைச் சொல்ல வரலை பாஸ். அதெல்லாம் குளிர்காலத்திலேயே கொலவெறி சூடு. நான் சொல்ல வர்றது ஸ்கூல் ஃபீஸ் பற்றி. வருஷாவருஷம் வயசு கூடுற மாதிரி இதுவும் கூடுதே. பசங்க லீவுக்குச் சொல்ற சாக்குகளைவிட அல்பமா, அதிக அயிட்டங்களைப் போட்டு ஃபீஸை ஏத்தி நம்ம ஃப்யூஸைப் பிடுங்கிடுறாங்க மக்களே.

அடுத்ததும் பசங்க சம்பந்தப்பட்ட மேட்டர்தான். சம்மர் கோர்ஸ். ஏதோ கிரிக்கெட், செஸ், நீச்சல், டான்ஸ், கையெழுத்து, பாட்டுன்னு ஆரம்பிச்சாங்க, சரின்னு பார்த்தா, அது பாட்டுக்குப் போயிட்டே இருக்கு. இங்கே டார்கெட் குரூப் பெரும்பாலும் மூன்றில் இருந்து 10,12 வயசுக்குள்ள இருக்கிற பசங்கதான். பத்து வயசுப் பசங்களுக்கு எதுக்குங்க பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் கோர்ஸ்? போன வருஷம் மிமிக்ரி கோர்ஸ் போன எங்க பக்கத்து வீட்டுப் பயபுள்ள மேனேஜர் மாதிரி போன்ல பேசி அவங்கப்பாவைக் கலாய்க்குது.

ஆபீஸ் கொலீக்ஸ் பசங்க ரெண்டு பேர் நடைப் பயிற்சி கோர்ஸ் போறாங்க. என்னவோ நடக்கட்டும்... டும். ஆய கலைகளே 64 தான். ஆனா இவிய்ங்க நடத்துற கோர்ஸ்கள் 1,004 தாண்டுதேய்யா. நம்ம பர்ஸ் கதறி அழுவுதே. இந்த சம்மர் கோர்ஸ்ல இருந்து தப்பிக்க எதுனா கோர்ஸ் இருக்கா?

அடுத்த அட்டாக், டூர். நமக்குத் தெரிஞ்ச மிஸஸ் காயத்ரி குலுமணாலி போய் வந்து ஃபேஸ்புக்ல போட்டோவா போட்டுத் தள்ளி இருப்பாங்க. மிஸ்டர் ஜெயராம் அமெரிக்கா போய் அங்கே இருந்தே யுடியூப்ல சேனல் ஆரம்பிச்சு வீடியோவை எல்லாம் அப்லோடி இருப்பார். நமக்கு லிங்க் அனுப்பியிருப்பார். நாலு ஃபாரீன் சாக்லேட் ப்ளஸ் ரெண்டு டாய்ஸ் எக்ஸ்ட்ராவா அப்புறம் வரும்.

வீட்டம்மாவும் பசங்களும் சூடேற, இதைவிட ஒரு சிறந்த சமாசாரம் வேணுமா என்ன? இப்போதான் டபுள் பூஸ்டரோட ஒன்றரை டன் ஏ.சி வாங்கி இ.எம்.ஐ ஆரம்பிச்சிருப்போம். டூர் எல்லாம் நம்ம பட்ஜெட் தாங்குமா? சரி, பிள்ளையார் மாதிரி அம்மையப்பனை சுத்தி ஞானப் பழத்தை அடையலாம்னு யோசிச்சு பீச், படம், மால், பக்கத்துல இருக்கிற ஒரு ஹாட் ஸ்பாட்னு ஏதோ ரெண்டு 'ஆயிரம் நம்பர்களை’ டயல் பண்ணி கால் டாக்ஸியியில் சுத்தி வீடு வந்து சேர்ந்ததோட திருவிளையாடல் முடியும்னு நாம கணக்கு போட்டிருப்போம். ஆனா, எப்பவும் போல அங்கதான் ஒரு ட்விஸ்ட் வரும். ரிட்டர்ன் ஆகிட்டு இருக்கும்போதே சொந்த பந்தம்ஸ்கிட்டே இருந்து ரிங்டோன் அடிக்கும். ரெண்டு நாள் கழிச்சு உங்க வீட்டுக்கு வர்றோம்னு திருவிளையாடல் பார்ட் 2 ஸ்டார்ட்ஸ்.

கடையில இருக்கே தங்கம், உங்க பர்ஸுக்கு வந்ததே பங்கம். அட்சய திரிதியை ஆப்புகள் வேறு இந்தக் கொடும் கோடையில்தான் வரும். ஜவுளிக் கடையில் சம்மர் ஸ்பெஷல் தள்ளுபடி போட்டு நம்மை உண்டு, இல்லைனு ஆக்கிடுவாங்க.

நம்ம பர்ஸை, பாஸ்புக்கை, கிரெடிட் கார்டை எல்லாத்தையும் பாலைவனமா ஆக்குறதுதான் மொத்த அஜெண்டாவும். வண்டியை சர்வீஸ் விடணும், ஒரு நல்ல மொபைல் வாங்கணும், இப்படி நீங்க பிளான் போட்டு இருந்ததை விடுங்க, ரொம்பநாளா ஒரு ஃபாரீன் ஜட்டி வாங்கணும்னு யோசிச்சுவெச்சிருப்பீங்களே... ம்ஹூம், நோ சான்ஸ்! உஸ்ஸப்பா... என்னா வெயிலு!

- ப. நரசிம்மன்