'மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று’னு மாறி மாறி மாறி மாறிப் பல பேர் சொல்லிவிட்டார்கள். கொசுவத்தி கொளுத்திவெச்சு நம் வாழ்க்கையில ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தா, எல்லா மாற்றங்களுக்கும் பின்னால (முன்னால?) இருக்கிற விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். அப்படியே ஒரு ரவுண்டு போலாமா?

ரெண்டு பட்டனை அமுக்கிட்டு வாட்டர் கேமும் வளைபாதையோட நடு வட்டத்துல பால்ரஸ் குண்டுகளைக் சேர்க்கிற விளையாட்டுமா விளையாடித் திரிஞ்ச பரம்பரையோட லேட்டஸ்ட் வெர்ஷன்தான் அகலமான ஐ பாட்ல டெம்பில் ரன் கேம் விளையாடுறேன்னு சொல்லிட்டு வேர்த்து விறுவிறுத்து கட்டை விரலைத் தேய்ச்சுக்கிட்டு இருக்காங்க, கட்டை விரல் வித்தகர்கள்!

காதல்னு வந்தாலே வைகை டேம்லயும் மேட்டூர் டேம்லயும் மரத்தைச் சுற்றி டூயட் பாடிட்டு லவ் பண்ணின ஹீரோ, ஹீரோயின் பரம்பரையோட லேட்டஸ்ட் வெர்ஷன்தான், கண்ணை மூடி கனவுல நுழைஞ்சாலே சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, எகிப்துனு ஒரே பாட்டுக்கு ஏழெட்டு நாடு சுத்திட்டு வந்திடுறாங்க, ஓசியில உலகம் சுற்றும் வாலிபர்கள்!

பாதத்தைச் சுற்றி வேலி போட்ட மாதிரி பெல்ஸ் பேன்ட்டும், யானையோட காதை கட் பண்ணி ஒட்டின மாதிரி அகல காலர் வெச்ச சட்டையும் போட்டுக்கிட்டு பந்தா பண்ணின பரம்பரையோட லேட்டஸ்ட் வெர்ஷன்தான், கிழிச்சுவிட்ட ஜீன்ஸ் பேன்ட்டையும் ஒட்டிப்பிடிச்ச டிஷர்ட்டையும் வாரக்கணக்காப் போட்டுக்கிட்டு, வாடை தெரியாம இருக்க ஃபாரீன் சென்ட் போட்டுக்கிட்டு ரோமியோவாட்டம் திரியுறாங்க. அப்பவும் இப்பவும் மாறாதது சென்ட் பாட்டில் மட்டும்தான்!

'ஸ்மைல் ப்ளீஸ்’னு ஸ்டுடியோக்காரர் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் சிரிக்க யோசிச்சு, வெறப்பா முறைச்சபடி போட்டோ எடுத்து ஃபிரேம் போட்டு மாட்டின பரம்பரையோட லேட்டஸ்ட் வெர்ஷன்தான், பாத்ரூமுக்குள்ள நுழையுறப்போ ஒரு போட்டோ, உள்ளே உட்கார்ந்த பிறகு 'ஐம் வெயிட்டிங்’ னு சொல்லிட்டு ஒரு போட்டோ, வேலை முடிஞ்சு வந்த பிறகு 'சக்ஸஸ்’னு சொல்லிட்டு ஒரு போட்டோனு ஃபேஸ்புக்கில் போட்டோவா போட்டுத் தாக்குறாங்க. அளவுக்கு மிஞ்சினால் போட்டோவும் நஞ்சு!

கருவேலங்காட்டுல கோஷ்டியா சேர்ந்து கரட்டாண்டி அடிச்ச, பன்னியை ஓடவிட்டு காலை உடைச்ச, கழுதைக்கு மூக்கணாங்கயிறு கட்டி சவாரி பண்ணின சேட்டைக்கார பரம்பரையோட லேட்டஸ்ட்தான்

ஆண்ட்ராய்டு போன்ல ஆங்கிரி பேர்டை வெச்சு பன்னியை அடிச்சுட்டு இருக்குது. இதுல பந்தா வேற!

பஞ்சரான சைக்கிள் டயரைக் குச்சியால தள்ளிக்கிட்டே போட்டி நடத்தின பரம்பரையோட லேட்டஸ்ட்தான் பட்டணத்துல ஹெவி டிராஃபிக்ல பைக் ரேஸ் விட்டு அலற வெச்சுக்கிட்டிருக்காங்க. முன்னதுல டயருதான் பஞ்சராச்சு... பின்னதுல உயிரே பஞ்சராகுறதுதான் கொடுமை!

டப்பா ட்ரான்சிஸ்டரை காதோட ஒட்டி வெச்சு கிரிக்கெட் ஸ்கோர் கேட்டுக்கிட்டு பந்தா பண்ணின பரம்பரையோட லேட்டஸ்ட் வெர்ஷன்தான், டெட்லைன் புரொஜெக்ட்டுக்காக சின்ஸியரா ஆபீஸ்ல ஒர்க் பண்றப்பவும் சைடுல ஆன்லைன் கிரிக்கெட் ஸ்கோரைத் திருட்டுத்தனமா மொபைலில் பார்த்து புல்லரிச்சுக்கிட்டிருக்கு!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்