ஆந்திராவைத் தாண்டி மிளகாயின் காரம் ஃபேஸ்புக் வழி வழிந்ததற்குக் காரணம் பாலகிருஷ்ணா நடித்த 'லெஜண்ட்’ படம் 50 நாட்கள் ஓடிய கொண்டாட்டம்தான். 'பாலையா காரு லெஜண்டு’ என படத்தின் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் ஷேர் ஆகின. படமும் அதிரிபுதிரி ஹிட் ஆனதில் பாலையா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். படத்தில் அவர் பயன்படுத்திய பைக்கை 'லெஜண்டரி பைக்’ என நாமகரணம் சூட்டி ஆந்திரா முழுக்க ரவுண்ட் அடிக்க வைத்தது பட யூனிட். அந்த பைக்கைப் பார்க்கவும் அதில் உட்கார்ந்து போட்டோ எடுக்கவும் அத்தனை போட்டா போட்டி. அந்தப் படங்களும் இணைய உலா வருகின்றன. பாலையா ஒஸ்தாவய்யா!

'ரொம்ப போர் அடிக்குது... என்ன படம் பார்க்கலாம்?’னு விராட் கோலி ட்விட்டர்ல கேட்டது குத்தமாய்யா? ஒருத்தர் 'வீரம்’ படத்தை சிபாரிசு செஞ்சிருக்கார். அதை எடுத்து வெச்சு கலாய்த்து இருக்கிறார்கள் சிலர். 'வீரம்’ நல்ல படம்தானே? நான் சரியாத்தான் பேசுறேனா?

அலெக்ஸ் சாக்கனை இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் கொஞ்சம் பொறாமையோடு ஷேர் செய்கிறார்கள். அலெக்ஸ் செய்த சாகசம் அப்படி. மூன்று வருடங்கள். அதாவது 600 நாட்களில் 36 நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறார். எப்படி? தன் பைக்கில். 'தி மாடர்ன் மோட்டார் சைக்கிள் டைரிஸ்’ என்று இந்த சாகசப் பயணத்துக்குப் பெயர் சூட்டி உள்ளார். அதை அழகான செல்ஃபி வீடியோவாக 360 டிகிரி வீடியோப் பதிவுகளாக Around the World in 360° Degrees - 3 Year Epic Selfie என தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இரண்டு லட்சம் கிலோ மீட்டர் அந்த மோட்டார் சைக்கிள் பயணித்திருக்கிறதாம். 75 கடினமான எல்லைகளைக் கடந்துதான் இந்த சாகசப் பயணத்தை சாத்தியமாக்கி இருக்கிறார் அலெக்ஸ். அவற்றுள் இந்தியாவும் அடங்கும். மூன்று நிமிட செல்ஃபி வீடியோவை (இந்த லின்க்: https://www.youtube.com/watch?v=VTlXttQL_Yk -ல்) பார்த்து நீங்களும் பொறாமைப்படுங்களேன். சூப்பர்யா!

- ஊப்ஸ்