'அஞ்சே ரூபாயில் பாங்காக் பறக்கலாம்’ போட்டியில் வென்ற டைம்பாஸ் வாசகர் சென்னையைச் சேர்ந்த முகம்மது ரிஸ்வானின் பயண அனுபவம் இந்த வாரம்...

''முதலில் விமான அனுபவத்தைச் சொல்லியே ஆகணும். ஏதோ பணக்கார வீட்டுக் கல்யாணத்துக்குப் போகும் மிடில் கிளாஸ் மாதவன்கள் போல தயக்கத்துடனேயே சென்றோம். எங்களில் பலருக்கு முதல் விமான அனுபவம் என்பதாலும் இருக்கலாம். ஆனால் விமானத்தினுள், ''மாப்ளே. பேக்கை இங்கே வைடா'', ''மச்சி. செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணுடா'' போன்ற தாம்பரம் டு எக்மோர் ட்ரெய்னில் கேட்பது போன்ற தமிழ்க் குரல்களே விமானம் முழுக்க ஒலித்தது இன்ப அதிர்ச்சி.

விமானத்தில் தவிச்ச வாய்க்கு தண்ணீர்கூட ஆனை விலை சொன்னதால் நம் சக நண்பர் ஒன்ஸ் போனால்கூட காசு கேட்பார்களோ என்று அடக்கிக்கொண்டு அவஸ்தைப்பட்டார். ஆனால், விமானம் லேண்ட் ஆகும்போது ரோலர்கோஸ்டரில் இறங்கும்போது ஒரு பந்து வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருளுமே... அப்படி ஒரு பரவச அனுபவத்தை உணர்ந்தோம்.

இறங்கியதும் பட்டாயா போனோம். அங்கு காலை உணவே பலவகைப் பழங்கள், பிரட், முட்டை, சிக்கன், பச்சைக் காய்கறிகள் மற்றும் பிளாக் டீ என அமர்க்களத்துடன் ஆரம்பமானது.

அங்கே வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எங்கள் அனைவரையும் தண்ணியில் மிதக்கவிட்டார்கள். அந்தத் தண்ணி இல்லை பாஸ். நாங்கள் போன நேரம் அங்கே 'தண்ணீர் திருவிழா’ (சஸ்பென்ஸை மூன்று வாரமும் அனுபவக் கட்டுரை எழுதி உடைத்துவிட்டார்களே சக வாசக நண்பர்கள்!) கொளுத்தும் வெயிலுக்கு தண்ணீர்த் திருவிழா செம ஜாலியாய் இருந்தது. நாள் முச்சூடும் குளிர்நீரில் நீராடித் திளைத்தது பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியது.

ஆனால், அத்தனை தண்ணீர் செலவு செய்யும் அவர்கள் டாய்லெட்டில் கழுவுவதற்கு தண்ணீருக்குப் பதில் டிஷ்யூ பேப்பர் இருந்தது மில்லியன் டாலர் பேரதிர்ச்சி. குடம் குடமாய் தண்ணீர் செலவு செய்யும் நமக்கு அங்கே வெறும் டிஷ்யூ பேப்பர்களைப் பார்த்தவுடன் மயக்கம் வராத குறைதான். இருந்தாலும் குப்பை போடவைத்திருந்த டஸ்ட் பின்னை வைத்து எப்படியோ சமாளித்துக்கொண்டோம். தாய்லாந்து போறவங்க முதலில் மக் வாங்கிக்கிங்கப்பா. இல்லைன்னா அவ்ளோதான். ஹிஹிஹி!

அகஷார் டான்ஸ் புரோகிராமில் ஆடிய நங்கைகளின் அழகில் மயங்கிய நம் நண்பர்கள் ''கோடி கொடுத்தாவது நாம இவங்களைக் கட்டிக்கலாம்'' என்று ஜொள்ளுவிட்டபோது ''அவங்க எல்லாம் மங்கைகள் இல்லை. திருநங்கைகள்'' என்று எங்க டூரிஸ்ட் கைடு சொன்னவுடன், நண்பர்களின் முகத்தில் ஷாக்கோ ஷாக்.

நம் ஊர் குளத்தில்கூட கால் நனைக்கப் பயப்படும் எனக்கு கடலில் குதித்தது, குளித்தது, பாராசூட்டில் பறந்தது எல்லாம் நான்தானா என நம்பவே முடியலை. (கொஞ்சம் இருங்க கிள்ளிப் பார்த்திட்டு எழுதுறேன்... நிஜம்தான்) அந்த அளவுக்குப் பாதுகாப்போடு பரவசத்தை அனுபவித்தோம். அதிலும் அந்த பாராசூட் பயணம்... சான்ஸே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பறக்க வேண்டியது.

பாங்காக்கில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்தாலும் வானுயர்ந்த கட்டடங்கள் எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. பாங்காக்கில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இந்தியருக்குச் சொந்தமானது என்பதை அங்கு போனவுடனேயே புரிந்துகொண்டோம். கப்பை உடைத்தால் எவ்வளவு? ஹீட்டரை உடைத்தால் எவ்வளவு? என ஒவ்வொன்றையும் 'உடைத்தால் எவ்வளவு?’ என்று ஒரு பெரிய லிஸ்ட்டைக் கையில் தந்தார்கள். அதற்குப் பிறகு எல்லாவற்றையும் கவனத்துடனே கையாண்டோம். சாப்பாட்டு விஷயத்தில் தாராளமோ தாராளம். அறுசுவை விருந்தில் திளைத்துப்போனோம். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. காரம் இல்லை பாஸ். ஆனந்தம். பரமானந்தம்!

பாங்காக்கில் உள்ள மிருகக்காட்சி சாலையில் எல்லா மிருகங்களும் கொத்துக்கொத்தாக இருந்ததைப் பார்த்ததும் மிரட்சியாக இருந்தது. பேருக்கு ஒன்றிரண்டு மிருகங்கள் இருக்கும் நம் ஊர் ஜூவுக்கு ஏர் ஏசியாவில் அனுமதி பெற்று நான்கைந்து சிங்கக் குட்டிகளையும் ஒட்டகச் சிவிங்கிகளையும் அள்ளிட்டு வரலாம் என்று நினைத்தோம். (ஃப்ளைட்ல ஏழு கிலோவுக்கு மேல கொண்டுவந்தா எக்கச்சக்கமா தண்டம் அழணும்னு சொன்னதால கழுதை, கழுதைப்புலின்னு எல்லாத்தையும் அங்கயே விட்டுட்டு வந்துட்டோம். ஹிஹிஹி!)

கடைசியா தாய்லாந்தில் காணக் கிடைக்காதவை: தெருவோர டீக்கடைகள், டாய்லெட்டில் சொம்பு, சிடுமூஞ்சிக்காரர்கள் (சிரிப்பே அவர்களின் சிறப்பு!) பிளாட்ஃபாரவாசிகள், செல்போனில் பேசிக்கொண்டே திரிபவர்கள், டிராஃபிக்கில் ஹார்ன் அடிப்பவர்கள், தெருவோரக் குப்பைக் குவியல்கள். அதற்காகவே ராயல் சல்யூட் அடித்து அங்கிருந்து ஜூட் விட்டோம். அதே மிதப்போடு சென்னை விமான நிலையம் வந்து 'சொர்க்கமே என்றாலும்... நம்மூரைப்போல வருமா’ பாடலைப் பாட எத்தனித்தபோது, கலகலப்பின்றி தூங்கி வழிந்த விமான நிலையம், சந்தேகக் கண்ணோடே பார்த்துத் துளாவிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், சொத்தை எழுதிக் கேட்ட ஆட்டோக்காரர்கள் என எல்லாம் சேர்ந்து பாங்காக்கு ஓ போட வைத்தது!