தேர்தல் முடிவுகளின்போது கட்சி சார்ந்த சேனல்களைப் பார்ப்பதே சுவாரஸ்யமான விஷயம். 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது, ஜெயா

டி.வி-யில் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். அந்தத் தேர்தலில்தான் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 40க்கு 40 சீட்டுகளைப் பெற்றது. ஆரம்பத்தில் முடிவு விவரங்களை ஒளிபரப்பிக்கொண்டிருந்த ஜெயா டி.வி. திடீரென்று 'கர்நாடகா தொகுதிகளில் அ.தி.மு.க. முன்னிலை’ என்று ஸ்க்ரோலிங் போட ஆரம்பித்தது. மற்ற டி.வி-களிலோ 'தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை’ ஸ்க்ரோலிங். ஒரு மணி நேரம்தான் இருக்கும். ஜெயா டி.வி-யில் 'கர்நாடகா’ ஸ்க்ரோலிங்கையும் நிறுத்திவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி எம்.ஜி.ஆர். படம் போட்டார்கள்.

இப்போது நிலைமை தலைகீழ். ஆனாலும் ஜெயா டி.வி. திருந்துவதாக இல்லை. மற்ற சேனல்களில் பல்வேறு கட்சிக்காரர்கள் தேர்தல் முடிவுகளை அலசத் தயாராக இருக்க, ஜெயா டி.வி-யிலோ ஜோதிடர்கள் ஜெயலலிதாவின் ஜாதகத்தை அலசோ அலசு என்று அலசினார்கள். கொஞ்ச நேரத்திலேயே சுதாரித்து, வெற்றிச் செய்திகளைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டது ஜெயா டிவி. தி.மு.க-வுக்கு முட்டைதான் என்று தெளிவாகத் தெரிந்த மதிய நேரம் ஜெயா டி.வி.யைத் திருப்பினால்... கறுப்பு, வெள்ளையில் இளவயது ஜெயலலிதா கையில் பூரண கும்பத்துடன் நடக்க, 'தொட்ட இடம் துலங்க வரும் குலமகளே வருக’- உற்சாகமாகப் பாடல் ஒலித்தது. சரி என்று ரிமோட்டை கலைஞர் டி.வி-க்கு மாற்றினால் படம் ஓடிக்கொண்டிருந்தது. 'அபூர்வ சகோதரர்கள்’. உலகத்துக்கு ஏதோ கருத்து சொல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நான் கலைஞர் டி.வி-யை வைத்த நேரம் ஸ்ரீவித்யா வாயில் விஷத்தை ஊற்றும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அவ்வ்வ்வ்வ்வ்வ்!

இருந்தாலும் அழகிரிக்கு இவ்வளவு அதுப்பு ஆகாதுங்க! காக்கா உட்கார பனம்பழம் விழுந்தாக்கூட காக்காவைக் காரணம் காட் டலாம். ஆனா காத்து வீசி பனம்பழம் விழுந்ததுக்கும் தான்தான் காரணம்கிறாரே? தி.மு.க. அத்தனைத் தொகுதிகளிலும் தோற்றதுக்கு அழகிரியோட செல்வாக்குதான் காரணம்னா, வைகோ தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வாங்கி

ஜெயிச்சிருக்கணுமே? அழகிரியைச் சந்திச்சவங்க லிஸ்டை எல்லாம் பாருங்க. வைகோ, ஹெச்.ராஜா, தேனி ம.தி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரம். அத்தனை பேரும் தேர்தலில் காலி. நல்லவேளை பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னாருன்னு மோடி அழகிரியைப் பார்க்கலை!

இந்த தா.பாண்டியனுக்கு விட்ட குறை, தொட்ட குறையா இன்னும் அ.தி.மு.க. பாசம் இருக்குனு நினைக்கிறேன். தேர்தலில் தோற்றதும் ''அ.தி.மு.க. உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள்''னு அறிக்கை விட்டிருக் கார். பா.ஜ.க, பா.ம.க. பேரைக்கூட சொல்லவில்லை. எல்லாத்தையும்விடக் கொடுமை, நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் நோட்டோ பெற்ற வாக்கு சதவீதம் 1.4. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்றதோ அதைவிடக் குறைவு 0.5. என்ன கொடுமை காம்ரேட்ஸ்!