அமெரிக்கச் சிறையில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற ஈவிரக்கமற்ற குற்றவாளிகளைக்கொண்ட மூன்று பெரிய குழுக்கள் உள்ளன. அதில் 'ஆர்யன் பிரதர்ஹுட்’ என்கிற குழுதான், இருப்பதிலேயே கொடூரமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க சிறைத் துறையின் அறிவிப்பின்படி ஒட்டுமொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கையில் ஒரு சதவிகிதமே உள்ள இந்தக் குழுவில்தான் ஓட்டுமொத்த அமெரிக்காவின் 20 சதவிகித கொலைக் குற்றவாளிகள் உள்ளனர்.

வெள்ளை இனவெறியர்களால் நடத்தப்படும் இந்தக் குழு ஹிட்லரின் ஆதிக்கவாத கருத்தியலான ஆரியவாதத்தினை, தனது குழுவின் பெயராக வைத்திருக்கிறது. இதன் உறுப்பினர்கள் அனைவரின் முதுகிலும் ஸ்வஸ்திக் சின்னத்தின் டாட்டூவும் இடது கையில் ஸ்பேட் என்கிற பூ படமும் இருக்கும் (அதுதான் பாஸ்... சீட்டுக்கட்டுல பார்ப்போமே). 1960-கள் வரை அமெரிக்க சிறைகள் நிறரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதன் பின் அவை அனைத்து நிறத்தவரும் கலந்து இருக்குமாறு மாற்றப்பட்டது. பின் சிறைக்குள் எழுந்த நிறக் கலவரங்கள்தான் இந்தக் குழு உருவாகக் காரணம் என்கிறார்கள். சிறைக்குள் போதைப்பொருள் விற்பனை, உள்ளிருந்தபடியே வெளியே காசுக்காக கொலை செய்வது, சிறைக்குள் ஆண் விபச்சாரர்களின் ஆதிக்கம் என்று கொடி கட்டிப் பறக்கின்றன இவர்களது அட்டகாசங்கள்.

'கருப்பு கொரில்லா குடும்பம்’ என்கிற கறுப்பினத்தவர் மற்றும் ஆசியர்களின் குழுதான் ஆரியன் பிரதர்ஸின் ஜென்ம விரோதிகள். ஒரு கட்டத்தில் கருப்பு கொரில்லாக்களின் நிலை மேலே போகவும், இவர்கள் அமெரிக்க சிறையிலிருக்கும் முன்றாவது பெரிய குழுவான மெக்ஸிகன் மாஃபியாவுடன் இணைந்து செயல்படத் துவங்கினர். 2002-ல் உறுப்பினர்களின் குற்றச்செயல்களைக் கணக்கெடுத்து இதன் முக்கிய தலைவர்கள் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது போலவே 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளனவாம்.

எல்லாமே கொலவெறி குரூப்புதான்யா!

- செந்தில்குமார்