படம் ரிலீஸானால், தங்கள் அபிமான நடிகருக்கு கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என ரணகளம் செய்வார்கள் நம் ஊர் ரசிகர்கள். ஆனால், 'ரசிகன்னா இப்படித்தான்யா இருக்கணும்’ என 'அட’ போடவைக்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ரியான் பெய்ட்ச்.

1994-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட 'ஸ்பீடு’ ஹாலிவுட் படத்தின் அதி தீவிர ரசிகர்தான் இந்த ரியான். மாஸ்கோவின் இடாஹோ நகரில் வசித்துவரும் ரியான், பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றபோது 'ஸ்பீடு’ படத்தின் 'டேப்’களைப் பார்த்திருக்கிறார். 'கிறிஸ்துமஸ் பரிசாக வீட்டில் கொடுக்கலாம்’ என ஆறு டேப்களையும் அள்ளியவருக்கு, சில நாட்கள் கழித்து இன்னொரு கடையிலும் 'ஸ்பீடு’ படத்தின் 30 'டேப்’கள் கண்ணில்பட, அதையும் வாங்கியிருக்கிறார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக 'ஸ்பீடு’ படத்தின் 'டேப்’களைச் சேகரிப்பதில் ஆர்வமான ரியானிடம், தற்போது உள்ள 'டேப்’களின் எண்ணிக்கை 550-க்கும் மேல். 'பிடிச்ச படம். கிடைக்கிற டேப்களைச் சேகரிக்கிறார். இதில் என்ன ரசனை?’ என்றுதானே யோசிக்கிறீர்கள். ரியானின் கலவர ரசனை இப்போது 'ஸ்பீடாகப்’ பறந்துகொண்டிருக்கிறது.

கிடைக்கிற 'டேப்’களைச் சேகரித்துக்கொண்டிருந்தவர், தற்போது சொந்தமாக ஒரு பஸ்ஸையே வாங்கி, அதை 'ஸ்பீடு’ படத்தில் வரும் பஸ்ஸின் கலரிலேயே பெயின்டிங் செய்து, ''உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு 'ஸ்பீடு’ படத்தின் டேப்களையும் சேகரிக்காமல்விட மாட்டேன்'' என சபதம் எடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்திருக்கிறார். இந்த வினோத முயற்சிக்கு 'வேர்ல்ட் ஸ்பீடு ப்ரொஜக்ட்’ எனப் பெயரிட்டுள்ளார் ரியான். 'இதெல்லாம் எதுக்கு?’ என குடும்பமும், நண்பர்களும் கடிந்துகொண்டதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த முயற்சிக்கென்றே பிரத்யேகமான வலைப்பூ, ஃபேஸ்புக் பேஜ் என சகல இணைய வழிகளிலும் புகுந்து விளையாடி, 'உங்களிடம் உள்ள 'ஸ்பீடு’ பட 'டேப்’களை அனுப்பிவைங்க ஃப்ளீஸ்’ என ரெக்வெஸ்ட் வைக்கிறார் ரியான்.

வரும் ஜூன் 10, 2014 அன்று 'ஸ்பீடு’ படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவாகின்றன. அதற்குள் 'ஸ்பீடு’ படத்தின் அத்தனை 'டேப்’களையும் சேகரித்துவிட வேண்டும் என வேகம் காட்டும் இவரிடம், ''எப்படி இந்தப் படத்துக்கு இவ்வளவு தீவிர ரசிகரா இருக்கீங்க?'' என்று கேட்டால், ''காரணமெல்லாம் தெரியலை. அந்தப் படம் பிடிக்கும். படத்துல பஸ்ஸுல இருக்கிற பயணிகளைக் காப்பாற்ற வேகமா போற மாதிரி, 'ஸ்பீடு’ படத்தோட 'டேப்’களைக் காப்பாற்ற நானும் வேகமா இருக்கேன், தட்ஸ் ஆல்'' என்கிறார்!

- கே.ஜி.மணிகண்டன்