இந்திய சினிமா கிரீடத்தின் ரத்தினக்கல் 'பதேர் பாஞ்சாலி’. அதில் குழந்தை நட்சத்திரம் அபுவாக நடித்த சுபிர் பானர்ஜியை யாரால் மறக்க முடியும்? அந்த சுபிரின் வாழ்க்கையை மையமாகவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது டாக்குமென்ட்ரி பாணியிலான ஒரு சினிமா 'அபுர் பாஞ்சாலி’. இயக்குநர் சத்யஜித்ரேயின் 'ட்ரையாலஜி’ என வர்ணிக்கப்படும் மூன்று படங்களின் தொடர்ச்சியாக அவருக்கு மரியாதை செய்ய நினைத்த கௌசிக் கங்குலி என்பவரால் இயக்கப்பட்ட படம். பல திரைப்பட விழாக்களில் கலக்கிவரும் இந்தப் படத்தை சத்யஜித்ரே எடுத்த அதே '35 எம்.எம். கருப்பு வெள்ளை’ பாணியில் எடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தைப்பற்றி பார்க்கும் முன் சிறு முன்னுரை.

என்ஜோ ஸ்டயோலா, இத்தாலியக் குழந்தை நட்சத்திரம். 1948-ல் ரிலீஸான உலகப்புகழ் இத்தாலிய இயக்குநர் விட்டோரியோ டி சிகாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான 'பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தில் புருனோ ரிச்சி கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர். 1977 வரை மீடியாக்கள் அவரை ஃபாலோ செய்தன. 'பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்துக்குப் பிறகு இரண்டு படங்கள் நடித்தவர், காணாமலே போனார். இப்போது 74 வயது ஆகும் அவர், கணித ஆசிரியராக ரோம் நகரில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் 'ஈ.டி’ படத்தில் எலியட் பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹென்ரி ஜாக்ஸன், இப்போது கிடாரிஸ்ட்டாக அமெரிக்க ராக்பேண்ட் குழு ஒன்றில் இருக்கிறார்.

சலனப்படங்கள் காலத்தில் சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்’ படத்தில் நடித்த ஜாக்கி கூகன், ஒரு புதுச் சட்டம் உருவாகுவதற்குக் காரணமாய் இருந்தார். அந்தப் படத்தில் ஜான் கேரக்டரில் நடித்த அவரை தாயும் வளர்ப்புத் தந்தையும் சேர்ந்து அவர் சம்பாதித்தது அனைத்தையும் தாங்களே செலவு செய்த விபரம் தெரியவந்தது. குழந்தை நட்சத்திரங்களுக்கான உரிமையை இவர் சொந்த வாழ்க்கையை உதாரணமாகவைத்து, அமெரிக்க அரசு சட்டம் கொண்டுவந்தது.

இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு? பதேர் பாஞ்சாலி 'அபு’ கேரக்டரில் நடித்த சுபிர் பானர்ஜி, அந்தப் படம் உலகப் புகழ் பெற்றபோதும் கண்டுகொள்ளப்படாமலே போனார். அந்த பவர்ஃபுல் குழந்தை நட்சத்திர அபு கேரக்டருக்காக வங்காள மாநிலம் முழுவதும் அலைந்து திரிந்திருக்கிறார் ரே. பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் விளையாடிக்கொண்டிருந்த சுபிரை ரேயின் மனைவி பிஜொயா, கணவரிடம் சொல்லி இருக்கிறார். துள்ளிக் குதித்த ரே, மிகுந்த சிரமப்பட்டுதான் சுபிரின் பெற்றோரை ஓகே சொல்லவைத்திருக்கிறார். 'இன்று உங்கள் மகனையும் என்னையும் யாருக்குமே தெரியாது. ஆனால், நான் எடுக்கப்போகும் இந்தப் படத்தின் மூலம் நாங்கள் இருவருமே ஒட்டுமொத்த வங்காளிகளுக்கும் தெரிந்தவர்களாகிவிடுவோம்’ என்ற சத்யஜித்ரேயின் வார்த்தைகளை நம்பி, சுபிரின் தந்தை மகனை நடிக்க அனுமதித்திருக்கிறார். ஆனால் சுபிருக்கு நடிப்பு அவ்வளவு சுலபமாக வசப்படவில்லை. சவாலாக எடுத்துக்கொண்டு சாதித்துக்காட்டினார் ரே.

உதாரணத்திற்கு உலகமே கொண்டாடிய ஒரு காட்சி. புல்வெளியில் தன் சகோதரியைத் தேடியபடி ரயிலைப் பிடிக்க அபு ஓடும் காட்சி. அபு 'ஜெர்க்’ கொடுத்து ஓட வேண்டும். ஆனால், அவன் ஓடியதோ பெரும் ஓட்டம். அதனால் புத்திசாலித்தனமாக ரே ஒரு காரியம் செய்தார். அபுவுக்கே... அதாவது சுபிருக்கே தெரியாமல் ஆளுயர புல்வெளிக்குள் ஆங்காங்கே கற்களைப் போட்டுத் தடைகளை ஏற்படுத்தினார். எல்லாப் பக்கமும் கண்களால் தேடியபடி ஓட வேண்டும் என்பதற்காக அவனுக்கே தெரியாமல் புல்வெளிக்குள் தன் அசிஸ்டென்ட்ஸ்களைப் படுக்கவைத்திருந்தார். இதனால் கவனம் சிதறி நின்று பார்த்து ஒரு கணம் திகைத்து மீண்டும் தடையைத் தாண்டி ரயிலைப் பிடிக்க ஓடியிருக்கிறான் சுபிர். படத்தில் வரும் இந்தக் காட்சியை 'கிளாஸிகல் பியூட்டி’ எனக் கொண்டாடுகிறார்கள்.

அப்படிப்பட்ட குழந்தை நட்சத்திரம் என்னவானான் என்ற தேடல்தான் இந்தப் படம். அபு என்ற சுபிர், ஜெர்மனியில் இருக்கிறாரா? இல்லை... கொல்கத்தாவின் பழமை வாய்ந்த மில் ஒன்றில் கடைநிலை ஊழியராகக் கஷ்டப்படுகிறரா? இல்லை என்றால், மத்திய அரசில் குமாஸ்தா வேலை பார்த்து வி.ஆர்.எஸ் வாங்கி பேரன் பேத்திகளோடு கடைசி நாட்களைக் கழிக்கிறாரா? என்று அவர் பற்றி எழும் பல்வேறு யூகங்களுக்கும் கொஞ்சம் புனைவு கலந்து இந்தப் படம் விடை சொல்கிறது.

படம் இப்போது எல்லாப் பெருநகரங்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சத்யஜித்ரே புகழை இப்படியும் பரப்ப முடியும் என்று நிரூபித்து இருப்பதோடு நாம் ரசித்த, நம் தலைமுறையில் காணாமல்போன குழந்தை நட்சத்திரங்கள் பற்றி நம்மை யோசிக்கவும் வைத்திருக்கிறது 'அபுர் பாஞ்சாலி!’

- ஆர்.சரண்