வாராவாரம் ஆரவாரமாய் 'அஞ்சே ரூபாய்ல பாங்காக் பறக்கலாம்’ போட்டியில் வெற்றி பெற்ற டைம்பாஸ் வாசகர்கள் தங்கள் பாங்காக் அனுபவங்களை எழுதினார்கள். இந்த வாரம் காரைக்காலைச் சேர்ந்த பா.பாலமுரளி கிருஷ்ணா...

''அடிச்சுப் பிடிச்சு கம்பெனியில் லீவு வாங்கியாச்சு. அடகுவெச்சு அமௌன்ட் தேத்தியாச்சு. அங்கே போய் எல்லாம் சுத்திப்பார்த்து ஜமாய்ச்சுடணும் என்ற எண்ணங்களுடன் விமான நிலையத்தில் காத்திருந்தோம். விமானம் ஏறுவதற்கு முன்பே ஒரு குடும்பமாக நாங்கள் வருவதற்கு உதவிய ரிஸ்வான் அண்ட் ஹுமாயுன் குடும்பத்திற்கு நன்றிகள் பல. (செய்நன்றி மறக்கக் கூடாது!)

முதல் நாளில் ஜெம் ஃபேக்டரி (GEM Factory), 3D Art Galary எனப் பார்த்து மகிழ மட்டுமே முடிந்தது. விலைதான் உச்சக்கட்டம். இரண்டாம் நாளில் கோரல் தீவுக்குச் செல்வதற்கு முன் பாராசூட் ஸ்லைடிங் அண்டர் சீ வாக் (Parasuit sliding Under Sea Wlak) என ஜமாய்த்தோம். கோரல் தீவில் எண்ணற்ற நம்மவர்களைக் காணமுடிந்தது. எங்கு சென்றாலும் இன்முகத்தோடு வரவேற்றார்கள். டைம்பாஸ் மூலம்தான் இந்த வாய்ப்பு என்றவுடன் அனைவரும் மகிழ்ந்தனர்.

இரண்டு நாட்கள்தான் என்றாலும் இரண்டு ஆண்டுகள் பழகியதைப்போல, வீதிகளில் இரவு நேர நடைப்பயணம் மேற்கொண்டோம். இரவு நேரங்களில்தான் தாய்லாந்து வீதிகள் களைகட்டுகிறது. ஒளி, ஒலி மிகுந்த பார்களால் மிளிர்கின்றது. பட்டாயா... செம பட்டாசு. சும்மா ஒரு வாக் போய் வந்தாலே சொர்க்கம்தான். பட்டய்யாவைப் பிரிய மனமில்லாமல்தான் பிரிந்தோம்.

பாங்காக்கில் முதல் நாளில் அங்கே உள்ள புத்த மதக் கோயில்களையும் வானளாவிய கட்டடங்களையும் ஆசை தீரக் கண்டு மகிழ்ந்தோம். மதிய உணவு Lotus Sukmit என்ற மாபெரும் ஹோட்டலில். செம டேஸ்ட். நம் ஊர் கடை என்பதால், ஃபுல் கட்டு கட்டினோம். அந்த ஹோட்டலில் ஒவ்வொரு வகையான உணவு வகைக்கும் ஒவ்வொரு தளம். நாங்கள் உண்டு மகிழ்ந்தது எட்டாம் தளத்தில். அங்கு இந்தியன் மீல்ஸ்தான் ஸ்பெஷல். சாப்பிட்டு முடித்த வயிற்றோடு (கையோடு என்பது பழசு பாஸ்.) அடுத்ததாகச் சென்ற இடம் ஓஸன் வேர்ல்டு (Ocean World) அரிய வகையான கடல் குதிரை, ஸ்டார் ஃபிஷ், வெள்ளை சுறா, டைகர் சுறா என எல்லாவற்றையும் எங்கள் கேமராவில் படம் பிடித்து மகிழ்ந்தோம்.

கார் பயணங்களில் யாரும் ஒருமுறைகூட ஹாரன் அடிக்கவில்லை. அத்தனை ஒழுங்கு. அந்த ஊரில் யாரும் யாரையும் தரக்குறைவாகப் பேசவோ, நடத்தவோ இல்லை. இத்தனை நாள் அங்கு இருந்தும் ஒரு தடவைகூட காவல் துறை வாகனங்களையோ, காவலர்களையோ பார்க்கவே இல்லை பாஸ்.

Safari World என்ற மிருகக்காட்சி சாலையில் அனைத்தும் நேர்த்தி. உராங் உட்டான் ஷோ, டால்பின் ஷோ, சீ லயன் ஷோ, எலிபென்ட் ஷோ என அனைத்தும் அட்டகாசம். யானை செய்த மசாஜுக்கும் வரைந்த ஓவியங்களுக்கும் கடும் கிராக்கி. திறந்தவெளி ஜூவில் புலி, சிங்கம், காண்டாமிருகம், மான்கள், ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை என அனைத்து மிருகங்களையும் படம் பிடித்து ரசித்து மகிழ்ந்தோம்.

இந்தப் பொன்னான வாய்ப்பை எங்களுக்கு அளித்த டைம்பாஸுக்கெல்லாம் பாஸ் டைம்பாஸ் டீமுக்கு நன்றிகளோ நன்றிகள்.

அடுத்த சுற்றுலாப் போட்டி எங்கே? எப்போ? சீக்கிரம் சொல்லுங்க பாஸ்!