அமெரிக்கரான ஃபியூகோ அலெக்ஸை கடல் மனிதன் என அழைக்கிறார்கள். தன் காதல் மனைவி தருவுடன் சேர்ந்து இவர் மேற்கொள்ளும் உலகக் கடல்களை அளக்கும் சாகசப் பயணம் இணையங்களில் உலா வருகின்றன. ‘http://www.worldtourstories.com’ என்ற தளத்தில் தங்களது உலகப் பயணத்தை அப்டேட் செய்துவருகிறது இந்தத் தம்பதி.

பாய்மரப் படகில் காற்றின் போக்குக்குத் தகுந்தாற்போல படகைச் செலுத்தி, கண்டங்களுக்கு இடையேயான கடல்களைத் தாண்டுவது என்பது உயிரைப் பணயம் வைக்கும் திகில் அனுபவம். அதை அனாயசமாகச் செய்வதற்கு நிறையப் பயிற்சிகள் வேண்டும்.

''ஒரு சின்ன கற்பனை செய்து பாருங்கள். கரீபியன் கடலில் செல்லும்போது படகின் காக்பிட் ஏரியாவில் அமர்ந்து ஒரு மாலை நேரத்தில் நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்து சாண்ட்விச்சை சாப்பிடுகிறீர்கள். எப்படி இருக்கும்? எங்களைப் பொறுத்தவரை அதுதான் உன்னத அனுபவம்'' என்கிறார் தரு.

உலகின் முக்கியக் கடல்களான ஆர்ட்டிக், பசிபிக், அட்லான்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் போன்றவற்றில் இவர்கள் பயணித்திருந்தாலும், இந்தியப் பெருங்கடல்தான் இவர்கள் கடக்க முடியாத கடல் என்கிறார்கள். ''ராட்சச அலைகள் என்பதோடு பரப்பளவில் மிகப் பெரிய கடல் பிராந்தியம் இது. உயிர்க்கொல்லி சுறாக்கள் நிறைந்த இந்தியப் பெருங்கடலைத் தொட்டுப்பார்த்ததோடு சரி. அதற்குள் காணாமல் போக விருப்பம் இல்லை. அங்கு செல்லவில்லை'' என்கிறார் ஃபியூகோ.

சாகசப் பயணத்தில் பலமுறை மரணத்தைத் தொட்டுத் திரும்பி இருக்கிறார் ஃபியூகோ. படகு பழுது நீக்கும் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர் என்பதால், அவரின் படகை அவரே ரிப்பேர் செய்துவிடுகிறார். 10 வருடங்களாக இந்த சாகசப் பயணம் தொடர்கிறது.

இந்தத் தம்பதியினரின் சாகசப் பயணத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த

டேவிட் வெல்ஸ்ஃபோர்டு என்ற 28 வயது இளைஞன் மினி கடல் சுற்றுலா போய் வந்துவிட்டார். ஃபியூகோவுடைய படகாவது கொஞ்சம் மாடர்ன் டைப் பாய்மரப் படகு. ஆனால் டேவிட்டுடையது 50 வருடப் பழமையான படகு. பசிபிக் மற்றும் கரீபியக் கடல் பிராந்தியத்தை ரவுண்ட் அடித்துத் திரும்பியுள்ள டேவிட், கூடவே அவரது நண்பர் கெவினை அழைத்துச் சென்றிருக்கிறார். குறும்பட இயக்குநரான அவர் டேவிட்டின் சாகசத்தை வீடியோவாகப் பல கோணங்களில் பதிவு செய்திருக்கிறார். 'ட்வெண்டி எய்ட் ஃபீட்- எ லைஃப் ஆன் எ லிட்டில் வுட்டன் போட்’ (Twenty Eight Feet: life on a little wooden boat) என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டு உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார்.

இவர்களின் தண்ணீர் தேசம்!

- ஆர்.சரண்