பாப் இளவரசி ஷகீரா பாடிய 'வாக்கா வாக்கா’ பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. 2014-க்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 'லா லா லா’ பாடலை (நம்ம எஸ்.ஏ.ராஜ்குமார் போட்ட 'லாலாலா’ இல்லீங்க!) வெளியிட்டிருக்கிறார் ஷகீரா. ரிலீஸான இரண்டே நாட்களில் நான்கு லட்சம் பேர் இந்த வீடியோவைப் (youtube/NizbAXUP5ak) பார்த்து வைரலை நடுங்கவைத்துவிட்டனர். அதெல்லாம் சரி அதென்ன 'லா லா லா’? ஒருவேளை ஷகீரா... விக்ரமன் சார் ரசிகையா இருப்பாங்களோ?

ஹாலிவுட் படமான 'மில்லியன் டாலர் ஆர்ம்ஸ்’ படத்தில் ரஹ்மான் தமிழில் என் சுவாசக் காற்றே படத்தின் பாடலான 'திறக்காத காட்டுக்குள்ளே...’வை அப்படியே பயன்படுத்தி இணையத்தில் ஷேர் ஆனது. இப்போது ரஹ்மானின் இன்னொரு பாடலும் ஹாலிவுட்டிற்குச் செல்ல இருக்கிறது. அமெரிக்க பாப் பாடகர் வில்லியம் ஆடம்ஸ் தனது புதிய ஆல்பமான 'பர்த்டே’-வில் ரஹ்மானின் மெட்டில் ஒரு பாடலைப் பாட விரும்பியுள்ளார். இதற்காக ரஹ்மானின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த ஆடம்ஸிற்கு இரண்டு பாடல்கள் மிகவும் பிடித்துவிட்டது. ஒன்று 'காதலன்’ படத்தின் 'பேட்ட ராப்’, இன்னொன்று அதே படத்திலுள்ள 'ஊர்வசி ஊர்வசி’. அதனால் ரஹ்மானிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிவிட்டார். 'ஊர்வசி ஊர்வசி’ பாடலை ஆங்கிலத்தில் எழுதவும் இணை கம்போசராகப் பணியாற்றவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரஹ்மான். இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்டிருக்கிறார் இசைப்புயல்! (www.facebook.com/arrahman) சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே... கலக்குது பாரு புயலே!

ஒரு வழியா 'கோச்சடையான்’ படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பொம்மைப் படம், ஊத்திக்கும், அது இதுன்னு சொன்னவங்களுக்கெல்லாம் ஓர் அதிர்ச்சி செய்தி, படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் வசூல் 42 கோடி, சேனல் ரைட்ஸ் எல்லாம் சேர்த்து 100 கோடிக்கு விற்பனையாகி யிருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே 125 கோடிதான். ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லா இடத்திலும் இப்போது 'கோச்சடையான்’ அலைதான். தலைவன்டா என்பதே ஒட்டுமொத்த வைரலின் குரல்!

'ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா'னு சொல்லவைத்து விட்டார்கள் இயக்குநர் விஜயும் அமலபாலும். அவர்களே பத்திரிகையாளார்களை சந்தித்து கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்து ஜூன் 12 கல்யாணம் என முறையாக அறிவித்து, எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். ''எங்கள் காதலுக்கு பத்திரிகையாளர் களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. நாங்கள் நட்பாகப் பழகிய காலத்திலேயே காதல் என கிசுகிசு எழுதி இப்போது திருமணம் வரை கொண்டுவந்திருக்கிறார்கள். என் தோழியையே திருமணம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என ஸ்டேட்மென்ட் தருகிறார் மாப்பிள்ளை. கங்கிராட்ஸ்!

- ஊப்ஸ்