Published:Updated:

குதுர குதுர... அதிர அதிர...

குதுர குதுர... அதிர அதிர...

குதுர குதுர... அதிர அதிர...

குதுர குதுர... அதிர அதிர...

Published:Updated:

பீச்சுல கடலே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு கெட்ட ஆட்டம் போடுற காலேஜ் கேர்ள்ஸை, 'எங்க... உங்க வீரத்தைக் குதிரைகிட்ட காட்டுங்க!’னு ஹார்ஸ் ரைடிங் கூட்டிட்டுப் போனோம்.

''இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா... ஆள விடுங்க!''னு பேக் அடிச்ச வினுப்பிரியாவுக்கு, ஹார்ஸ் ரைடிங்னா, டைனோஸர் ரைடிங் மாதிரியாம்.

''யானை மேல எல்லாம் தைரியமா ஏறிடுவேன். ஆனா, குதிரை சவாரினா கிலி. பெண்களோட கூந்தலை ஒப்பிட்டுப் பேசி, குதிரையோட வாலை எல்லாரும் ரசிச்சுப் பார்த்தாலும், எனக்கு மட்டும் அலர்ஜி. ஒருமுறை என் பிறந்தநாளப்போ, 'இன்னியோட உன் குதிரை பயத்தை தெளிய வைக்கிறோம் பாரு’னு குண்டுக்கட்டா தூக்கி குதிரை மேல உட்கார வைக்கப் பார்த்தாங்க. ஆனாலும் தப்பிச்சுட்டேன். இன்னிவரைக்கும் குதிரை சவாரி பண்ண வைக்க ஸ்கெட்ச் போட்டுட்டேதான் இருக்காங்க கொலகாரப் பாவிங்க... அவ்வ்வ்!''னு அரண்டாங்க வினுப்ரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்கெல்லாம் ஜான்சி ராணி மாதிரி குதிரை ஓட்டுவோம்ல!''னு கெத்தா வந்தாங்க அனுஷா.

குதுர குதுர... அதிர அதிர...

''டூரிஸ்ட் ஸ்பாட், பீச், பார்க்னு எங்க குதிரையைப் பார்த்தாலும் சவாரி போயிடணும் எனக்கு. அவ்ளோ இஷ்டம். இப்படித்தான் ஒருமுறை எங்க அண்ணா கல்யாணத்துல மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரையில் கூட்டிட்டு வந்தாங்க. அப்போ சின்னப் பிள்ளையா இருந்த நான் அதைப் பார்த்துட்டு, 'நானும் குதிரையில போகணும்!’னு ஒரே அழுகை. ஊர்வலம் முடிஞ்ச வொடன என்னை மட்டும் தனியா அதுல ஒரு ரவுண்டு கூட்டிட்டு வர வெச்சாரு அப்பா. அன்னிக்கே அப்பா ஒரு முடிவெடுத்தார் போல. என் கல்யாணத்துலயும் குதிரை சவாரி வைக்கணும்னு நினைச்சாருனு சொல்வேன்னு எதிர்பார்த்தீங்கனா... அதுதான் இல்லை. என் கல்யாணத்துக்கு குதிரையே கிடையாதுனு சொல்லிட்டாரு. இல்லைனா நான் மாப்பிள்ளையை விட்டுட்டு குதிரையில கிளம்பிடுவேனாம்... ஹி ஹி ஹி!'' - பெரிய ஜோக் சொல்லிட்ட திருப்தி அனுஷாவுக்கு.

''கொடைக்கானல்ல ஒரு தடவை குதிரை சவாரி போனேன்''னு தன்னோட ஃப்ளாஷ்பேக் ஆரம்பிச்சாங்க லஷ்மிப்ரியா.

''கூடவே வந்துட்டு இருந்த குதிரைக்காரரிடம் வழியில யாரோ பேச வர, என்னைக் குதிரையில அம்போனு விட்டுட்டு, பேச்சுல சுவாரஸ்யமாயிட்டாரு. அந்தக் குதிரை... கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சு, வேகமா ஓடவே ஆரம்பிச்சிருச்சு. நான் கதற, எல்லாரும் வேடிக்கை பார்க்க, எங்க அப்பா, அம்மா கத்த... அப்போதான் அந்தக் குதிரைக்காரர் எங்களைத் திரும்பிப் பார்த்து, ஓடி வந்து, குதிரைக்கு எங்கயோ ஒரு அடி போட்டார். பிரேக் போட்ட மாதிரி சட்டுனு நின்னுடுச்சு. அதுல இருந்து குதிரைனாலே பயம் எனக்கு... விட்டிருங்க ப்ளீஸ்!''னு பத்தடி பின்னாடி போய் நின்னுக்கிட்டாங்க லஷ்மிப்ரியா.

பின்குறிப்பு: மொத்தத்துல, கடைசி வரைக்கும் யாருமே குதிரை சவாரி செய்யல... கல்யாண சவாரி அனுஷா உட்பட. எல்லாருமே போஸ் மட்டும்தான் கொடுத்தாங்க!

- அ.பார்வதி

படம்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism