Published:Updated:

நித்யானந்தாவை நீக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

நித்யானந்தாவை நீக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
நித்யானந்தாவை நீக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
நித்யானந்தாவை நீக்கக் கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

சென்னை: இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்யானந்தாவை நீக்கக் கோரும் வழக்கு  தொடர்பாக தமிழக அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற நித்யானந்தாவை நீக்க  வேண்டும் என்ற கோரி மதுரையைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன் உள்பட 4 பேர் சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், மதுரை ஆதீன சொத்தை நித்யானந்தா பயன்படுத்த  அனுமதிக்கக் கூடாது என்றும், ஆதீனத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும் என்றும்  கோரியிருந்தனர்.

##~~##
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த  நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3 வார  காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.