Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

''மரண பயம் தேவைதானா?!''

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

''அவள் விகடன் வாசகிகளுக்கு அன்பு வணக்கம்..!

'கூட்டுக் குடும்பம்’ என்பதெல்லாம் காணாமல் போய், இன்று தனிக்குடித்தனங்களே எங்கெங்கும் உள்ளன. இந்த தலைமுறை இடைவெளியால் நாம் தொலைப்பவை என்னென்ன?

மாமியார் - மருமகள் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல... பல யுகங்களாக தொடர்கிற ஒரு யுத்தம். இது எழுவதற்கு என்னதான் அடிப்படை?

சாமியார்கள், ஜோதிடம், அருள்வாக்கு என்பதெல்லாம் உண்மைதானா? ஏன் பெண்களில் அதிகமானோர் இத்தகைய விஷயங்களுக்கு எளிதில் அடிமையாகிறார்கள்?

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி... பல தம்பதிகளுக்கும் இன்று 'சந்தோஷம்’ என்பது வெறும் வார்த்தையாகிவிட்டதே ஏன்?

'இவ்ளோ மார்க் வாங்கணும்... அவ்ளோ மார்க் வாங்கணும்’ என்று பிள்ளைகளை மதிப்பெண் மெஷின்களாக மாற்றி வரும் பெற்றோர்களே! உங்களிடம் நான் சிலவற்றைச் சொல்லவேண்டும்.

ஆண்கள், பெண்கள் என அனைவரையும் இலக்காக வைத்து சதியாட்டம் ஆடும் 'அழகு சாதன வியாபாரிகளின்’ உண்மை முகம் என்ன? அவர்களது சதியாட்டத்தால் நாம் தினம் தினம் எதிர்கொள்ளும் அவலங்கள் என்னென்ன?

தீபாவளி, பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகையையும் நம் முன்னோர் கொண்டாடியதற்குப் பின் உள்ள காரணங்கள் அறியாமல், இன்றைய தலைமுறையினர் சிலர் அவற்றை தூற்றி வருகிறார்கள். இதனால் தொலைப்பவை என்ன?  

'மரண பயம்’ என்கிறார்களே... அது தேவைதானா?

இப்படி வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை என் அனுபவ வாயிலாக சொல்லி, உங்கள் மனதில் நல்லதொரு புரிதலையும், தன்னம்பிக்கையையும் விதைக்க ஆவலோடு காத்திருக்கிறேன். அதையெல்லாம் கேட்டு பயன்பெற தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள். உங்களது மனதில் தன்னம்பிக்கை மலரட்டும்!

என்றும் அன்புடன்,

எழுத்தாளர் ராஜேஷ்குமார்

ஜூலை 15 முதல் 28 வரை

+(91)-44-66802932 இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

அடுத்த கட்டுரைக்கு