ஏற்கெனவே டி.வி. சீரியல்கள் பார்ப்பதே திகில் அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அது போதாது என்று, தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பயங்கர விளையாட்டுப் போட்டிகளில் கயிறைப் பிடித்துத் தொற்றி ஏறுவதும் உயரத்திலிருந்து குதிப்பதுமாக அதற்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிரமாண்டக் கட்டமைப்புகள் வாய் பிளக்கச் செய்யும். அதுபோக மூக்குக்குள் தேளை விடுவது, காதுக்குள் கரப்பான் பூச்சிகளை விடுவது என்று சாகசம் செய்கிறேன் என்று பாடாய்ப்படுத்துகிறார்கள். இதெல்லாம் என்னங்க சாகசம்? இதுக்கு மேல சாகசம் நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கு பாருங்க... சேனல் நியாயமாரே!

நம் ஊர்ப் பேருந்து நிலையங்களிலிருக்கும் பொதுக் கழிப்பிடங்களின் முன்பாகத் தேங்கியிருக்கும் உச்சா நீரில் கால் படாமல் உள் நுழைந்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டு மீண்டும் கால் படாமல் நடந்து வருவதே பெரிய சாகசம்தான்.

மனைவிக்கு சமையல் குறிப்பு புத்தகத்தை வாங்கிக் கொடுத்து அதிலிருக்கும் புதிய வெரைட்டி உணவுகளைத் தினம் ஒன்றாக சமைக்கச் செய்து, அதனைத் தைரியமாக முழு மனதோடு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின்னும் நல்ல நிலையில் நாம் நடமாடினால், உண்மையில் சாகசக்காரர்கள்தான்.

ஏதாவதொரு பொழுதுபோக்கும் சங்கத்தில், உறுப்பினராகச் சேரச் சொல்லி வரும் தொலைபேசி அழைப்பிற்கு விடாமல் எவ்வளவு மணி நேரம் கடலை போட முடியுமோ, அவ்வளவு நேரம் கடலை போட வேண்டும். கடலையின் நேரத்தைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள். கண்டிப்பாக எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதில் உறுப்பினராக இசைவு தரவே கூடாது என்ற நிபந்தனை உண்டு.

தொடர்ச்சியாக ஒரு வாரம் முழுவதும் காலையில் ஆபீஸுக்கு லேட்டாகவே வர வேண்டும். காதில் ரத்தம் வர மேலாளர் திட்டும் அத்தனை வசவுகளையும் ஜஸ்ட் லைக் தட் துடைத்துவிட்டு, 'வலிக்கலியே’ என்றபடி ரசிக்க வேண்டும். இந்த சாகசத்தில் ஜெயித்தால் லாபம். தோற்றால் கூடுதலாக வேலையையும் இழக்க நேரிடலாம்.

முன்னே பின்னே தெரியாத கல்யாண வீட்டில் கலந்துகொண்டு, கல்யாணப் பந்தியில் தொடர்ச்சியாக நான்கு முறை அமர்ந்து அனைத்து பதார்த்தங்களையும் ஃபுல் கட்டு கட்ட வேண்டும். அதோடு மணமேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு, பணமே இல்லாத வெற்று மொய் கவரை அன்பளிக்க வேண்டும். அது மட்டுமின்றி, மண்டபத்திலிருந்து கிளம்பும்போது மறக்காமல் தாம்பூலப் பையும் வாங்கிவர வேண்டும். மங்களகரமான சாகசம்.

பெருமழைக் காலத்தில் மாநகரப் பேருந்தில் பயணிக்க வேண்டும். சும்மா ஒன்றும் இல்லை... தன் மீது ஒரு சொட்டு மழைத்துளிகூட விழுந்துவிடாதபடி சாவகசமாகத் தப்பியபடி பயணிக்க வேண்டும்.

'நாங்க ரெடி! நீங்க ரெடியா?’

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்