எல்லோரின் குடும்பத்திலேயும் ஒருத்தர் அதிகம் படிச்சவரா இருப்பார். அவரால நாம படுற அல்லல்கள் இருக்கே... அயய்யய்யோயய்யோ!

ஒன்ஸ் அப்பான் எ டைம் டெல்லியில என்னோட மாமா சென்ட்ரல் கவர்மென்ட் இன்ஜினீயரா இருந்தார். அவர் ஊருக்கு வர்றப்போ, ஃப்ரெண்ட்ஸ் என் வீட்டுப் பக்கமே தலைவெச்சுப் படுக்க மாட்டானுங்க. ஏன்? பசங்களை உட்காரவெச்சு நியூட்டனோட மூன்றாம் விதியை விட்டுட்டு முதல் இரண்டு விதிகளைக் கேட்பார். மூன்றாம் விதிதான் ஈஸியாச்சே! சரியாகச் சொல்லவில்லை என்றால் போச்சு. 'இப்படி படிச்சா மாடு மேய்க்கத்தான் போக முடியும்’, 'நான் அந்தக் காலத்துல தெரு விளக்கில நின்னு படிச்சேன்...’ 'பத்து மைல் தூரம் கண்மாய்க்குள்ள, சுடுகாட்டுல இறங்கி நடந்து படிச்சேன்...’, 'கஞ்சியும் தொவையலும்தான் மூணு வேளையும். பலகாரத்தைக் கண்ணுல பார்த்ததுகூட கெடையாது’ என ஆரம்பித்து நீ...ண்...ட லெக்சர் கொடுத்து விட்டுவிடுவார்னுதானே நினைச்சீங்க. நோ. அங்கேதான் ட்விஸ்ட்டே. 'ஒரு பேப்பரும் பேனாவும் எடுங்க. ஒரு வேலையை 30 பேர் சேர்ந்து தினமும் ஐந்து மணி நேரம் பார்த்து பத்து நாள்ல முடிக்கிறாங்கனா... அதே வேலையை 12 நாள்ல முடிக்க எத்தனை பேரு... எத்தனை மணி நேரம் வேலை செய்யணும்?’னு கேட்பார். பதில் தெரியாமல் முழிச்சாப்போச்சு. மீண்டும் காடு, மாடு, கண்மாய், தெருவிளக்குனு ஆரம்பிச்சு போய்க்கிட்டே இருப்பார். பாவம் பசங்க. என்னை முறைத்தபடி, 'இனி செத்தாலும் உன் வீட்டுப் பக்கம் வர மாட்டோம்டா’ என சூளுரைத்துச் செல்வார்கள்.

டைம் மெஷின்ல ஏறி டவுசர் காலத்துக்குப் போனால், ஊரிலிருந்து வீட்டுக்கு மாமா ஒருவர் நிறைய அகர்வால் ஸ்வீட்டுடன் வருவார். ஆனால் ஸ்வீட் என்னமோ, எனக்கு மட்டும் இனிக்காது. அப்படி வரும் ஒவ்வொரு முறையும் சாயங்காலம் டி.வி-யில் ஸ்பைடர்மேன் ஓடும். அந்த நேரம் பார்த்து, 'மேத்ஸ் புக் எடு’னு குரல் கொடுப்பார். மனசு கார்ட்டூனில் லயித்திருக்கும்போது, '13-ம் வாய்ப்பாடு சொல்லு’ என்பார். 'ஏன் ரெண்டாம் வாய்ப்பாடெல்லாம் நான் சொல்லக் கூடாதா?’னு மனசு கெடந்து அடிச்சுக்கும். பேந்தப்பேந்த முழித்துக்கொண்டிருக்கும்போதே, தலையில் 'நங்’குனு குட்டு விழும். அழுதாலும் விடாமல், 'மனப்பாடம் பண்ணிச் சொல்லு’ என்பார். அப்புறம் என்ன? வீட்டில் எல்லோரும் தூங்கினாலும் நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டியும் நெஞ்சில் குத்திக் குத்தி வாய்ப்பாடு படிச்சுக்கிட்டு இருப்பேன்.

இந்த வகை ஆன்மாக்கள் மிகவும் பெர்ஃபெக்ட்டாய் இருப்பார்கள். கோடுபோட்ட நோட்டில்தான் எழுதிப் பழகி இருப்பார்கள். அதனால் காலரில் லேசான அழுக்கு இருந்தாலும் அந்தச் சட்டையைத் துவைத்த பிறகுதான் அணிவார்கள். எல்லாவற்றிலும் பெர்ஃபெக்ஷனாய் இருப்பதால், 'டிரைவிங் லைசன்ஸ், கேஸ் கனெக்ஷன், வாக்காளர் அடையாள அட்டை எடுத்தாச்சா?’, 'பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணியாச்சா?’னு வாரம் ஒரு தடவை தார்க்குச்சி வெச்சு குத்தி எடுப்பார். எப்பவும் யார்கிட்டவும் நம்மை விட்டுக்கொடுக்காத அம்மாகூட தன் தம்பியோடு கூட்டு சேர்ந்துக்கிட்டு, 'எங்கேப்பா படிக்கிறான்... பொழுதேன் னிக்கும் பேட்டும் கையுமால்ல திரியிறான்’னு பாயின்ட் எடுத்துக் கொடுக்கும். விதி வலியது பாஸ்.

இத்தனை வருடம் கழித்தும் மாமா அப்படியேதான் இருக்கிறார். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்தபோது, ''பைக் வாங்கினா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இன்ஜின் சர்வீஸ் பண்ணி ஆயில் மாத்தணும். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை, வாட்டர் சர்வீஸ் பண்ணணும். மூணு நாளுக்கு ஒரு தடவை, ஏர் செக் பண்ணணும். இப்போ போட்ட ரயில்வே பட்ஜெட் பத்தி என்ன தெரிஞ்சுக்கிட்ட? சரி அம்மா குடிநீர் எங்கே தயாரிக்கிறாங்கனாச்சும் தெரியுமா?’ என்றார். பேந்தப் பேந்த முழித்தபடி நின்றேன்!

- ஆர்.சரண்