Published:Updated:

பண்ணாலும் பண்ணுவாங்க!

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாள், 200 நாள்னு ஓடுச்சு. வெள்ளிவிழா, வைரவிழாவெல்லாம்

பண்ணாலும் பண்ணுவாங்க!

கொண்டாடி, கேடயம் பரிசாக் கொடுப்பாங்க. ஆனா இப்போ படம் வந்த அடுத்த நாளே சக்ஸஸ் மீட் வெக்கிறாங்க. இப்போ லேட்டஸ்ட்டா டீஸர்க்கெல்லாம் சக்ஸஸ் மீட் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இனிமே என்னவெல்லாம் பண்ணுவாங்க?

பண்ணாலும் பண்ணுவாங்க!

 போஸ்டரைச் சுவத்துல ஒட்டிட்டு 1,000 பேர் பார்த்த போஸ்டர்னு சக்ஸஸ் மீட் வைக்கலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 டிரெய்லர் ரிலீஸ் பண்ணிட்டு வெற்றிகரமான 100-வது நாள்னு போஸ்டர் ஒட்டலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 படத்துக்குப் பேர் வெச்சதும் வெற்றிகரமா படத்துக்குப் பேர் வைக்கப்பட்டதுனு பேட்டி கொடுக்கலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 படத்தின் விளம்பரங்கள் இன்னும் 10 நாட்களில் ஆரம்பமாகும்னு விளம்பரத்துக்கே விளம்பரம் கொடுக்கலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 டிரெய்லர், பாடல் மாதிரி படத்தின் திருட்டு டி.வி.டி வெளியீட்டு விழா நடத்தலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!
பண்ணாலும் பண்ணுவாங்க!

 படம் ரிலீஸ் ஆகிறப்போ, 'இது என்னுடைய கதை’னு சிலபேர் கிளம்பி வர்ற மாதிரி, படத்துடைய டைரக்டரே 'இது என்னுடைய கதை இல்லை. மறந்துபோய் வேற ஒருத்தர் கதையைப் படமா எடுத்துட்டேன்’னு பேட்டி கொடுத்து பப்ளிசிட்டி பண்ணலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 இந்தப் படம் மட்டும் வெளிவரலைனா நாட்டை விட்டே வெளியேறுவேன்கிற மாதிரி, இந்த கிரகத்தை விட்டே வெளியேறுவேன், இந்த கண்டத்தை விட்டே வெளியேறுவேன்னு மிரட்டல் ஸ்டேட்டஸ் விடலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 மியூஸிக் டைரக்டர் நடிக்கிற மாதிரி, கேமராமேன் டைரக்ட் பண்ற மாதிரி, லைட்மேன் மியூஸிக் பண்ணலாம். எடிட்டர் பாட்டு எழுதலாம். ஹீரோ எல்லோருக்கும் டீ வாங்கிக் கொடுக்கலாம்!

பண்ணாலும் பண்ணுவாங்க!

 கடைசியா, எல்லாத்தையும் பீட் பண்ற மாதிரி எடுக்காத படத்துக்குக்கூட பிரஸ்மீட் வெச்சு 'நான் இந்தப் படத்தை எடுக்கவே இல்லை, அது எதனால தெரியுமா?’னு உலகத்துக்குச் சொல்லலாம்!

எல்லாம் ஒரு வெளம்பரம்!

- பா.ஜான்ஸன்