'பவர் ஸ்டார்’, 'வின் ஸ்டார்’, 'சோலார் ஸ்டார்’, 'டவர் ஸ்டார்’ என இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் 'சில்வர் ஸ்டார்’ விஜய்ராஜா. ஆஃப் செஞ்சுரியில் நடிகராக அடியெடுத்து வைத்திருப்பவரிடம் பேசினேன்.

''50 வயசுல நடிக்க வந்திருக்கேன்னா... எல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் தம்பி'' என ஆரம்பத்திலேயே அதிரடி கொடுத்த விஜய்ராஜா, ''ஆனா, அந்தப் பணம் எனக்கு இல்லை; பல பேரோட பசியைப் போக்க'' என அடுத்த அடி கொடுத்தார்.

''கடந்த ஒரு வருஷமாதான் சினிமாவுல நடிக்கணும்னு ஆசை. ஆனா, வாய்ப்பு கேட்டா எல்லோரும் என்கிட்ட அஞ்சு லட்சம், 10 லட்சம்னு பணம் கேட்டாங்க. ஆனா 'பசுவன்குடி’ இயக்குநர் என்கிட்ட காசே கேட்காம இலவசமா நடிக்கச் சொன்னதினால ஓகே சொல்லிட்டேன். ஹாலிவுட்ல 'சில்வர்ஸ்டார் ஸ்டாலோன்’னு ஒரு நடிகர் இருக்கார்ல? அவரோட இன்ஸ்பிரேஷன்தான் 'சில்வர் ஸ்டார்’ பட்டம். சும்மா சொல்லக் கூடாது... இந்த பட்டத்தை வெச்சுக்கிட்டு நடிச்சதுக்கு அப்புறம், பலபேர் போன் பண்ணி விசாரிக்கிறாங்க. கூடிய சீக்கிரம் பெரிய நடிகர் ஆகி, 'பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு டஃப் கொடுக்கணும்'' எனப் பேச்சுலேயே கிச்சுகிச்சு மூட்டியவர் தொடர்ந்தார்.

''நயன்தாரா நல்ல புள்ள... அழகா இருக்கும். அஜித் என்னை மாதிரியே மத்தவங்களுக்கு உதவி செய்ற ஆளு. இவங்க ரெண்டுபேர்கூட நடிக்கணும்கிறதுதான் நம்ம டார்கெட். விஜய், அஜித் சேர்ந்து நடிச்ச 'ராஜாவின் பார்வையிலே’ படத்தோட தயாரிப்பாளர் என் மச்சான்தான். அப்போல்லாம் அஜித் இவ்வளவு பெரிய நடிகர் ஆவார்னு நான் நினைச்சே பார்க்கலை'' என்றவர் தன் புராணத்துக்குத் தாவினார்.

''வீட்ல நடிப்புக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க. கிளாஸுக்கெல்லாம் போகாம, வீட்டுலேயே குத்துப் பாடல்களைப் போட்டு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். 'பசுவன்குடி’யில காமெடி கேரக்டர். இந்தப் படத்துல என்னோட கேரக்டரைப் பார்த்துட்டு பலபேர் கால்ஷீட்டுக்கு வெயிட் பண்ணுவாங்கனு நம்புறேன். அப்படியே நடக்கணும். ஏன்னா, ஊரான் வீட்டுக் காசுல பிரியாணி, கூல்ட்ரிங்ஸ் கொடுத்து தன் படத்தைப் பார்க்கவைக்கிற பவர் ஸ்டாரை ஓரங்கட்டி, பெரிய இடத்துக்கு வரணும் பாஸ்'' என்றார்.

வருவாருங்கிறீங்க?

- கே.ஜி.மணிகண்டன்