இப்போல்லாம் ஃபேஸ்புக் போனீங்கனா பேரே புரியாத ஒரு பலசரக்குக் கடையின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஆறு லட்சம் லைக்ஸ் விழுந்துருக்கிறதைப் பார்க்கலாம். அதுக்குப் பின்னாடி 12 லட்சம் ரூபாய் இருக்கும். என்ன ஷாக்கிங்கா இருக்கா? ஆமா பாஸ் ஓர் அரசியலே இருக்கு.

'இதென்ன புதுசா இருக்கே?’ என சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்.

''இதுக்குனே சென்னையில் சில சாஃப்ட்வேர் ஆசாமிகள் இருக்காங்க. அவங்க சின்னதா புரொமோஷன் கம்பெனி மாதிரி நடத்துறாங்க. 'வேர்ல்டுவைடு ஃபேஸ்புக் லிங்க்ஸ்’ அத்தனையும் அவங்களோட லேப்டாப்ல இருக்கும். ஒருத்தர் 500 ஃபேஸ்புக் அக்கவுன்ட் வெச்சிருப்பார். அவருக்குத் தெரிஞ்ச நெட்வொர்க்ல இருக்கிறவருக்கு, அதை ஃபார்வர்டு பண்ணிட்டா போதும். ஒரே நேரத்தில் 100 அக்கவுன்ட்ல இருந்து 100 லைக்ஸ் விழும். 100, அப்படியே 500 ஆகும். அந்த 500, அடுத்து 1,000 ஆகும். ஒரே வாரத்துல உங்க ஒரு ஸ்டேட்டஸுக்கு 10 லட்சம் லைக்ஸ் விழவைக்க முடியும். ஆனா, நீங்க அந்த நபரிடம் ஒரு லைக்குக்கு இரண்டு ரூபாய் கொடுக்கணும். இது சிம்பிள் மேட்டர் ஆச்சே. நானே உட்கார்ந்து செய்வேன்னு களத்துல இறங்குனீங்கனா, இந்த நெட்வொர்க்கை செயல்படுத்தி லைக்ஸ் வாங்க வருஷக்கணக்கில் ஆகும். இங்கே எல்லாமே ஷார்ட்கட் என்பதால், ஆரம்பத்திலேயே இத்தனை லட்சம் ரீச்சாகிற மாதிரி பார்த்துக்கங்கனு சம்பந்தப்பட்ட நபர்கிட்ட சொல்லிட்டா பக்காவா ஒரே வாரத்துல லைக்ஸை அள்ளிக் கொட்டிடுவார். மோடிகூட இந்த டெக்னிக்கைப் பயன்படுத்திதான் ஹிட்ஸ் அள்ளினார்னு சொல்வாங்க'' என்றார்.

''அப்படினா நார்மலா யூடியூப்ல போடுற ஒரு படத்தோட டீசருக்கோ, டிரெய்லருக்கோ லைக்ஸ் வர்றதும், ஹிட்ஸ் வர்றதும்கூட இப்படித்தானா?''

''அப்படி எல்லாத்தையும் சொல்லவும் முடியாது. இந்த லைக்ஸ் அதிகம் வாங்கும் பிரச்னை இன்னும் அவ்வளவா இங்கே உருவாகலை. ஆனா, பாலிவுட்ல கான் நடிகர்கள்கிட்ட அந்தப் போட்டி இருக்கு. அங்கெல்லாம் யாரோட வீடியோ, யாரோட பேஜ் அதிகம் லைக்ஸ் வாங்குதுங்கிறதுல பெரிய போட்டியை உருவாக்கிருக்காங்க. இந்த அதிக லைக்ஸும்கூட படத்தோட பப்ளிசிட்டிக்கு பயன்படுத்திக்க உதவும்கிறது அவங்களோட கணக்கு. சினிமாவே ஒரு கமர்ஷியல் பிசினஸ்தானே... 'ஹிட்ஸ் அண்ட் லைக்ஸை’ மனசுல வெச்சுக்கிறாங்க. அதை ஃபாலோ பண்ணி படத்தோட புரோமோஷன்ல டீசருக்கும் டிரெய்லருக்கும் அதிகம் மெனக்கெடும் டிரெண்ட் இப்போ தமிழ் சினிமாவில் உருவாகி இருக்கு. பவர் ஸ்டார், டி.ஆர், விஜயகாந்த் போன்றவர்களைப்பற்றி சும்மா ஒரு வீடியோ போட்டாலும் ஹிட்ஸ் அள்ளும். அதுதான் ஒரிஜினல். மற்றபடி ஒரு பிரபல ஹீரோவோட புதுப்பட டிரெய்லருக்கு பல லட்சம் லைக்ஸ்னா, அதுக்குப் பின்னாடி ரசிகர்களோட ஆர்வக்கோளாறுதான் மிக முக்கியமா இருக்கு.

புரியும்படி சொல்லணும்னா தமிழ் சினிமாவில் அஜித், விஜய் ரசிகர்களில் பெரும்பாலோனோர் திரும்பத் திரும்ப டிரெய்லரை ரிப்பீட்டாகப் பார்த்து ஹிட்ஸை உயர்த்த மெனக்கெடுகிறார்கள். இப்போ அந்த லிஸ்ட்டில் சூர்யா ரசிகர்களும் இருக்காங்க. ரீசார்ஜ் பண்ணிட்டுத் திரும்பத் திரும்ப அந்த யூடியூப் வீடியோவை ஹிட்டாக்கப் பார்க்கிறாங்க. இந்த ரசிகர்களில் பலர் காலேஜ் பசங்கதான். 'மச்சி... ஹிட்ஸ் ஒரு லட்சத்தை நெருங்கிட்டோம். உன் ஃப்ரெண்ட்ஸுக்கு மெசேஜ் பண்ணு... அள்ளுறோம். நம்ம மாஸைக் காட்டுறோம்’ என்பதாகவே இருக்கிறது.

இத்தனை அல்டாப்புகள் இருந்தாலும் பவர் ஸ்டார் இல்லாத கோலிசோடா டீசர் மற்றும் டிரெய்லரை வெறும் 3,000 மற்றும் 6,000 பேர்தான் பார்த்திருக்கிறார்கள். பவர் ஸ்டாரை வைத்து ரெடி பண்ணிப் போட்ட டீசரை இரண்டே நாளில் ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். உண்மையிலேயே பவருக்கு இருக்கு பவர்!

- ஆர்.சரண்