தினசரிகளைப் புரட்டும் ஒவ்வொருவரும் 'ஏழே நாளில் வசியப் பயிற்சி’, 'உதவி இயக்குநர்கள் தேவை’, 'அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாந்தி ரீகப் பயிற்சி’, 'மெழுகுத் தொழிலில் மாதம் 30,000 சம்பாதியுங்கள்’ என விதவித மான வரி விளம்பரங்களைக் கடந்திருப்போம். அவர்களை போனில் தொடர்புகொண்டு பேசினால்...

'பிரச்னை என்னன்னு சொல்லுங்க. டீல் பண்ணிட லாம்’ என்றவாறே ஆரம்பித்தார் 'ஏழே நாளில்

அனைத்துப் பிரச்னை களை’யும் தீர்த்து வைக்கும் ஒருவர். 'உதவி இயக்குநரா இருக்கேன். நான் ஒர்க் பண்ணின எந்தப் படமும் ரிலீஸ் ஆகலை. என் பிரச்னையை எப்படியாவது தீர்த்து வைங்க சார்’ என்றேன். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டவர், ''நேரா பஸ்ஸைப் பிடிச்சு வாலாஜாபாத் பக்கத்துல வாங்க. அங்கேதான் நம்ம ஆபீஸ் இருக்கு. நான் கொடுக்கிற மருந்தைச் சாப்பிடுங்க. பத்து நாள்ல உங்க பிரச்னை சரியாகிடும்’ என சீரியஸாகப் பேசினார். 'படம் ரிலீஸ் ஆகுறதுக்கும் மருந்து சாப்பிடுறதுக்கும் என்ன சார் கனெக்ஷன்?’ என நான் மண்டையைச் சொறிய... 'உற்சாகம் இல்லாமல் இருக்கிறதுதான் எல்லாத்துக்கும் பிரச்னை. என்னோட மருந்து உங்களுக்கு உற்சாகம் கொடுக்கும். அடுத்தடுத்த வேலைகளைத் தீவிரமா செய்ய ஆரம்பிச்சுடுவீங்க’ என பதில் கொடுத்துவிட்டு, 'ரெண்டு மாசத்துக்கு மருந்து தர்றேன். 15 ரூபா செலவாகும்’ என்றார். 'வெறும் 15 ரூபாயில் என் பிரச்சனை முடியும்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லை சார்’ என நான் சந்தோஷப்பட, 'தம்பி... 15 ரூபா இல்லை. 15,000’ என்ற அவர், ரொம்பநேரம் 'ஹலோ... லைன்ல இருக்கீங்களா தம்பி?’ என்றே பேசிக்கொண்டிருக்க, ஐ யம் அப்பீட்!

'அங்கீகாரம் பெற்ற ஆண்மை மருந்து’ என்ற வரி விளம்பரம் 'எங்கேயிருந்து அங்கீகாரம் பெறப்பட்டது?’ என்கிற டீட்டெயிலே இல்லாமல் இருந்தது. ரிங் ரீச் ஆகும் முன்பே போனை அட்டெண்ட் செய்தவர், ரொம்பவே அன்பாகப் பேசினார். 'உங்க வயசு என்ன? வீரியம் குறைவா இருக்கா? திருப்தி இல்லையா? இல்லை... சும்மா டிரை பண்ணிப் பார்க்கப் போறீங்களா?’ என என்னைப் பேசவே விடாமல் அடுக்கிக்கொண்டிருந்தார். 'இல்லை சார்... நான் நேர்ல வந்து பேசினா நல்லா இருக்கும்னு பார்க்கிறேன்’ என பதில் சொல்ல, 'பொதுவா நான் யாரோட போனையும் அட்டெண்ட் பண்றதில்லை. உங்க நல்ல நேரம் நான் பேசிட்டேன். நேர்ல வந்தீங்கனா, என் ஆபீஸ்ல (மறுபடியும் ஆபீஸா?) பலபேர் கியூவில நின்னுட்டு இருப்பாங்க. அவங்களையெல்லாம் பார்க்கும்போது கூச்சம் அதிகமாகி ட்ரீட்மென்ட் எடுக்காமலேயே ஓடிடுவீங்க. இப்படி போன்ல பேசுறதனால, ஒரு ஃப்ரெண்டுகிட்ட பேசுற ஃபீலிங் கிடைக்கும்; ஃப்ரீயாகவும் பேசலாம்’ என்றவர், 'ஒரு பாட்டில் விலை 4,500 ரூபாய். பாட்டில்ல பொம்பளைப் படத்தையோ, குதிரை படத்தையோ போட்டா நீங்க கூச்சப்படுவீங்கனு எந்த ஸ்டிக்கரும் ஒட்டாத பாட்டில்லதான் மருந்து கொடுப்பேன். தைரியமா வாங்கிட்டுப் போகலாம் தம்பி’ என முடிக்க... 'என்ன பதில் சொல்றது?’னே தெரியாம கட் பண்ணிட்டேன்.

கத்தரித்த 'உதவி இயக்குநர் தேவை’ விளம்பரத்தை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு எழும்பூரில் இறங்குவோர் எண்ணிக்கை அதிகம். இதைப் படிங்க, அடுத்த ரயில்ல ஊருக்கு ஏறிடலாம். 'ஆறு வயது முதல் 60 வயதுவரை (ரைமிங்?) நடிக்க ஆட்கள் தேவை, உதவி இயக்குநர்களும் தேவை. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்ற விளம்பரத்தில் இருந்த எண்ணிற்கும் ஒரு போனைப் போட்டேன். 'சார், புரொடியூஸர்கிட்ட பேசிட்டு இருக்கார். அஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடுங்க’ என பிஸியாக இருந்தார் ஒருவர். ஆனால் அடுத்த அஞ்சாவது நிமிஷத்தில் அவரே அழைத்தார். 'சொல்லுங்க என்ன வேணும்? (உன் பேச்சுல ஒரு திமிர் தெரியுதே?) என அவர் இறுக்கமாகப் பேச, 'சார்... அசிஸ்டென்ட் டைரக்டர் சான்ஸ் வேணும்’ என ஆரம்பித்தேன். 'நேரா சௌகார் பேட்டையில் இருக்கிற என் ஆபீஸுக்கு வாங்க. ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் 250 ரூபாயும், ரெண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் கொடுத்திட்டு, நீங்க எழுதுன கதை ஏதாச்சும் இருந்தா கொடுத்துட்டுப் போங்க. ரெண்டு நாள் கழிச்சு ஒரு வீடியோ ஷூட் பண்ணுவோம். அதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். நீங்களே அந்த வீடியோவை டைரக்ட் பண்ணலாம். அதுல செலக்ட் ஆயிட்டீங்கனா, அடுத்த மாசம் நடக்கப்போற நம்ம படத்தோட ஷூட்டிங்ல ஜாயின்ட் பண்ணிக்கலாம்.'' என்றார்.

இது மட்டுமா? '60 ஆயிரத்தில் வீட்டுமனை. இன்றே பார்வையிடுங்கள் (மதிய உணவு இலவசம்)’ங்கிற விளம்பரத்துக்கு போன் பண்ணா, 'பணத்தோட வாங்க. ரிஜிஸ்டர் பண்ணி பிளாட்டைக் கொடுத்துடுவோம்’னு சொல்றார் ஒருத்தர். இன்னொருத்தர், 'மெழுகுவத்தி செஞ்சு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பாதிக்கலாம்’னு சொல்றார். ஆனா, 'முன் பணமா’ 25,000 வேணுமாம்!

இந்த மாதிரி சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

- கே.ஜி.மணிகண்டன்