சென்னை பாய்ஸும் இப்போது 'ப்ராங்க்’ (Prank) எனப்படும் கவன ஈர்ப்பு வீடியோக்களை இணைய வெளியில் உலவவிட்டு பலத்த கவனத்தை ஈர்த்துவருகிறார்கள். யூடியூப்பில் இப்படி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது வினு கார்த்திக், ஹர்ஷ் கோத்தாரி, அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பவ்ஜோத் ஆனந்த் என்ற நால்வர் அணி!

இவர்கள் நால்வரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு வேலைகளில் இருந்தாலும் இவர்களை இணைத்திருப்பது இந்த 'ப்ராங்’தான். 'ஆக்வர்ட்னெஸ் அன்லிமிடெட்’(Awkwardness Unlimited) என்ற சேனலை ஆரம்பித்திருக்கிறார்கள். கிறுக்குத்தனத்தின் உச்சம் என இவர்கள் தங்களது சேனலுக்குப் பெயர் வைத்திருந்தாலும் சில வீடியோக்கள் உண்மையில் சமூக விழிப்பு உணர்வைத் தூண்டும் வகையில் இருக்கின்றன.

ஷாப்பிங் மால்களில் போர்வை தலையணையோடு போய், படுத்துத் தூங்கி மொத்த மாலையும் கதறவிடுகிறார்கள். எழுப்பவரும் செக்யூரிட்டி மற்றும் ஹவுஸ் கீப்பிங் ஆட்களை, 'போய்ட்டு அப்புறமா வாங்க. நாங்க தூங்கணும்’ என்று கலாய்க்கிறார்கள். போதாக்குறைக்கு அலாரம் வைத்துக்கொண்டு குப்புறப்படுத்து தூங்கி அலற விடுகிறார்கள். கேண்டிட் பாணியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இப்போ வைரலில். இது மட்டுமா...?

காரில் போய்க்கொண்டே சிக்னலில் நிறுத்தி யாரையாவது அழைத்து யாருக்கும் புரியாத ஏலியன்ஸ் பாஷையில் ரூட் கேட்டு தலையைச் சொரிய வைக்கிறார்கள். ரோட்டில் வாட்டர் பாட்டிலை வீசி யார் எடுத்து பொறுப்பாகக் குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள் எனப் பதிவு செய்கிறார்கள். பொது இடங்களில் செட்-அப் ஈவ் டீசிங்கை நிகழ்த்தி அதைத் தடுக்கிறார்களா மிஸ்டர் பப்ளிக் என கணக்கெடுக்கிறார்கள். பார்வை தெரியாத ஒருவரை (இதுவும் செட்-அப்தான்) ரோட்டைக் கடக்க உதவி கேட்க வைத்து எத்தனை பேர் உதவுகிறார்கள் எனப் பதிவு செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் அழகான பெண்ணை பிக்பாக்கெட் அடிக்க வைத்து பப்ளிக் ரியாக்ஷனை வாட்ச் செய்கிறார்கள். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... பிக்பாக்கெட் அடிக்கிறது ஒரு ஆணா இருந்தா...? செம ஜாலியாக இருக்கின்றன இந்த யூடியூப் வீடியோக்கள்.

இந்த நால்வர் அணியின் முதுகெலும்பாக இருக்கும் பவ்ஜோத் ஆனந்த் செம ஜாலி பார்ட்டி.

''நான் பக்கா சென்னைப்பையன். எதையாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சுட்டே இருப்பேன். அழகா டீம் செட் ஆனதும் களத்துல இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டேன். இன்னும் ஒரு வருஷம் கூட முடியலை. நிறைய சேனல் வாய்ப்புகள் வருது. நாங்களே சேனல் ஆரம்பிக்கிற யோசனையும் இருக்கு. வெறும் கிறுக்குத்தனமா மட்டும் இல்லாம சமுதாயத்துக்கு சில பயனுள்ள யோசனைகளையும் சொல்லணும்னு ஐடியா. என்னை எல்லோரும் பஞ்சாபிவாலானு நினைக்கிறாங்க. முழுநேரமாக மக்களை மகிழ்வித்து மகிழ எண்ணம் கொண்டுள்ள தமிழன் நான். விரைவில் இன்னும் பல ஆக்வெர்ட்னெஸ் யூடியூப்பில் அன்லிமிட்டடாக உங்களுக்குக் கிடைக்கும்'' என்றார். லின்க்: https://www.youtube.com/user/AwkwardnessUnlimited/videos

சும்மா கதறவிடுங்க கய்ஸ்!

- ஆர்.சரண்