'ஒருத்தர் பிரச்னையை முழுசா தெரிஞ்சுக்கணும்னா நாம அவங்களோட ஷூல நடக்கணும்’ (You can’t really understand another person’s experience until you’ve walked a mile in their shoes.') - ஒரு பேச்சுக்கு இப்படிச் சொல்லப்பட்ட ஆங்கிலப் பழமொழியை அப்படியே ஃபாலோ செய்கிறது ஓர் அமைப்பு. 2001-லிருந்து 'வாக் எ மைல் இன் ஹெர் ஷூஸ்’ (Walk a mile in her shoes) என்ற இந்த அமைப்பு பெண்களின் காலணிகளை ஒருநாள் அணிந்து ஒரு மைல்தூரம் நடைப்பயணம் போகிறது. அமெரிக்கர்களையும் வருடத்திற்கு ஒரு முறை அப்படிப் போகவும் சொல்கிறது. இது என்ன சின்னப்புள்ளைத்தனமா இருக்கு என்கிறீர்களா? இந்த 'வாக் எ மைல் இன் ஹெர் ஷூஸ்’ அமைப்பின் நிறுவனர் ஃப்ராங்க் பெய்ர்டு சொல்வதைக் கேளுங்கள்...

''அமெரிக்காவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறாள். ஆறு பெண்களில் ஒரு பெண் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகிறாள். அமெரிக்காவில் இது ஒரு தொற்றுநோய்போல் பரவி உள்ளது. நம் குடும்பத்துப் பெண்கள்

பாதிக்கப்பட்டால் மட்டும் வெகுண்டெழுந்து போராடுவது சுயநலமின்றி வேறில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நம் சகோதரி, நம் தோழி, நம் சக அலுவலக ஊழியை என்ற நினைப்பு ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அமைப்பை ஆரம்பித்தேன். பாலியல் வல்லுறவு என்பது சமுதாயப் பிரச்னையாகப் பார்க்கப்பட வேண்டும். குறிப்பட்ட ஆண்களை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. சிறுவயதிலிருந்தே பெண்களை மதிக்கச் செய்யும் வகையில் சில நடைமுறைகளைச் செயல்படுத்தினால் பெண்கள் மீது ஆண்களுக்கு இயல்பிலேயே மதிப்பும் மரியாதையும் வரும். அதன் அடையாளமாக அவர்களுடைய காலணிகளை அணிந்துகொண்டு நடக்கும் பழக்கத்தை வலியுறுத்தினேன். நான் பயின்ற மனோதத்துவ அடிப்படையில் இது நல்ல பலனை அளித்தது'' என்கிறார் ஃப்ராங்க்.

1987-ல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட 'ரைஸ்’ RISE (Rape Intervention services & Education) என்ற பாலியல் வல்லுறவுத் தடுப்பு மற்றும் விழிப்பு உணர்வு அமைப்பு இந்த 'வாக்கிங்’கை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

இதற்காக ஒரு இணையதளத்தை ஆரம்பித்து உலகம் முழுக்க நடைப்பயணத்தை ஆண்கள் மேற்கொள்ள உதவி செய்கிறது அந்த அமைப்பு. இதுவரை 1023 முறை இப்படி நடந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதோ இந்தக் கட்டுரையை டைப் செய்து கொண்டி ருக்கும்போது உலகம் முழுவதும் 57 இடங்களில் பெண்களின் காலணியோடு ஆண்கள் நடந்துகொண்டிருப்பார்கள்.

வாங்க... எல்லா வகையிலும் நல்லா நடப்போம்!

- ஆர்.சரண்