சென்னையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஆரணியைச் சுற்றியுள்ள கருவேலங்காடு...

அந்தக் கருவேலங்காட்டின் நடுவில் நெளிந்து, வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையில் எட்டு சைக்கிள்கள் சென்றுகொண்டு இருந்தன. அன்று இரவு 8 மணி அளவில் அந்த சைக்கிள்களை ஓட்டிச் சென்றவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சைக்கிள் களின் பின்புற கேரியரில் ஒரு சவுண்ட் பாக்ஸையோ அல்லது ஸ்பீக்கரையோ கட்டி வைத்திருக்க, ஒரு சிலரது சைக்கிள்களில் இசைக் கருவிகள்!

நகரங்களின் சுவடுகள் சிறிதும் படாமல் இருக் கும் சிறிய கிராமத்தில் வாழும் ஏழை மக்களின் இடங்களுக்கு மாதம் ஒரு முறை நேரில் போய், அந்த மக்களின் மனதை மகிழ்விப்பதற்காகவே இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்துவதை வழக்க மாகக் கொண்டவர்கள் அந்த இளைஞர்கள்!

ஆரணியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள அன்னப்ப நாயக்கன்குப்பம் என்ற சிறிய ஊரில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்துவதற் காகச் சென்றுகொண்டு இருந்தார்கள் அந்த இளைஞர்கள். உடன் நாமும் சென்றோம்.

''எங்க ட்ரூப்ல மொத்தம் நாலு பேர் இருக்கோம் (மற்றவர்கள் உதவிக்கு வந்தவர்கள்). நான் கச்சேரிகளுக்கு கிடார் வாசிப்பதோடு திரைப்பட இசையமைப்பாளர் தேவேந்திரன் குழுவிலும் வாசிக்கிறேன். அத்துடன் ஒரு கிடார் இசைப் பள்ளியும் நடத்துகிறேன்.

எங்களது குழுவில் டோலக் வாசிக்கும் செழியன் கச்சேரிகளில் ட்ரிபிள் காங்கோ, டோலக், தபேலா வாசிப்பவர். கீ-போர்டு வாசிக்கும் சாமுவேல் வெஸ்லி, ஆரணியில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர். பாடல்களைப் பாடும் ராஜா, மாநிலக் கல்லூரியில் எம்.ஃபில், படிப்பவர். நாங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக வெவ்வேறு மெல்லிசைக் குழுக்களில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகி றோம். ஆனால், அவற்றில் எங்களுக்குக் கிடைக் காத மன நிறைவு, இப்படிப்பட்ட கிராமங்களில் நிகழ்ச்சி நடத்தும்போது கிடைக்கிறது! இந்தக் கிராம மக்களை நாங்கள் தேடிப் போய், பகல் முழுவதும் உழைத்துக் களைத்த அவர்களின் முன்னால் எங்கள் நிகழ்ச்சியை நடத்துகிறோம். அந்த நேரத்தில் அவர்களது முகங்கள் மகிழ்ச்சியால் மலர்வதைத்தான் எங்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசாகக் கருதுகிறோம்'' என்றார் இந்தக் குழுவின் தலைவர் ரமேஷ்.

''எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நம்முடைய மண்ணின் மணம் கமழும் நாட்டுப்புறப் பாடல் களை அதிகமாகப் பாடுகிறோம். அவற்றுடன் மக்களுடைய விருப்பத்துக்காகச் சில சினிமா பாடல்களைப் பாடுவதும் உண்டு'' என்று இந்தக் குழுவின் பாடகரான ராஜா சொல்லி முடித்ததும், மீண்டும் துவங்கியது சைக்கிள் பயணம்.

அன்னப்பநாயக்கன் குப்பத்துக்குள் சைக்கிள்கள் நுழைந்தபோது, ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் நெருங்கி வந்த அந்த ஊரைச் சேர்ந்தவர் களிடம், ''இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறோம்'' என்று சொன்னதும், உற்சாகமாக அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் ஓடித் தகவல் சொல்ல... கூட்டம் சேர ஆரம்பித்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்த கோயில் ஒன்றின் முகப்பில்...

'மாடு ரெண்டும் மதுர வெள்ள...

மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு...’

என்று ராஜா பாடத் துவங்க, கச்சேரி களை கட்ட ஆரம்பித்துவிட்டது!

கச்சேரி நடந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த சிலரை அணுகிப் பேசினோம்.

''எனக்கு 70 வயசு ஆவுது ராசா. என் வயசுக்கு இப்படி ஒரு கச்சேரி எங்க ஊர்ல நடந்ததே இல்லை. இதுதான் நான் கேட்கற முதல் கச்சேரி. குழந்தைங்க நீங்க நல்லா இருக்கணும்!'' என்றார் ஏழுமலை என்ற முதியவர் நம்மிடம்.

''தேர்தல் முடிஞ்சுபோச்சுன்னா, எங்க ஊர்ப் பக்கம் அரசியல்வாதிங்ககூட வர்றதில்லை. ஆனா, உங்க செலவுல எங்களுக்குப் பாட்டுப் பாட வந்திருக்கீங்களே... ரொம்பப் பெரிய மனசு தம்பி உங்களுக்கு!'' என்றார் மகாலிங்கம் என்ற விவசாயி.

''நீங்க இனிமேல் அடிக்கடி எங்க ஊருக்கு வந்து இந்த மாதிரி கச்சேரி செய்தா ரொம்ப நல்லா இருக்கும். சினிமாப் பாட்டோட, நாட்டுப்புறப் பாட்டும் பாடுறது எங்களுக்கு ரொம்பப் புடிச்சிருந்தது!'' என்றார் பூங்கொடி என்ற இல்லத்தரசி.

- ப.திருப்பதிசாமி, படங்கள்: ஆர்.விஜி