Published:Updated:

எஸ்.எம்.எஸ்.விளம்பரம்: அபராத எச்சரிக்கை!

எஸ்.எம்.எஸ்.விளம்பரம்: அபராத எச்சரிக்கை!
எஸ்.எம்.எஸ்.விளம்பரம்: அபராத எச்சரிக்கை!
எஸ்.எம்.எஸ்.விளம்பரம்: அபராத எச்சரிக்கை!

புதுடெல்லி: பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டிங் எண்களில் இருந்து விளம்பர  குறுஞ்செய்திகள் அனுப்புவது தொடர்பாக அபராதம் விதிக்கப்படும் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக  தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விடுத்துள்ள  எச்சரிக்கையில்,"பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டிங் எண்களில் இருந்து விளம்பர  குறுஞ்செய்திகள் அனுப்புவது குறித்து முதல் முறையாக வரும் புகாருக்கு எச்சரிக்கையும்,  அடுத்த புகாருக்கு ரூ.500 அபராதமும், 3வது முறையாக புகார் வந்தால் இணைப்பு  துண்டிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

##~~##
செல்போன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக விளம்பரம் செய்ய டிராய்  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதையும் மீறி தற்போது பல புதிய எண்களில்  இருந்து விளம்பர குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து பொதுமக்கள் 1909 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது