##~##

ட்வர்ட் மூர்கன். அமெரிக்க நாடகக் கலைஞர். நாடகத் திருவிழாவுக்காக சென்னை வந்து இருந்தவர், மகளிர் கிறிஸ்துவ கல்லூரிக்கு வருகை தந்தார். அந்தக் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்லாது எம்.ஓ.பி., லயோலா, எம்.ஐ.டி, ஆல்ஃபா என அங்கே பல கல்லூரி மாணவ, மாணவிகள் கூடி இருந்தனர். நடிப்புப் பற்றி எவ்வித முன் அனுபவமும் இல்லாத அவர்களின் கூச்சம் கலைத்து, அவர்களை நடிக்க வைப்பதுதான் எட்வர்ட்டின் அன்றையப் பயிற்சிப் பட்டறையின் கான்செப்ட்.

 ''இதோ உங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தோழிகள், தோழர்கள் உங்கள் சொல் பேச்சு கேட்பார்கள். அவர்களை நீங்கள் வடிக்க விரும்பும் சிற்பமாகச் செதுக்குங்கள் பார்க்கலாம்'' என்று எட்வர்ட் சொல்ல, அடுத்த கணமே மாணவர்கள் சிற்பிகளானார்கள். 'உள்ளங்கைகளை விரித்து தாமரைப் பூவாக்கு, இடையை வளைத்து ஒய்யாரமாகச் சாய்ந்து நில், கழுத்தை இடது புறமாக வளைத்து ஓரக் கண்ணால் பார்'' என்று விதவிதமாகக் குறிப்புகள் கொடுத்தார்கள் மாணவர்கள். அடுத்த 10 நிமிடங்களில் 25 பேர் உயிருள்ள சிற்பங்களாக உறைந்து நின்றனர். ''காதலனை பிரிந்து வாடும் தலைவியின் சிலை, இது பசியில் அழும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாயின் சிலை, இது ஒரு கால் பந்தாட்ட வீரனின் சிலை...'' என்று தாங்கள் செதுக்கிய சிற்பங்களுக்கு மாணவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். 'இப்படி எல்லாம் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்!’ என்று அவர்களுக்குச் சில திருத்தங்கள் சொன்னார் எட்வர்ட்.  

இன்ஸ்டெண்ட் டிராமா!

''மேடையில் நிற்கும் ஒருவர், தான் எப்படி நிற்கிறோம், நடக்கிறோம், உட்காருகிறோம், ஓடுகிறோம் என ஒருமுறைக்கு பல முறை கண்ணாடியின் முன்பு ஒத்திகைப் பார்க்கவேண்டும். உங்கள் அசைவுகள் எது வானாலும் அது அந்தச் சூழ்நிலையோடு பொருந்திப் போகிறதா என்பதையும் கவனிக்கவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயிற்சி'' என்று விளக்கினார்.

அடுத்து குழுப் பயிற்சி. அங்கு இருந்த 50 மாணவர் களில் 10 பேரை மட்டும் முன்னே வரச் சொல்லி, பழையபடி கான்செப்ட்களை சொல்லச் சொன்னார். மாணவர்கள், 'கிரிக்கெட்’ என்றதும், முன் நின்ற

10 பேரும், அடுத்த கணமே, ஒருவர் பேட்டிங், மற் றொருவர் பௌலிங், இன்னொருவர் ஃபீல்டிங் என வெரைட்டியாக போஸ் கொடுத்தனர். ''ஒரு வார்த்தையைக் கேட்டவுடன், உடனடியாக நீங்கள் காட்டும் ரியாக்ஷன்தான் அநேகமாகச் சரியான நடிப்பாக இருக்கும். நாடகத்தில் நம்மைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தி னால் போதாது, சக நடிகர்களோடு சேர்ந்து எப்படி நடிக்கிறோம் என்பதில்தான் ஒரு நடி கனின் வெற்றியே இருக்கிறது'' என்ற எட்வர்ட், மாணவர்களை ஐந்தைந்து பேர்கொண்ட குழுவாகப் பிரித்து வார்த்தைகள் ஏதும் அற்ற இரண்டு நிமிட மௌன நாடகத்தை அரங்கேற்றச் சொன்னார். அதற்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான்.

இன்ஸ்டெண்ட் டிராமா!
இன்ஸ்டெண்ட் டிராமா!

ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதை மையக் கருத்தாகவைத்து நடித்த ஒரு நாடகக் குழு, எட்வர்டிடம் பாராட்டுப் பெற்றது. போர்க்களத்தில் எதிரி நாட்டவரோடு போராடும் ஒரு காட்சியைச் சித்திரித்த வேறொரு குழுவையும் பாராட்டினார். பிறகு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றி வகுப்பு எடுத்தார். எட்வர்ட் குழுவில் இருக்கும் கீர்த்தி என்ற நடிகை, நம் நாட்டைச் சேர்ந்தவர். ''இந்தக் குழுவில் சேர இ-மெயிலில் விண்ணப்பம் அனுப்பி, போனில் இன்டர்வியூ முடித்து, ஸ்கைப்பில் ரிகர்சல் பார்த்து, தற் போது இவர்களோடு சேர்ந்து 'சக்சஸ்’ என்ற நாடகத்தில் ஐந்து முறை நடித்துவிட்டேன். எட்வர்ட் சொன்ன மாதிரி நீங்களும் நாடகங் களை ஒரு விளையாட்டு மாதிரி விளையாடிப் பாருங்க. டீம் வொர்க்கில் எல்லாத்தையும் மறந்துடுவீங்க.. உங்களையும் சேர்த்து!'' என்று சிரிக்கிறார் கீர்த்தி.

- பி.ஆரோக்கியவேல், படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு