Published:Updated:

ஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு!

அந்தியூர் ஆச்சர்யம்...

##~##

டப்பிடிப்பின் போதே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது 'ஏழாம் அறிவு’ படம்! அந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து இருக்கிறது 'லக்கி’ என்கிற குதிரை. சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவனின்  குதிரை அது. அந்தியூர் குதிரை சந்தைக்கு வந்த வர்களை திமிறத் திமிற வரவேற்றுக் கொண்டு இருந்தது லக்கி. மொபைல் போன் க்ளிக்குகளுக்கு பாலீஷ் போஸ் கொடுக்கவும் தவறவில்லை. ''விலங்குகளுக்கு அஞ்சு அறிவுனு சொல்வாங்க. ஆனா, எங்க லக்கிக்கு எட்டு அறிவு. சொன்னதையும் செய்வான்; சொல்லாததையும் செய்வான். தமிழ், ஆங்கிலம் நல்லா புரிஞ்சுக்குவான். அவனுக்குப் பேச மட்டும்தான் வாய் இல்லை. மத்தபடி பார்வையிலும் செய்கையிலுமே எல்லாத்தையும் உணர்த்திடுவான்.

ஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு!

 சூர்யா எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அந்த வகையில் எங்க குதிரையைப் பத்தி தெரிஞ்சு நேரில் வந்தார்.  முதன்முதலாப் பார்த்த அப்பவே அவருக்கு லக்கியைப் பிடிச்சிருச்சு. தினமும் பாசமாப் பேசிப் பேசியே  லக்கியை கரெக்ட் பண்ணிட்டாரு. 10 நாட்கள் ஷூட்டிங் முடிச்சு கிளம்பினப்ப, 'வெரி நைஸ் ஹார்ஸ். லக்கியை விலைக்குக் கொடுத்துடுங்க. நான் சென்னையில்வெச்சு பராமரிச்சுக்கிறேன்’னு

ஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு!

சூர்யா ஆசையாக் கேட்டார். ஆனா, லக்கியைப் பிரிய மனம் இல்லாம, 'இதே மார்வார் ரகத்தில் உங்களுக்கு வேறு ஒரு குட்டி வாங்கித் தர்றேன் சார்’னு சொல்லிட்டேன்.

ஒன்றரை வயசு குட்டியா வாங்கிட்டு வந்த லக்கிக்கு இப்போ ஆறு வயசு. இன்னொரு படத்திலும் லக்கி நடிக்கப் போறான். இன விருத்திக்காக வர்ற குதிரை களையும் லக்கியுடன் இணையவிடுறோம். குதிரை களுக்கு உணவு, தண்ணீரை மட்டும் சரிவர கொடுத் தாலே போதும். குதிரை வளர்ப்பில் ஒரே சிரமம் அதுகளுக்கு அஜீரணத்தால் ஏற்படுகிற வயித்து வலிதான். அப்போ குதிரைகள் வயித்தைத் திரும்பி, திரும்பிப் பார்க்கும். கீழே படுத்து உருளும். அதைக் கவனிச்சு சிகிச்சைக் கொடுக்கணும்!'' - பூரிப்பு பொங்கிப் பெருக முடிக்கிறார் இளங்கோவன்.

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

அடுத்த கட்டுரைக்கு