Scooter Boutique எனப்படும் ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக ஷோரூமை, சென்னையில் தொடங்கியுள்ளது யமஹா. கார்களில் நெக்ஸா ஷோரூம் எப்படியோ, டூவீலர்களில் இந்த Scooter Boutique அப்படி. குரோம்பேட்டையில், பார்வதி மருத்துவமனைக்கு அருகில், 3,100 சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த ஷோரூமில், ஸ்கூட்டர்களுக்கான சேல்ஸ் - சர்வீஸ் - அக்ஸசரீஸ் ஆகிய சேவைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் முதன்முறையாக இவ்வகை ஷோருமைத் தொடங்கியிருக்கும் யமஹா, இதுபோன்ற 20 ஷோரூம்களை விரைவில் இந்தியா முழுவதும் தொடங்கும் முடிவில் இருக்கிறது. பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் இந்த ஷோரூமில், ரே-Z, ரே-ZR, ஆல்ஃபா, ஃபஸினோ ஆகிய வழக்கமான ஸ்கூட்டர்களைத் தவிர, வெளிநாடுகளில் விற்பனைசெய்யப்படும் பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டரான XMax 300 காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.