##~##

கஸ்ட் 13, 14-ம் தேதிகளில் நாகர்கோவில் டெரிக் ஜங்ஷன், செட்டிக்குளம், இடலாக்குடி பகுதி மக்களுக்கு எல்லாம்... உற்சாக வெள்ளம். காரணம். என் விகடனும் டெரிக் மார்ட் கிளைகளும் இணைந்து நடத்திய 'என் விகடன் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிதான்!

 'சந்தா தொகையில் 50 சதவிகிதம் மதிப்புக்கு டெரிக் மார்ட்டில் உங்களுக்கு வேண்டிய பயன் உள்ள பொருட்களை அள்ளிச் செல்லுங்கள்’ என்று விகடன் அறிவிக்க, இன்ப அதிர்ச்சியோடு காலை 9 மணியில் இருந்தே குவியத் தொடங்கிவிட்டார்கள் நாகர்கோவில் வாசகர்கள். அவர்களை வரவேற்று குதூகலப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்  ஹலோ எஃப்.எம் குழுவினர். 'கூர்கா குருசிங்’ அற்புதராஜ், 'அஞ்சறைப் பெட்டி’ ஜெயகல்யாணி, 'ஜில்லுன்னு ஒரு காலை’ மகேந்திரன், 'ஜீக் பாக்ஸ்’ அருண்பாரதி என ஹலோ குழுவினர் திடீர் போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கினார்கள். அந்த  'பளிச்’ பரிசுகளை என் விகடனோடு இணைந்து அளித்தது டெரிக் மார்ட்!

ட்ரிபிள் ஷாட் ஷொட்டு!

நாகர்கோவில் என் விகடன் கொண்டாட்டத்தில் முதல் சந்தாதாரராகப் பதிவுசெய்தவர், கோட்டார் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்-தனலெட்சுமி தம்பதியினர். ''நான் ராமநாதபுரத்தில் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளரா இருக்கேன். தனலெட்சுமி இன்ஜினீயரிங் காலேஜில் உதவிப் பேராசிரியரா இருக்காங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து, நான் விகடன் வாசகன். என்னோட ஃபேவரைட் விகடன் எங்க ஊர்ல, அதிலும் வழக்கமா நான் பொருள் வாங்குற கடையிலேயே நிகழ்ச்சி நடத்துறாங்கன்னா, அதைவிட எங்களுக்கு வேற என்ன திருவிழா இருக்கு?'' என்று சிலிர்த்தவரைச் சுற்றி வளைத்தது எஃப்.எம் டீம்.

ட்ரிபிள் ஷாட் ஷொட்டு!

'ஹிட்டு, ஷொட்டு, குட்டு பகுதி விகடனில் எந்தத் தலைப்பில் வரும்?'' என்று ஆர்.ஜே-க் கள் கேள்வி கேட்க, ''ட்ரிபிள் ஷாட்!' என முதல் கேள்வியிலேயே சிக்சர் அடித்தார் தனசேகர். அவருக்கு 'சுடச் சுட’ ஹாட் பாக்ஸ் பரிசு. ''விகட னில் பழைய நினைவுகளை அலசும் பகுதியின்...?'' என்ற கேள்வியை முடிக்கவிடாமல், 'பொக்கிஷம்!'' என்று பதில் சொல்லி அசத்தினார் பெருவிளையைச் சேர்ந்த  நாகரத்தினம். ''நான் 'என் விகடன்’ விளம்பரம் பார்த்துட்டுதான் இங்கே வந்தேன். இப்பதான் முதல்முறையா டெரிக் கடைக்கு வர்றேன். ஆனந்த விகடன்னா எங்க வீட்ல எல்லாருக்குமே பிடிக்கும்!'' - என்று உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டார் நாகரத் தினம்.

நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஆண்டனி அரசு, ''என் விகடன் உள்ளூர் செய்திகளை ரொம்பவே எனர்ஜிட்டிக்கா எடுத்துச் சொல்லுது. 'ஸ்மைல் ப்ளீஸ்’ பகுதியில் இதுவரைக்கும் நான் எடுத்த மூணு படங்கள் வந்து இருக்கு. என் விகடனில் என் கொண்டாட்டம் பற்றிய அறிவிப்பு வந்ததுமே 13-ம் தேதியை எதிர்பார்த்துக் காத்து இருந்து காலையில் வந்து சந்தாவும் கட்டிட்டேன்!'' என்றார்.

முளகுமூட்டைச் சேர்ந்த சிறுவன் அட்சய கீர்த்தியிடம், ''குட்டிப் பசங்களுக்காக விகடனில் இருந்து வர்ற புத்தகம் பேர் என்ன?'' என்று ஆர்.ஜே ஜெயகல்யாணி கேட்க, ''நீங்க எந்த ஸ்கூல் மிஸ்? இங்க வந்தும் கேள்வி கேக்குறீங்க?'' என்று  எதிர் கேள்விக் கேட்டு சிரிக்கவைத்தான் கீர்த்தி. ''ரொம்ப சுட்டியா

ட்ரிபிள் ஷாட் ஷொட்டு!

இருப்பீங்கபோல!'' என்று ஜெயகல்யாணி 'க்ளூ’ கொடுக்க,  ''சுட்டி விகடன்!'' என்று பாயின்ட் பிடித்து பதில் சொன்னான் கீர்த்தி.

ஒரே நிமிடத்தில் எத்தனை முறை 'ஐ லவ் ஆனந்த விகடன்’ சொல்கிறார்கள் என்பது இன்னொரு போட்டி. பெரியவர்களே திணறிக் கொண்டு இருக்க, 20 முறை 'ஐ லவ் ஆனந்த விகடன்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினாள் இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஆர்த்தி. அதற்காக ஆர்.ஜே கிஃப்ட் பாக்ஸை ஆர்த்தியின் கையில் கொடுக்க, ''ரியலி ஐ லவ் ஆனந்த விகடன்!' என்று விடாமல் அசரவைத்தாள்.  

கை நிறைய பரிசுகளோடு, உற்சாகமாக விடைபெற்றார்கள் வாசகர்கள். பசுமையான நினைவுகளோடு இனிதே நிறைவு பெற்றது 'என் விகடன் கொண்டாட்டம்!’

   - என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு