##~##

'பொற்காலங்கள் - ஒரு மார்க்ஸிய ஆய்வு’, 'அடிமை முறையும் தமிழகமும்’, 'அடித்தள மக்கள் வரலாறு’ உள்ளிட்ட 24 ஆய்வு நூல்களை எழுதி, பல்வேறு விருதுகள் வாங்கி இருக்கும் புலவர் சிவசுப்பிரமணியன், தன்னுடைய சொந்த ஊர் ஓட்டப்பிடாரம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்...

 ''ஓட்டப்பிடாரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்பதுதான் பழைய பெயர். கட்ட பொம்மனின் தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, வ.உ.சி., ஆஷ் கலெக்டர் கொலை வழக் கில் தேடப்பட்ட மாடசாமி இவங்க எல்லாமே எங்க ஊர்க்காரங்கதான். திருச்சியைச் சேர்ந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன், தன்னுடைய முதல் கன்னிப் பேச்சை இங்குதான்  துவக்கினார். அந்தக் காலத்தில் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகள் எங்கள் பகுதிகளில் நிறைய உண்டு. அந்தக் காடுகளில் மூன்று புலிகள் சேர்ந்து ஒரு மள்ளர் சமூகத்தவரை தாக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால், அவர் தைரியமாக ஒற்றை வாளைவைத்து, அந்த மூன்று புலிகளையும் வெட்டி, விரட்டி இருக்கிறார். அதனால், அந்த இடத்துக்கு 'முப்புலி வெட்டி’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

என் ஊர்!

எங்க ஊரில் பாசனத்துக்காக ஒரு பெரிய குளம் இருந்தது. அந்தக் குளத்தில் புது தண்ணீர் உள்ளே நுழைந்தால் பழைய தண்ணீர் தானாக வெளியில் போகும். அப்போதே வடிகால் நுட்பத்தை அழகாகப் பயன்படுத்தி இருந்தார்கள். குளங்களில் மனிதர்கள் குளிப்பதற்கு என்றும், கால் நடைகளைக்

என் ஊர்!

குளிப்பாட்டுவதற்கு என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து இருப்பார்கள். அப்போதே சுகாதாரம் குறித்த அக்கறையோடு மக்கள் இருந்தது ஆச்சர்யமான விஷயம். அந்தக் காலத்தில் எங்க ஊரைச் சுற்றி ஆத்தி என்பவரே எல்லாக் கிணறுகளையும் வெட்டு வார். நவீன ரக இயந்திரம் எதுவும் இல்லாத காலத்திலும் 'மிக விரைவில் வேலையை முடிப்பவர்’ என்று பெயர் எடுத்து இருந்தார். அதேபோல எங்கள் ஊர் கட்டடங்களை ஷேக் முகைதீன் என்பவர்தான் கட்டி இருப் பார். அவர் மட்டும்தான் அப்போது ஊர் முழுவதுக்கும் ஒரே கொத்தனார்.

தொலைத் தொடர்பு வசதியே இல்லாத அந்தக் காலத் தில் எட்டுப் பேர் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை சிங்கம்பாட்டையா என்பவர் தட்டபாறைக்கும் ஓட்டப் பிடாரத்துக்கும் இடையே ஓட்டி வந்து இருக்கிறார். அப்படி விஞ்ஞான அறிவுகொண்ட அவர், வீட்டை விட்டு வெளியேறும்போது வ.உ.சி. மீது விழும்படியாகக் கனத்த கட்டை ஒன்றை செட் பண்ணிவைத்து இருந்து இருக்கிறார். சிலர் பார்த்து அதை எடுத்துவிட்டதால் வ.உ.சி. உயிர்த் தப்பி இருக்கிறார். 'மள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமையா தேசிங்கனை வ.உ.சி. எப்படி வீட்டில் தங்க வைக்கலாம்?’ என்பதுதான் சிங்கம்பாட்டையாவின் கோபத்துக்குக் காரணம்!

என் ஊர்!

என் அப்பா இறந்த பிறகு, தூத்துக்குடியில் குடியேறி விட்டேன். சமீபத்தில் ஓட்டப்பிடாரம் சென்று இருந்த போதுதான் கவனித்தேன். அப்போது எல்லாம் ஒரு குறிப் பிட்ட சமுதாயத்தவர் ஒரு குறிப்பிட்ட தெருவில் மட்டுமே வசிப்பார்கள். இப்போது எல்லாரும் எல்லாப் பகுதியிலும் வசிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதுபோல் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி பெற்று இருக்கிறார்கள். வரவேற்கப்படவேண்டிய மாற்றம் இது!'' - சிரிக்கிறார் புலவர் சிவசுப்பிரமணியன்.

- எஸ்.சரவணப்பெருமாள், படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு