Published:Updated:

மறைந்திருந்து டேட்டிங் மர்மம் என்ன?

மறைந்திருந்து டேட்டிங் மர்மம் என்ன?

டேட்டிங்னா என்னன்னு தெரியுமா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு காதலோ கல்யாணமோ பண்ணிக்கிறதுதான் டேட்டிங். இதற்கென்று மேற்கத்திய நாடுகளில் ஏராளமான இணையதளங்கள் உண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த டேட்டிங் இணையதளமான லவ் ஃபுளுட்டர் அவ்வப்போது விதவிதமான டேட்டிங் ஐடியாக்களை செயல்படுத்திப் பார்க்கும். அப்படி ஒரு 'மாத்தி யோசி’ ஐடியாதான் இது. 

ஆர்வமுள்ள சில இளைஞர்களிடம் முன்பின் அறிமுகமில்லாத பெண்களோடு டேட்டிங் செய்யக் கேட்டுக்கொண்டது. ஒரே ஒரு நிபந்தனை. ஒருவருக்கொருவர் முகத்தினை மூடிக்கொள்ள வேண்டும். அதன்படி வந்த பங்கேற்பாளர்கள் முகத்தினை ஒரு பேப்பர்பேக்கினால் மூடிக்கொண்டார்கள். ''முகம் என்பது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பிரதானம் இல்லை என்று உணந்துகொண்டேன்'' என்கிறார் டேட்டிங்குக்கு வந்த ஆலன் டைன் என்ற நபர். ''ரெண்டு நிமிஷத்துல வாழ்க்கைத் துணையை முடிவு செய்ய முடியுமா? இது வேலைக்காகாது'' என்று உதட்டைப் பிதுக்குகிறார் அயன் மேடிஸன் என்ற இன்னொரு இளைஞர்.

மறைந்திருந்து டேட்டிங் மர்மம் என்ன?

'முகத்துக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இமில்லை என்று நிரூபிக்கவே இந்த நிகழ்ச்சியை நடத்தினோம், விரைவில் இந்த நிகழ்ச்சி நியூயார்க் நகரத்திலும் நடைபெறும்’ என்று லவ் ஃபுளுட்டர் இணையதளம் தெரிவித்துள்ளது.

ஹேஹே... நாங்கள்லாம் 15 வருஷத்துக்கு முன்னாலேயே ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம 'காதல் கோட்டை’ கட்டினவய்ங்க பாஸ்!

- செந்தில்குமார்

அடுத்த கட்டுரைக்கு