Published:Updated:

ஸ்பிரே அடி டிரெஸ் ரெடி!

விகடன் விமர்சனக்குழு

''துணி வாங்கித் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொடுத்து, அது எப்போ கிடைக்கும்னு டென்ஷனாகி டெய்லர் கடையில் நின்னு, புது டிரெஸ் வாங்கி, காலர்ல மஞ்சள் வெச்சுப் போட்டு அழகு பார்த்திருப்போம். ஆனா, இப்போ டெய்லர் கடைகள் காத்தாட, பெரும்பாலானவர்கள் ரெடிமேடுக்கு மாறியாச்சு. அதன் அடுத்த கட்டம் ஃபேப்ரிகன்.

ஸ்பிரே அடி டிரெஸ் ரெடி!

ஒரு பாடி ஸ்பிரே வடிவத்தில் பாட்டிலுக்குள் இருக்கும் திரவம் உங்களின் ஆடையாக மாறும் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் ஃபேப்ரிகன். செயற்கை முறையில் தயார் செய்யப்படும் மெல்லிய நூல், திரவ வடிவில் வெவ்வேறு நிறத்தில் தயார் செய்யப்படுகிறது. பிறகு நம்மை நிறுத்தி, நம் மேல் தேவையான ஆடையை தேவையான விதத்தில் ஸ்பிரே செய்தால், புது டிரெஸ் ரெடி!

ஸ்பிரே அடி டிரெஸ் ரெடி!

மேனல் டொரஸ் ((Manel Torress) என்பவர்தான் இந்த யோசனைக்கு விதை விதைத்தார். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்டில் 'எம்.ஏ ஃபேஷன் வுமன்ஸ் வியர்’ படித்துக்கொண்டி ருந்தபோது தனது பி.ஹெச்டிக்காக ஃபேப்ரிகன் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதற்கு  ஃபேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினீயரிங் பேரா சிரியர்கள் உதவ, உருவானது ஃபேப்ரிகன் முறை. தற்போது ஃபேஷன் ஷோக்களில் ஆடைகள் வடிவமைக்க இதைப் பயன்படுத்தி வருகிறார். இது தவிர மருத்துவத் துறையில் காயங்களுக்குக் கட்டு போட, தரை துடைக்கும் துணியாக உபயோகப்படுத்த, உடனடி இருக்கைகள் எனப் பல வகைகளில் உதவும் என்று சொல்கிறார் மேனல் டொரஸ். இதைப் பற்றிய வீடியோவைப் பார்க்க(http://www.fabricanltd.com/index.php)லிங்க்குக்குப் போங்க!

ட்ரெஸ் வேணுமா? இன்னும் கொஞ்ச நாளில், 'அந்த ஸ்பிரே பாட்டில எடுப்பா' என்று சொல்கிற காலம் வரும்!

பா.ஜான்ஸன்