Published:Updated:

உங்க வீட்ல குப்பை இருக்கா?

'நல்லது பண்றதுக்கு பழைய பேப்பர் போதும்’ என்கிறது ஓர் அமைப்பு. புரியலையா?

'மறுசுழற்சி பயன்பாடு’ குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக 2010ல் தொடங்கப்பட்ட 'பேப்பர்மேன்’ அமைப்பு, அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய முயற்சி இது. இதோ, அதன் நிறுவனர் மேத்யூ ஜோஸே விளக்குகிறார்.

உங்க வீட்ல குப்பை இருக்கா?

''கேரளாவில் பிறந்தாலும் நான் படிச்சு வளர்ந்ததெல்லாம் சென்னைதான். கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுதான் 'பேப்பர்மேன்’ அமைப்பு. இந்த அமைப்பு மூலமா 2010ல் இருந்து மறுசுழற்சியைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கோம். எல்லோருக்கும் 'மறுசுழற்சி’ பயன்பாடு பற்றித் தெரிஞ்சிருந்தாலும் அதை தினமும் நடைமுறைப்படுத்திக்கிட்டு இருக்கிறது காயலான் கடைக்காரர்தான். தன்னோட வருமானத்துக்காக அவர் அந்தத் தொழிலை செஞ்சாலும் அதனால பூமிக்கும் சுற்றுச்சூழலுக்கும் அவர் எவ்வளவு முக்கியமானவரா இருக்கிறார். இந்தியா முழுக்க 15 லட்சம் காயலான் கடைக்காரர்களால் 'ரீசைக்கிளிங்’ நடந்துக்கிட்டு இருக்கு. நாங்க

உங்க வீட்ல குப்பை இருக்கா?

பேசிட்டு இருக்கிற விஷயத்தை, காயலான் கடைக்காரர்கள் செயல்படுத்திக்கிட்டு இருக்காங்க. இவங்கதான் இந்தச் சேவைக்கு ஆதாரம்'' என்று உற்சாகமாகத் தொடங்கி, தொடர்ந்தார் மேத்யூ.

''வீட்ல இருக்கிற பழைய பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி... இன்னும் பல குப்பைகளை உங்க ளோட வீட்டுக்கே வந்து எங்க அமைப்புல வாங்கிக்குவாங்க. இதன் மூலமா கிடைக்கிற பணத்தை சில என்.ஜி.ஓக்களுக்குக் கொடுத்து பெண் குழந்தைகளோட கல்விக்கும் முதியோர்களுக்கான மருத்துவத்திற்கும் பயன்படுகிற மாதிரி செய்றோம். இதற்கென்றே பிரத்யேகமான 'ஹெல்ப்லைன்’ நம்பரைக் கொடுத்திருக்கோம். அந்த நம்பர் 8015269831. வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை இது செயல்படும். சென்னையில் எந்த ஏரியாவில் இருந்தாலும் பக்கத்தில் இருக்கிற காயலான் கடைக்காரரை நாங்க தொடர்புகொண்டு உங்க வீட்டுக்கு அனுப்பிவைப்போம். உதவுகிற மனப்பான்மை இருக்கிற எல்லோரும் செய்ய வேண்டியது ஒரே ஒரு போன்கால்தான். நீங்க தருகிற பொருட்களோட விலை விபரம் அடுத்த சில நிமிடங்களில் உங்களுக்கு எஸ்.எம்.எஸ்ல அனுப்பி வெச்சுடுவோம். தவிர, என்.ஜி.ஓக்கள் மூலமாக உங்கள் குப்பைகள் எப்படி கல்விக்கும் மருத்துவத்துக்கும் பயன்பட்டதுங்கிற விபரத்தையும் உங்களுக்கு மெயில் பண்ணிடுவோம். இதுவரை 200க்கும் அதிகமான குழந்தைகளுக்கு 'குப்பைகள்’தான் கல்வி கொடுத்திருக்கு. இன்னும் நிறைய பேருக்குக் கொடுக்கணும். இந்த முயற்சிக்குப் பல இடங்களிலிருந்து பாராட்டுகளும் விருதுகளும் வந்தாலும் எங்களுடைய நோக்கம் அது இல்லை. கன்னியாகுமரியில் இருக்கிற ஒரு குழந்தைக்கு, காஷ்மீர்ல இருக்கிற ஒருத்தரோட 'குப்பை’ பயன்படணும். இதுக்கெல்லாம் தேவை உங்க வீட்ல இருக்கிற பழைய பொருட்கள் மட்டும்தான்'' என்கிறார் மேத்யூ.

பழசல்ல... புதுசுதான் மேட்டர்!

கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு