Published:Updated:

என்ன அழகு... எத்தனை அழகு!

லிப்ஸ்டிக் உறுத்தினால்...ஃபவுண்டேஷன் போடுங்கள் !

 'அழகுக் கலை நிபுணர்’ வீணா குமாரவேல்

என்ன அழகு... எத்தனை அழகு!

'காலேஜுக்கு என்ன மாதிரி மேக்கப் போட்டுக் கொண்டு போவது?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இதுதான் இன்றைய மாணவிகள் பலருக்கும் தலையை உடைக்கும் கேள்வி!

'மேக்கப் போட்டிருக்கிறேன் என்பது தெரியக்கூடாது. குறைந்தது ஆறு மணி நேரமாவது தாக்குப் பிடிக்க வேண்டும்’ என பலவித கண்டின்ஷன்களோடுதான் வருகிறார்கள் பெரும்பாலான மாணவிகள். அவர்கள் அனைவருக்கும், இங்கே எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவி ஷாலினிக்கு நாங்கள் போட்டிருக்கும் மேக்கப் உதவும் என நினைக்கிறேன்.

ஏற்கெனவே சொன்னது மாதிரி, முதலில் சி.டி.எம். (CTM)... அதாவது, க்ளென்ஸர், டோனர் மற்றும் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்ய வேண்டும். ஷாலினி மாதிரி ஆயிலி ஸ்கின் இருந்தால், மூக்கு மற்றும் நெற்றியில் எண்ணெய்ப் பசை டாலடிக்கும். அதனால் அந்த இடங்களில் முதலில் 'பிரைமர்’ அப்ளை செய்ய வேண்டும். அது ஒரு வகையான 'மேட் ஃபினிஷ்’ கொடுக்கும்.

##~##

அடுத்து, உங்கள் சருமத்தின் நிறம் கொண்ட ஃபவுண்டேஷனைத் தேர்ந்தெடுத்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள் (சருமத்துடன் ஒன்றிப்போகும் ஃபவுண்டேஷன் எது என்பதை, புறங்கையில் தடவிப் பார்த்து வாங்குவார்கள். ஆனால், புறங்கை என்பது வெயில் பட்டு நிறம் மாறி இருக்கும். அங்கே அப்ளை செய்து பார்த்தால் ஒரிஜினல் ரிசல்ட் கிடைக்காது. எனவே,  தாடைக்குக் கீழே தடவிப் பார்த்து, அது சரும நிறத்துடன் இயைந்துபோகிறதா என்று தேர்ந்தெடுங்கள்).

கண்களுக்கு கீழே கருவளையங்கள் இருந்தால், கன்சீலர் கொண்டு மறையுங்கள். கன்சீலர் வேண்டாம் என்றால், கருவளையங்கள் இருக்கும் இடத்தில் ஃபவுண்டேஷனை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்யுங்கள். இது நன்கு ஃபிக்ஸ் ஆவதற்காக, அதன் மீதே 'ட்ரான்ஸ்லூஸண்ட்’ பவுடரை கொஞ்சமாக அப்ளை செய்யுங்கள் (இது முகத்துக்குப் போடும் பவுடர் இல்லை). முகத்தில் இருக்கும் தேவையில்லாத பவுடர் துகள்களை பிரஷ் கொண்டு சுத்தம் செய்துவிடுங்கள்.

என்ன அழகு... எத்தனை அழகு!

'கல்லூரி மேக்கப்' என்பதால் மிகமிக லைட்டாக ஐ ஷேடோ கொடுங்கள். பென்சில் கொண்டு லேசாக ஐ லைனர் போட்டுக் கொள்ளுங்கள். கல்லூரிக்கு லிப்ஸ்டிக் என்பது உறுத்தலாக இருக்கும் என்று நினைப்பவர்கள், ஃபவுண்டேஷனையே உதட்டுக்கும் கொடுக்கலாம். 'ஃபவுண்டேஷனையா..?' என்று சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தாராளமாக அப்ளை செய்யலாம். அது, சருமத்தின் நிறத்தைஒட்டியதாகவே இருப்பதால், பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்காது. பிசிறு ஏதுமிருந்தால்... டிஷ்யூ பேப்பர் கொண்டு அழுத்தி எடுங்கள்.

என்ன அழகு... எத்தனை அழகு!

கண்களுக்குக் கீழே இருக்கும் எலும்புகள் தெரிந்தால்தான் அழகு. அதனால் அந்த இடங்களில் மட்டும் லேசாக 'ப்ளஷ்’ அப்ளை செய்யுங்கள். முகத்துக்கு அழகே, மூக்கு ஷார்ப்பாக இருப்பதுதான். மூக்கின் பக்கவாட்டுப் பகுதிகளை விட்டுவிட்டு, மேல் பகுதியில் மட்டும் 'கேளமர் க்ளோ பவுடர்’ அப்ளை செய்தால்... மூக்கு எடுப்பாகத் தெரியும். தேவைப்பட்டால் நெற்றி, முகவாயிலும் இதை அப்ளை செய்யலாம்.

உங்கள் கல்லூரியில் டி-ஷர்ட்டுக்குத் தடையில்லை என்றால்... ஜீன்ஸ், டி-ஷர்ட் ஓகே. தடையென்றால்... இருக்கவே இருக்கிறது, சுடிதார். உங்கள் உடை எதுவாக இருந்தாலும் கையில் நீங்கள் எடுத்துப்போகும் பையும் உங்கள் அழகைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம் என்பது நினைவிருக்கட்டும்!

- மிளிரும்...
படங்கள்: கே.கார்த்திகேயன்