Published:Updated:

ஊட்டி, கொடைக்கானலாக மாறிவரும் கன்னியாகுமரி! குளு குளு காலநிலையால் குவியும் சுற்றுலா பயணிகள்

நான்கு நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திரிவேணி சங்கமத்தில் காலை முதல் பயணிகள் குவிந்து வருகின்றனர். கார், பஸ், வேன் களில் பயணிகள் அதிகமாக வருவதால் கன்னியாகுமரி நகரம் பரபரப்பாகவும்,போக்குவரத்து நெரிசலாகவும் காணப்படுகிறது.

பயணிகள் கடலில் கால் நனைத்துக் கொண்டு, காந்திமண்டபம், விவேகானந்தர் மண்டபம், காமராஜர் மணிமண்டபம் என கன்னியாகுமரியின் ஒவ்வோர் அடையாளங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர். விவேகானந்தர் மணிமண்டபத்தைக் காண பூம்புகார் படகு போக்குவரத்து அலுவலகம் முன் நீண்ட வரிசை காணப்பட்டது. கடந்த இரண்டு நாள்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தைப் பார்த்துள்ளனர். பகவதி அம்மன் கோயிலும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. காலை சூரிய உதயத்தையும், மாலையில் சூரிய அஸ்தமனத்தையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வந்த நிலையில் இன்று காலை, கன்னியாகுமரியில் மேக மூட்டம் காணப்பட்டது.

இதனால், சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். காலை 9  மணி முதல் மேக மூட்டம் திடீரெனப் பனி பொழிவாக மாறியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் பனியால் மூடப்பட்டு மறைந்து காணப்பட்டது. இந்தத் திடீர் சீதோஷ்ண கால மாற்ற  நிலையால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். ஊட்டி, கொடைக்கானலில்  காணப்படும் குளு குளு கால நிலை நிலவி வருவதால் பயணிகளும், பொதுமக்களும் கன்னியாகுமரிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு