Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஆலோசனைசா.வடிவரசு, படங்கள்: கு.கார்முகில்வண்ணன், ச.ஹர்ஷினி 

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஆலோசனைசா.வடிவரசு, படங்கள்: கு.கார்முகில்வண்ணன், ச.ஹர்ஷினி 

Published:Updated:

'எங்கே இருக்கிறது பாதுகாப்பு?'

தினசரி வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் சின்னச் சின்ன விஷயங்களின் பெரிய அழகை, அதன் இயல்பு மாறாமல் பதிவிடுவது சிலரால் மட்டுமே முடிகிற காரியம். ஆனந்த விகடன் இதழில் 'பேசாத பேச்செல்லாம்’ தொடர் மூலமாக இதைச் செய்து வருகிறார்... ஊடகவியலாளர் ப்ரியா தம்பி.

மீடியாத் துறை கனவோடு எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் முடித்து, தனியார் தொலைக்காட்சி சேனல், ஆங்கில நாளிதழ், தமிழ் பருவ இதழ்கள் என்கிற பணி அனுபவத்தோடு, மீடியா பணியை தொடர்ந்துகொண்டிருக்கும் ப்ரியா தம்பி,  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மீடியா துறை பெண்களுக்குப் பாதுகாப்பற்ற துறை என்றே இங்கே பரப்பப்படுகிறது. நடந்து போகும் சாலை தொடங்கி, உறங்கும் வீட்டறை வரை பெண்களுக்கு எங்கு முழுமையான பாதுகாப்பு இருக்கிறது? பாதுகாப்பு என்பதை நாம்தான் நம்மைச் சுற்றி உருவாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர... யாரோ பாதுகாப்பு தருவார்கள் என்று எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது!'' என்று சொல்வதோடு, உங்களிடம் மனம் விட்டுப் பேசவும் கைவசம் சில தலைப்புகளை வைத்திருக்கிறார்.

 சிரமமான காரியம் என்கிறோமே... உண்மையில் எது சிரமமான காரியம்?

 ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவில் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். அது ஏன்?

 பெண் குழந்தை பெற்ற அம்மாக்களே... உங்களிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

 நாளுக்கு நாள் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்? அதன் பின்னணியில் உள்ள அவலச் செய்தி என்ன?

 'குழந்தையின் பிரச்னையும்... அம்மாவின் வறுமையும்’ - ஒவ்வொருவரும் கட்டாயம் கேட்க வேண்டிய கதை இது.

 தமிழ் சினிமாவில் பெண்களின் வாழ்க்கை பற்றிய பதிவுகள் அதிகளவில் வருவதில்லையே... ஏன்?

 சமூக வலைதளங்களில் பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் என்பது உண்மையில் சுதந்திரம்தானா?

- இதையெல்லாம் உங்களிடம் பேச ஆவலோடு காத்திருக்கிறார் ப்ரியா தம்பி. நிச்சயம் அது உங்கள் மனதுக்குள் பல புரிதல்களை உண்டாக்கும்.

செப்டம்பர் 23 முதல் 29 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

முதலுதவி அறிவோமா..?

ன்று இந்தியாவில் நிமிடத்துக்கு 17 பேர் விபத்தால் இறக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில், 80 சதவிகிதம் பேர், பொதுமக்களுக்கு போதுமான விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தாலேயே இறக்கிறார்கள்'' என்று அதிர்ச்சி கூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த 'அலர்ட்' அமைப்பின் நிறுவனர் கலா.

விபத்து நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்கள்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகமிக முக்கியமான நிமிடங்கள். 'கோல்டன் ஹவர்’ எனப்படும் இந்த நிமிடங்களில் செய்ய வேண்டிய முதலுதவிகள்தான், ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். விபத்து நடந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான இடைவெளியில் இருக்கும் நிமிடங்கள் பற்றிய புரிதல் இங்கே மிகமிகக் குறைவு. இத்தகைய முதலுதவி பற்றி டாக்டர், நர்ஸ், தீயணைப்புத்துறையினர் போன்றோர் மட்டும் தெரிந்து வைத்திருப்பது போதாது... ஒவ்வொரு தனிநபரும் தெரிந்து வைத்திருந்தால்தான்... நூறு சதவிகிதம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்! இதற்காகவே பொதுமக்களுக்குப் பயிற்சி தரும் பணியில் கடந்த 8 ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது 'அலர்ட்’ அமைப்பு!

''எங்கள் 'அலர்ட்’ அமைப்பின் மூலமாக பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என பல தரப்பினரையும் சந்தித்து, தேசிய மற்றும் மாநில மருத்துவ அமைப்புகளின் அனுமதியோடு, முதலுதவியாளராகும் பயிற்சியை வழங்குகிறோம். 'முதலுதவி செய்யப்போய் போலீஸ் கேஸ் ஆயிடுமோ’ என்கிற அச்சத்திலேயே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலையை மாற்ற, இதனால் வரக்கூடிய சட்ட சிக்கல்கள் பற்றியும் பயிற்சியில் கூறிவருகிறோம்.

எங்கள் அமைப்பில் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட 30 பேர் நிரந்தர உறுப்பினர்களாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாகவும் இணைந்து செயல்பட்டுவருகிறார்கள். இதுவரை நாங்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி வழங்கிஇருக்கிறோம். வாருங்கள்... நீங்களும் முதலுதவியாளராகலாம்!'' என்று அக்கறையுடன் அழைக்கும் கலா, ''குடும்பத்துக்கு ஒருவரல்ல, மொத்தக் குடும்பமுமே முதலுதவி பற்றி தெரிந்து வைத்துக்கொள்வதுதான் நல்லது'' என்றபடி, முதலுதவி பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தையும் உங்களிடம் நேரில் சொல்லக் காத்திருக்கிறார்.

செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6 வரை தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

 இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism