Published:Updated:

ரஜினியிடமிருந்து நல்ல செய்தி வருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ரஜினியிடமிருந்து நல்ல செய்தி வருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ரஜினியிடமிருந்து நல்ல செய்தி வருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ரஜினியிடமிருந்து நல்ல செய்தி வருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ரஜினியிடமிருந்து நல்ல செய்தி வருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சுதந்திர தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க மாட்டாரா? என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி, தமிழக அரசியல் அரங்கில் பெரும் சூட்டைக் கிளப்பியது. அவர் அரசியலுக்கு வரப்போவதாகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், சிஸ்டம் சரியில்லை என்றும் அதைச் சரிப்படுத்தவேண்டியது அவசியம் எனவும் பேசினார். 

அத்துடன் ரசிகர்களிடம் பேசுகையில், ‘நீங்க எல்லோரும் ஊருக்குப் போய், உங்க வேலையைப் பாருங்க. போர் வரும்போது பார்த்துக்கலாம்’ என்று பேசித் தொண்டர்களை உசுப்பேற்றினார். அவரது பேச்சு காரணமாக, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்றும் தனிக்கட்சி தொடங்குவார் எனவும் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் ரஜினிகாந்த், தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை அவர் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டால், அதிலாவது தனது அரசியல் பிரவேசம், வருங்காலத் திட்டம் குறித்து சூசகமாக அறிவிக்கக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் ரஜினியின் அறிக்கையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், ’’1996 முதலாகவே, தமிழக அரசியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான இடம் காலியாகவே இருக்கிறது. அவரது அரசியல் பிரவேசத்தை, எங்களைப் போன்ற ரசிகர்கள் மட்டும் அல்லாமல்  பொதுமக்களும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். அது ரஜினிக்கும் தெரியும். அதனால், அவர் இனியும் தாமதம்செய்ய மாட்டார் என்றே நினைக்கிறோம். தற்போதைய தமிழக அரசியல் சூழலில், ரஜினியின் தேவை மிகவும் அவசியம் என்பதால், இந்த சுதந்திர தினத்திலாவது அவர் சரியான முடிவை அறிவிக்க வேண்டும்’’ என்கிறார்கள், ஆதங்கத்துடன். 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா நடிகர்  ரஜினிகாந்த்?
 

அடுத்த கட்டுரைக்கு