Published:Updated:

இது தன்னம்பிக்கை ஃபேஷன் !

இது தன்னம்பிக்கை ஃபேஷன் !

டிரெஸ்ஸிங் ரூம்!

 'ஆடை அலங்கார நிபுணர்’ அனுராதா பிஸானி

நம் நாட்டுப் பெண் களுக்கு, வெஸ்டர்ன் டிரெஸ் மோகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலொன்றும் தவறில்லை. ஆனால், அத்தகைய டிரெஸ் வகைகளை அணியும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... அவ்வளவுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இது தன்னம்பிக்கை ஃபேஷன் !
##~##

அணியும் உடை எதுவானாலும் நம்பிக்கையோடு அணிய வேண்டும். 'நமக்கு இந்த உடை நன்றாக இருக்குமோ... இருக்காதோ?’ என்கிற சந்தேகத்தோடு அணிந்தால், கடைசி வரை அது நமக்கு நன்றாக இல்லை என்கிற எண்ணத்தையே மனதளவில் ஏற்படுத்தும். ஆக... ஆடையோடு, தன்னம்பிக்கையையும் சேர்த்து அணிந்தால்தான் அழகே!

கல்லூரி மாணவியான திவ்யா... முதல் படத்தில் அணிந்திருப்பது டூனிப். இதை 'ஷார்ட் மிடி' என்றுகூட சொல்லலாம். பொதுவாக மேற்கத்திய பெண்களாக இருந்தால்... இந்த டூனிப், பெல்ட் மற்றும் பூட்ஸோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், திவ்யாவுக்கு அப்படி அணிவது பிடிக்கவில்லை. அதனால் ஷார்ட் லெகீங்ஸையும் கூடுதலாக அணிந்திருக்கிறார். திவ்யா ஒல்லியாக இருப்பதால் இந்த உடை அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்திஇருக்கிறது. இதுவே குண்டாக இருந்தால்... அவ்வளவாகப் பொருந்தாது!

இது தன்னம்பிக்கை ஃபேஷன் !

இதே உடையை பெல்ட் மற்றும் லெகீங்ஸுடன் இருக்கும் நூல் இரண்டையும் நீக்கிவிட்டு, அணிந்திருப்பது திவ்யாவுக்கு புதுவிதத் தோற்றம் தருவதை அடுத்த படத்தில் கவனியுங்கள். இந்த கெட்டப்புக்கு, கை வளையங்கள் சிலவற்றை அணிந் திருக்கிறார். அதுவும் பொருத் தமாக இருக்கிறது அல்லவா!

இது தன்னம்பிக்கை ஃபேஷன் !

எங்கும் கறுப்பாக இருக்கிறதே. இந்தப் பேட்டனை கொஞ்சம் பிரேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்... ஸ்டோல் (ஷிtஷீறீமீ) அல்லது ஷால் அணியலாம். இங்கே ஷாலை இடுப்பில் கட்டியிருப்பது திவ்யாவுக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுப்பதை பாருங்கள்!

இதே ஷாலை, தலைமுடியோடு சேர்த்துப் பிணைத்து... தோளில் தவழவிட்டு நிற்கும்போது என்ன நளினமாக இருக்கிறார் திவ்யா!

அடுத்த இதழுடன் நிறைவடைகிறது...

படங்கள்: பொன்.காசிராஜன்