Published:Updated:

ஆல் இஸ் வெல்! - 2

மனதுக்கு மருந்து போடும் தொடர்!டாக்டர் அபிலாஷா, படம்: தே.தீட்ஷித்

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ், நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் பற்றி சென்ற இதழில் கூறினேன். பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ் வளர்ப்பது எப்படி என்று கொஞ்சம் பேசுவோமா..!

ஆல் இஸ் வெல்! - 2

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ் வளர்த்து, அதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால்... எட்ட முடியாத சாதனையையும் எட்டலாம் என்பதற்கு உதாரணம் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 'ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும்' என்பதுதான் செல்வியின் ஒரே ஆசை, கனவு, லட்சியம் எல்லாம். ஆனால், இதை நிறைவேற்றும் பாதையில் தடைக்கல்... அவளுடைய குடும்பம்தான். வறுமை, தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா, கேன்சர் நோயாளியான அம்மா, இரண்டு தம்பிகள்... இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ் லட்சியம் சாத்தியமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நிச்சயமாக!'' என்று சிரிக்கிறாள் செல்வி ஐ.ஏ.எஸ் என்கிற நேம்போர்டு மின்னும் வாசலில் நின்றபடி, இன்று!

இதற்குக் காரணம்? ஒவ்வொரு தருணத்திலும் நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படுவதற்கான சாத்தியத்தை விரட்டி, தனக்குள் அவள் வளர்த்தெடுத்த பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்! வறுமைக்கு வாக்கப்பட்ட செல்வி, 'நாமெல்லாம் டிகிரி படிக்கிறதே பெரிய விஷயம், 'ஐ.ஏ.எஸ்’-க்கு ஆசைப்படலாமா?’ என்று பலரையும் போல நினைத்திருக்கலாம். ஆனால், 'அறிவு மட்டுமே ஐ.ஏ.எஸ் ஆவதற்கான தகுதி, குடும்ப நிலை அல்ல' என்று தனக்குள் உறுதியேற்றிக்கொண்டாள்.

'எல்லோரும் ஆயிரக்கணக்கில் செலவழிச்சு கோச்சிங் போறாங்க. இந்தக் குடும்பத்தில் பிறந்த நாம அதுக்கெல்லாம் ஆசைப்படலாமா?’ என்று எல்லோரையும் போல புழுங்கியிருக்கலாம். ஆனால், 'அரசு வழங்கும் இலவச கோச்சிங்கைப் பயன்படுத்தி, வென்றவர்கள் பட்டியலில் நானும் இடம்பெறுவேன்' என்று இலக்கு வைத்தாள்.

'வீட்டு வேலை, அம்மாவுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொடுப்பது, தம்பிகளைக் கவனித்துக்கொள்வது என படிப்பதற்கான நேரம்கூட நமக்கு இல்லையே..?’ என்று 'ஓ’வென சிலர் போல அழுதிருக்கலாம். ஆனால், அனைவரும் உறங்கும் தொந்தரவில்லாத இரவுப் பொழுதுகளில், புத்தகங்களோடு வாழ்ந்தாள்.

'கஞ்சிக்கே வழியில்லையாம்... கலெக்டர் கனவு எதுக்கு?’ என்கிற சுற்றத்தின் 'அறிவுரை’, அவள் தன்மானத்தை கதற வைத்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் காதிலேயே வாங்காமல், 'நாளை நான் ஐ.ஏ.எஸ் ஆனபின் இவர்கள் எல்லாம் எந்த முகத்தோடு என்னிடம் வந்து நிற்பார்கள்?!’ என்று நம்பிக்கை பொங்க வியந்துகொண்டாள்.

இடிக்கு மேல் இடியாக, அம்மாவைப் போலவே செல்விக்கும் கேன்சர். ஒரு பெண்ணை உடைந்துபோகச் செய்ய, இதைவிடக் கொடுமையான வியூகங்களை வகுக்க முடியுமா தெரியவில்லை... விதியால். ஆனால், 'ஆரம்ப கட்டம்தானே... ட்ரீட்மென்ட் இருக்கு. சீக்கிரம் முடிச்சுட்டு, பிரிலிமினரி எக்ஸாம் எழுதணும்’ என்று தைரியமாக சிகிச்சையை எதிர்கொண்ட செல்வி, முழுமையாக கேன்சரில் இருந்து மீண்டாள். இதற்கிடையில் அம்மா இறந்துவிட, குடும்பத்தைத் தாயாகித் தாங்கிக்கொண்டே, லட்சியத்தை நோக்கி வேகமாக நடைபோட்டாள்.

ஆல் இஸ் வெல்! - 2

சமீபத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வை வெற்றிகரமாக கிளியர் செய் திருக்கும் செல்விக்கு, கண்களில் துளி நீரோடு வாழ்த்துக் கூறி னேன்.

தன் பாதை முழுக்க, நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் எதிர்மறை மனஅழுத்தத்துக்குப் பலியாகும் வாய்ப்புகள் இருந்தும், அவள் பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை மட்டுமே ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுத்தாள்... இலக்கை அடைந்தாள்!

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸும் உங்களைத் தூங்கவிடாமல் செய்யலாம், எப்போதும் உங்கள் மூளையையும் மனதையும் அரித்துக்கொண்டிருக்கலாம், 'இது முடியணுமே’, 'இந்த இலக்கை எட்டணுமே’ என்கிற தவிப்பை உங்களுக்கு இடைவிடாது தந்துகொண்டே இருக்கலாம், கேளிக்கைகளில் முழுமனதாக ஈடுபடவிடாமல் தடுக்கலாம். ஆனால், இதன் விளைவு நன்மையில்தான் முடியும். நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஒருபோதும் நெருங்கவிடாமல் தடுக்கும் என்பது, இதன் இன்னொரு பலம்.

'கமிட்மென்ட்கள் கழுத்தை நெரிக்குதுடா சாமி’ என்ற விழி பிதுங்கலும் இல்லாமல், 'கமிட் மென்ட்களே இல்லப்பா!’ என்ற கட்டவிழ்த்த நிலையும் இல்லா மல், 'ஒரு கமிட்மென்ட் இருக்கு. அதை எப்படியாவது முடிச்சுட ணும், முடிப்பேன்!’ என்ற நம்பிக் கையுடன் அதற்கான முரட்டுப் பாதையில் விருப்பத்துடன் கடப் பதே... பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்! சுருக்கமாகச் சொன்னால்... இஷ்டப்பட்டுக் கஷ்டப்படுவது!

சரி, சொல்லுங்கள்... உங்களின் தற்போதைய கமிட்மென்ட் என்ன?

- ரிலாக்ஸ்...

ஓவர் ஸ்ட்ரெஸ்... உடம்புக்கு ஆகாது!

'நீல்சன்' (Nielsen) அமைப்பு 2011-ம் ஆண்டு இந்தியா, மெக்ஸிகோ, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 21 உலக நாடுகளில் 6,500 பெண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவுக்குத்தான் (87%) முதலிடம்.

மெல்பர்ன் பல்கலைக்கழகம் உலகளவில் மேற்கொண்ட ஆய்வில், வேலை சார்ந்த ஸ்ட்ரெஸ் காரணமாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் சொல்லும் விவரங்கள்...

1. பெண்களின் ஸ்ட்ரெஸ் அதிகமாக ஆக... பியூட்டி மற்றும் ஹெல்த் காரணங்களுக்காக 75% அளவுக்கு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்கிறார்கள்.

2. 99% சதவிகிதம் பெண்கள் ஆடை விஷயத்தில் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து தங்களது ஸ்ட்ரெஸ் போக்க நினைக்கிறார்கள்.

3. தொடர் ஸ்ட்ரெஸ் காரணமாக பெண்களின் மூளை சென்ஸிட்டிவாக மாறி, சில ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால், அவர்களுக்கு ஸ்ட்ரெஸ் சார்ந்த டிஸ்ஆர்டர் பிரச்னைகள் வரக்கூடும்!

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ் வளர்க்க ஒரு பயிற்சி...

ஆல் இஸ் வெல்! - 2

'ஒரு சொந்த வீடு வாங்கக்கூட வக்கில்ல...’ என்கிற குமுறாதீர்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

'1200 சதுர அடியில இல்லைனாலும், 800 சதுர அடியில் வீடு பார்க்கலாமே... லோன் போடலாமே!’ போன்ற கணக்கீடுகளால் மூளையைக் கசக்குங்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

 'இப்படி மக்கு பிள்ளைங்கள இவ்வளவு ஃபீஸ் கட்டி படிக்க வெச்சு...’ என்று குழந்தைகளிடம் வெடிக்காதீர்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

 'ஃபெயில் மார்க்கில் இருந்து முதலில் ஆவரேஜ் மார்க்குக்கு கொண்டு வரணும். படங்கள், கதைகள்னு படிக்கிற முறையைக் கொஞ்சம் மாத்தி சொல்லிக் கொடுப்போம்’ என்று தேடல்கள், முயற்சிகளில் நேரத்தைச் செலவழியுங்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

 'இந்த நோய்க்கு வைத்தியம் பார்த்தே சொத்து காலியாகிடும்’ என்று சோர்ந்து போகாதீர்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

'உடற்பயிற்சி, யோகா, பிரணாயாமம், உணவுமுறை மூலமா இயற்கையாகவே நோயை கட்டுக்குள்ள கொண்டு வருவேன்’ என்று சபதம் எடுங்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

'ஆபீஸ், வீடுனு மாடா உழைக்கிறேன்...’ என்ற இரட்டை பணிச்சுமை குமுறல் கஷ்டம்தான். ஆனால், அதையே எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்.

ஆல் இஸ் வெல்! - 2

 'கொஞ்சம் பிளான் பண்ணினா, இதை சுலபமா எதிர்கொள்ள முடியும்..!’ என்று நம்புங்கள்.